20. பாமாலிகை (தாய்நிலம். – 55.

ஓளி!

மின் காந்தக் கதிர் வீச்சுகள்
தென், வட துருவ ஒளியெனவும்
என் கண்ணிற்குப் புலனாகும் ஒளி
நன் வேகமுடை வீரிய இயக்கம்!

நேசம் உடைய வாசமிகு ஒரு
தேசம் எமக்கில்லை என்று இன்று
பாசமாய் ஒளி ஏந்தல் இன்று
கூசும் நிலை இது மாறட்டும்.

வளி என்று பரவட்டும் ஞானம்
ஒளி பரவ மடைமை அழியும்.
களி பவளமாய் மிளிர்தல் ஆகும்.
ஓளி ஏற்றுவோம் இருள் அகலட்டும்!

அடர் இருள் தேசம் ஒளியாகட்டும்!
படரும் ஒளி அமைதி தரட்டும்!
தொடரும் தடைகள் எளிதாய் விலகட்டும்!
இடரற்ற அரசியல் மலர்ந்து செழிப்பாகட்டும்.

27-11-2018

51. Photo poem –

காட்டின் நகர்வு

தொடர்கோயில் மணிபோன்ற
அடர்வனப் பாடல் கேட்டாயா
பாடுபடாமலே செழிக்கும் காடல்லவா!
பீடுடைப் பெருமை வனம் தருமே!
மூங்கில் சுரத்தட்டு, மலர்வாசம்
இலைத்தாளம், குருவியிசை
அருகி அணைப்பது அறிவாயா!
சுள்ளிகள் முறியும் ஒலி
சூரியக்கதிர் சில்லறைகள்,
பாசி மரம், ஈரமண் வாசம்
நுரையீரல் நிறைக்கும் போதும்
ஆதிவனம் ஆனந்தசாகரமே!
சர சரக்கும் சருகுகள் பூமி
மடியின் நைந்த சேலைகளே!
நடிப்பற்ற இயற்கை இன்பங்களிவை
நகரமயமாக்கலில் காடுகள் நகர்த்தப் படுகிறதே

25-11-19

50. Photo poem – வஞ்சக மெத்தை

வஞ்சக மெத்தை

உறக்கம் சுமக்காத இரவும் தனிமையும்,
இறக்கச் செய்கிறது அன்பை, பாசத்தை
நிறைந்த நேசப் படகு சூறாவளியில்
மறக்கப் பண்ணும் ஆதரவு நிறங்களை.
அறையும் வனாந்தரத்தில் வெப்ப நேசப்பூக்கள்

பெருமைகள் சிறுமைச் செயல்களால் அழிவதால்
கருமை சுயமாக நஞ்சாக மெழுகுகிறது
திருமிகு பவளப்படுகை வாழ்வு மறைந்து
அருமை ஓளியுலகு இருளாகும் பிரமை
விருப்பில்லாப் பரிதாப வாழ்வு விசமத்தினால்.

10-10-2019

49. Photo poem – புதையல் தேடல்…

புதையல் தேடல்…

புதையல் தேடுவதாகவே மொழி
விதையலின் முயற்சி எனலாம்
புதையிருளில் நல்முத்து தேடுதலாக
வதைதலும் இன்பமாய் உண்டு.
ஆழ்ந்த கருத்துடை தமிழுலக
ஆழியின் அலையில் ஆடுதல்
ஆனந்த பரவசம் பேரின்ப நிறைவு.
ஆற்றலும் ஓயாத அலை தான்

21-9-2019

48. Photo poem – இன்பக் குளிப்பு

இன்பக் குளிப்பு

நிம்மதிப் பூக்களின் வாசத்தில்
நிலையூன்றிய மலர்த்தோட்டம் மனம்.
நிசமாக இறைவனீந்த விதியிவை
வசமாகத் தோள்களில் சாய்ந்தபடி
கசங்காத பிரியத்தில் வானில் நீந்தும்
கனிந்த இன்பம் ஆழ்ந்த கிரியாவூக்கி

கரையொதுங்கும் கடல் நுரைகளாக அழகுக்
கரையில் புதைகிறது தினமும் புன்னகையாக
கதவு திறந்த அலைகள் மறுபடி நுரையாகி
கனிரச வாழ்வின் இன்பங்களும் நுரையின்
களங்கமற்ற வனப்பாக மனதைத் தெப்பமாக்குகிறது.
குளிக்கும் மனதைத் தென்றல் வருடுகிறது.

1-10-2019

19. பாமாலிகை (தாய்நிலம்.) – 54. புன்னகைக்க மறந்து பூந்தளிர்கள்.

Mother With Children In Park

புன்னகைக்க மறந்து பூந்தளிர்கள்.

இயற்கை வாழ்வை அனுபவிக்க ஈழத்தில்
இசைந்த சூழ்நிவை அணுகாத வேளையில்
கசந்த வாழ்நிலை காணும் பிள்ளைகள்
வசந்தமாய்ப் புன்னகைக்க மறந்த பூந்தளிர்கள்.

புதுவித மூளைச்சலவையால் காலத்தில்
புலம்பெயர் இளந்தளிர்களும்
புன்னகைக்க மறந்த பூந்தளிர்களாவாரோ!
மென்னகைத்து உலகை வெல்வாரோ!

13-10-2000
(இலண்டன் தமிழ் வானொலி புதன் கவிதை)

11. பாமாலிகை (எழுத்து – தொடர்) –

எழுத்து -11

சிந்திக்கும் என் சுதந்திரம் என்றும்
நந்தவன மலர்களில் தேனருந்த அலைந்து
சிந்து பாடும் தேனீயாக உலவும்!
மந்திரமாய் உயர்வாய் மலைத்திட எழுத
செந்தமிழ்ச் சதுரங்கம் ஆடும். சங்கொலி
முந்தி வரட்டும் என்  தமிழுக்கு
முந்திய மூன்று சங்கங்களின் இருப்பும்
தந்தது  இந்த எழுத்து தானே!

என் சொற்காலம் இப்படித்தான் நிலவட்டும்!
என் கவிச்சிறகுகள் இப்படித்தான் விரவட்டும்!
மீன்களாகக் கண்ணாடிக்குள் வண்ணமாக அல்ல
மீளாது ஓடிடும் ஆற்றின் மீன்களாய்
கீழாகவோடி அழியாது சரித்திரம் படைக்கட்டும்!
என் விரல்கள் எப்போதும் பேசட்டும்!
மென் அலங்கார வார்த்தை இரசனையிலல்ல
இன்னமுதத் தகவலோடு இனிமையாய்ப் பரவட்டும்!

நாலெழுத்துத் திறமையோடு சபை நடுவே
நீட்டோலை வாசிக்காதவனே மரமென்றார் ஒளவையார்
வல்லமையாய் எழுத்தில் மேன்மை தேடுதல்
வில்லேந்தும் வீரமாக அகலவியலாத அறிவாகும்.
மெல்லிய மலர் மஞ்சமாக மனதில்
தொல்காப்பியம் விரிக்கும் அகளங்கம் இன்றி
புல்லறிவு விரட்டி தமிழினிமை கொள்ளல்
அல்லிக் குளத்தருகே முல்லை மல்லிகையனுபவமாகும்.

https://www.vallamai.com/?p=93859

Print Friendly, PDF & Email

40. பா மாலிகை ( காதல்) – 107. கனா கண்டேனடி

10-6-2017.
கனா கண்டேனடி

கனா கண்டேனடி கவிதையில் வென்றேனடி
வினா ஏதுக்கடியினி விசும்பாதேயென்னைப் பார்!
கனா காணடி! தாலி தயாரடி
பொன்னுருக்கி வார்த்த வானம் பார்!
கண்மணியே என்னை மணப்பாயா சொல்!

5-11-2019

கரையின்றி எழுதுவோம் பல கவிதைகள்
கங்கையாய் ஓடட்டும், இலக்கியத் தமிழ்க்
கடலில் சேரட்டும் கலைவாணி அருளுடன்.
திடலில் வானம் தொடும் தூரமாகும்
கடலைத் தாண்டுதல் கடும் பிரயத்தனமே.

கோட்டை கொத்தளம், குடிசையிலும் எம்
பாட்டைப் பலரும் பேச வேண்டும்.
ஊட்டமிகு கருத்துடனே இறப்பில்லா வரிகளாய்
கூட்டி எழுத வேண்டும் நாம்
கேட்டாயா கண்மணியே என் ஆசைகளை

வேறு

ஆண்:- கண்களால் இசை மீட்டி
எண்களாய் நாட்கள் ஓட்டி
விண்ணிலே பறக்கும் கற்பனைகள்
எண்ணிலதாய் நான் காத்திருக்கிறேன்.;

ஆகா எந்தன் ராணி
போகா வனமே போவோம்
சாகாக் காதல் கொண்டு
சாம்ராச்சியம் ஒன்றமைப்போம்.

பெண் வாராய் கண்ணா வாராய்
தாராய் உந்தன் கரங்கள்.
நீராய் நெளிந்து ஓடி
நிலவுலகம் இணைந்து அளப்போம்

உலகோர் காணா விதத்தில்
உள்ள தேனை அருந்தி
ஆழக் காதலில் நீந்தி
ஆனந்தம் காண்பொம் நாமே

மாலைகள் மாற்றி இணைவோம்
சோலைகள் யாவும் அணைவோம்
பூவுலக சொர்க்கம் காண்போம்
பூரித்து நன்றி சொல்வோம்.

2016

18. பா மாலிகை (வாழ்த்துப்பா) – பத்தாண்டு நிறைவு.

பத்தாண்டு நிறைவு.

காய்த்த மரம் பிடுங்கியதாய்
தாய் மண்ணைப் பிரிற்தோம்.
தாய்க்கு நிகராம் கலாச்சாரமும்
தாய் மொழியையும் பிரிந்தோம்.

வழியொன்று கண்டோம் புலத்தில்.
மொழி விதையூன்றி
மொழியால் கலாச்சாரமும் பேணி
அழியாது காக்கிறோம் அனைத்தையும்.

கல்விக் கலைக்கூடம் மழலைகளின்
மாபெரும் பயணப் படலை.
மாணவர் அறிவு ஒழுக்கம்
மாண்புடை கலாச்சாரமும் பேணுகிறோம்.

பத்துக் கோடியினர் உலகில்
மொத்தமாய்த் தமிழைப் பேசுகிறார்.
ஒரு கோவிலுக்குப் பதிலாக
ஒரு கல்விக் கூடம் உயர்வு

வித்தகக் கல்வியூன்றி மழலைகளை
உத்தம மனிதராக்குகிறோம்.
சொத்தாக அறிவூட்டும் கலைக்கூடத்திற்கு
பத்து வருட ஆண்டுநிறைவு.

அறிவுக் கோயில் – இதற்கு
ஆதரவு தரும் எல்லோருக்கும்
மனமார்ந்த நன்றி கூறுகிறோம்.
மகிமையுடைய கலாச்சாரம் வளரட்டும்!

அறிவு வாழ்க! வளர்க!

12-11-2012.