17. பா மாலிகை ( கதம்பம்) 1. முத்தம் 2. யானை (512)

14102599_1767284730202968_5578216378610866429_n.jpg-2

*

 1. முத்தம்

2. யானை

*
 1 முத்தம்
(குடைந்தாடுதல் – அமிழ்ந்து நீராடுதல். குடை – அரசாட்சி)
*
குளிர் களிக் கும்பாபிடேகக்
குளிப்பாட்டல் அனுபவம் உண்டா!
குவளை மலர் ஒற்றடம்
குவிந்ததுண்டா என்றாவது உங்களிற்கு!
குவலயத்தில் மழலை முத்தத்தில்
குடைந்தாடுதல் அமிழ்தினும் இனிது.
குவித்துக் கொடுக்கிறாள் கமீலா.
குனிந்து குளிருகிறான் கபிரியேல்
*
குழைகிறாளொரு கரடி பொம்மைக்கு.
குழைசாந்தான முத்த மந்திரத்தால்
குளறுபடியல்ல, சரணடைந்திட்டான் கபிரியேல்.
குதிக்குமொரு பொம்மையவளிடம் மாலையில்.
குடை சாய்வார் தந்தைமார்
” மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் ”
குறுங் குறளடியில். பெறுமவற்றுள்
யாமறிவோமா மக்கட்பேறின் சிறப்பு!. 
*
 2 யானை
*
திகில் தரும் காட்சி!
திட்டமான நம்பிக்கையா இது!
திடுதிப்பென்று அசம்பாவிதம் நேராதா!
திக்பிரமை உண்டாகிறது ஐயகோ!
சங்கிலி போட்டாலுமென்ன ஒரு
சுயபாதுகாப்பு உணர்வு வேண்டாமா!
பாகனுக்குத் துயில ஏன்
வேறொரு இடமொதுக்க முடியாது!
*
கேரளாவில் பாகன் மரணமதிகமாம்!
பாகனுக்கிது காசு வேட்டை..
சூடான யானையின் சாணம்
மிதித்தால் காய்ச்சல் வராதாம்!
யானை முடி மோதிரமுமணிகிறோம்
செல்வம் பெருகுமென்று. தன்னியல்பில்
நடக்கும் யானைக்கு மதம்
பிடித்தால் மனிதனுக்குக் கிலி.
*
வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 21-8-16.
*
400_F_3567131_TyQmoFWmgvILrh0SZfuqUzWA5JzKDtJX -2

17. பா மாலிகை ( காதல்)தென்றல் தீண்டி புன்னகைக்காதோ பூக்கள்.(512)

 

14100293_1767801220151319_556402917979584125_n (1)

*

தென்றல் தீண்டி புன்னகைக்காதோ பூக்கள்.

*

தென்றல் தீண்டி என்னைச் சீண்டி
கன்றல் நினைவுகள் கழன்றிடத் தூண்டி
மன்றம் நெருங்குதே மகிழ்வு வேண்டி
அன்றிலாய் மனம் பறக்குதே ஏண்டி!

*

மன்னன் வருவான் மனது நிறைப்பான்
அன்னம் எனது ஆசைகள் தீர்ப்பான்.
இன்னும் அழகை வேண்டி நிற்பான்
சின்னது பெரிதாய் மாலைகள் தொடுப்பேன்.

*

எந்த மலரும் மனது மயக்கும்
இந்த மணமும் நன்மை பயக்கும்.
சிந்தும் இன்பம் பெருக வைக்கும்.
முந்தி அவனை நெருங்கச் செய்யும்.

*

மாங்கல்ய பாக்கியம் தந்த அம்மனுக்கு
மகிழ்ந்து தொடுக்கும் மாலை சாத்துவோம்.
கண்ணன் வந்து காலாறிய பின்
கடிதே நாமும் கோயில் செல்வோம்.

*

காத்திருந்த காதல் கனிந்தமைக்கு நன்றி.
கருத்தாய் இணைந்து கல்யாணம் காப்போம்.
இன்னலற்ற இனிய இணைகள் என்று
பூரித்துப் பெருமையாய் புன்னகைக்காதோ பூக்கள்!….

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-8-16.

*

 

1457745k8p286od3g

 

16. பா மாலிகை ( கதம்பம்) பருவம். (511)

 

imb39_thumb[2]

*

பருவம்.

*
இனிய பெண்களின் பருவங்கள் ஏழாம்.
ஐந்திலிருந்து எட்டு வரை பேதை.
ஒன்பதிலிருந்து பத்து வரை பெதும்பை.
பதினொன்றிலிருந்து பதின் நான்கு வரை மங்கை.
*
பாங்குடை மங்கைப் பருவம் கனவுகளுடன்
இங்கு கால்கள் கட்டி அமர்ந்துள்ளது.
பத்திலிருந்து பத்தொன்பது வயது வரை
புத்தெழிலுடை விடலைப் பருவம் இதோ
*
உடலுயரம், மாற்றங்கள், மார்பக வளர்ச்சி,
மாதவிடாய் சுழற்சி, தசைகள் மென்மையாகும்
கனிந்த மாற்றக் காலம் விடலைப் பருவமே
பதின்ம வயதும் இதே.
*
ஓன்பதிலிருந்து பத்தொன்பது வரை வளரிளம்
பருவமும் இதே. உடல் மாற்றக் குழப்பம்,
பிடிவாதம் நிறைந்தாலும் நீதி நெறி,
உயர் குறிக்கோள் பின் பற்றும் அகவை.
*
படிக்க, உழைக்க, வாழ்வாரம்பப் பருவங்கள்
குறித்த அறிவுரையே ஒளவையின்
” பருவத்தே பயிர் செய் ” பதின்ம பருவம்
பாதுகாக்க வேண்டியதே.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 23-8-2016.
*
enru
*
border- 4

15. பாமாலிகை( கதம்பம்) தலைவிதியும் மாறும்.(510)

 

nav38c

*

 

தலைவிதியும் மாறும்.

*

மனம் கிளறும் சொல்லாகத் தலைவிதி
கனமேறிக் களைக்கும் போது விதியிது
என விடை கண்டமைதி கொள்கிறோம்.
இனம் கண்டு பரிகாரம் தேடணும்.
இல்லை விதியை மாற்றலாம் என்பவன்
வினை நிறைத்துப் பாதை மாற்றுகிறான்.
படித்து உயரும் நினைப்புச் செயலாகி
வெடித்து விதி மாற்றும் திறனடைகிறது.

*

ஓர் இனிய காதல் புன்னகை
சீர் வெற்றியெழுதித் தன் காலடி
சோர்க்கும் ஓர் இனிய நந்தவனத்தில்
போர்த்தும் சுகந்தமும் விதி மாற்றும்.
தலைவிதி மொழிந்து கலையுணர்வை அடைக்காது
வலையுடையுங்கள் மூட நினைவகற்றி விழியுங்கள்.
இருட்டில் நீச்சலடிக்காது மின்சாரம் ஏற்றுங்கள்.
மருட்டும் எண்ணத்தை அகௌரவப் படுத்துங்கள்.

*

நிலை விதியலை நல்லதானால் உள்ளே
தலைவிதியெனும் குப்பை கொட்டுதல் அவலம்.
உயர்வு மேலும் உயரவே உன்னும்
உதவாத தலைவிதி கூறி உறங்கலேன்!
விளக்கினுள் விட்டில் பூச்சியாகாமல் மனிதன்
அளக்க வேண்டும் உலகை அது
பளபளக்கும் அவன் சாதனைப் புகழாகட்டும்.
மளமளவென அவனேறிட தலைவிதி கவிழும்.

*

வெற்றிக்கு மரணமில்லை வெற்றியின் பிரசவம்
சுற்றியுள்ளது எமது கையில். இதை
முற்றாகப் பலர் மறக்கிறார் பின்
சாற்றுகிறார் விதியென்று அதில் சாய்கிறார்.
துன்ப சுவடழித்து மலரும் மொட்டுக்கள்
துணை கொண்டு இன்பக் காட்சியைத்
துணிவுடன் உருவாக்கி ஊக்க நிலை
துல்லியமாய் எழுப்பி தலைவிதி சோகமழிக்கலாம்.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 21-8-16
*

 

sunflow

4. பா மாலிகை ( காதல்)காதலனின் கண்ணீர் (7 1)

 

 

tear

*

காதலனின் கண்ணீர்

*

காதலன் கண்ணீர் கரைபுரண்டோட
தாடியோடு போத்தல் கையிலாட
காதலை வெறுத்து அவனோட
காப்பிட வேண்டும் இந்நிலையோட.

*

கல்வி கையகப் படவில்லை
கருமமாற்ற காசு வசப்படவில்லை
கடவுளான பெற்றோர் தடமாகியும்
கடமைகளோடு வாழ்வு தொடருகிறோம்.

*

காதலனின் கண்ணீர் உலகில்
கார்வையாக காவியப் படகில்.
காதல் காயம் கடக்கில்
காரிய சாதனை சாதிக்கலாம்.

*

காதலன் கண்ணீர் காலத்திற்கும்
காதோரம் வடியும் கங்கையாம்.
காளையவன் முதுமையிலும் கலக்கம்
காஞ்சிரமாய் கசக்கும் கசக்கும்!

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-6-2016

*

drops

4. பாமாலிகை (இயற்கை) மலரே..மலரே .82)

 

13932752_517995491742600_2183009757481981338_n

*

மலரே…………………..மலரே

*

1.
மலரே! மணத்தாலுன், நிறங்களால் மகிழாதார்
உலகில் ஏது மன்மத எழிலே!
மௌனம் சுகமென சாமரம் வீசுகிறாய்.

மல்லிகையில் மன்மத பாணம், தாமரையில்
தெய்வீகம், ரோசாவில் இராச சுகந்தமென
சொல்லி வைத்தது யார் மலரே!

2.
மலரே நீயொரு விலைமகள் தானே!
வலம் வரும் வண்டிற்குத் தேனீந்து
விலக்காது மயக்குவாய்! நீரின்றி வாடுவாய்.

மகரந்தச் சேர்க்கைக்கு மனமுவந்து உதவும்
சிகரமான மாபெரும் சேவகி நீ!
மனிதரை, மாயவனை மயக்கும் மலரே!

*

6-7-2017  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

(வேதாவின் வலை – கோவைக்கவியில்
– பாமாலிகை இயற்கை தலைப்பில்
30வது பூவும் வண்டும்.
74வது பூக்கடை தலைப்பிலுட் கவிதைகள் உண்டு.)

*

 

9gwqyfjpg3

3. பாமாலிகை (இயற்கை). கோடை மழை.(81)

summer rain

கோடை மழை.

*

கோடை மழை பாலைவனச் சோலை.
குளிர்கழி (ஐஸ்) சுவைக்கும் உணர்வு நிலை.
பிரிந்த காதலர் சேரும் நிலை
பட்டினியாளனுக்கு எச்சிலிலையும் கோடை மழை.

*

தாயைப் பிரிந்த மழலைக்கு வரவாம்
தாயின் அணைப்பு கோடை மழையாம்.
விளைந்த வயலிற்குச் சொரியும் குளிர்மைக் 
கோடை மழை கொடுமையிலும் கொடுமை.

*

வெப்பத்தில் பொழியும் மழை நோய்களை
செப்பமாய் காவி வரும் தொல்லை.
குளங்களின் நீர் மட்டம் உயரும்.
வளங்கள் பெருக நல் வாய்ப்பாகும்

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.   15-5-2016

*

rain..rain..

4. கண்ணதாசன் சான்றிதழ்(21) ஏக்கம்.

 

eaKKam...

*

கவிஞர் கண்ணதாசன் சிறப்பு சான்றிதழ்  (கண்ணதாசன்- வெண்கலம்.)
🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊

ஏக்கம்.

*

ஏக்கம் பெரும் மனத் தாக்கம்.
ஊக்கம் அழித்துத் தூக்கம் கெடுக்கும்.
பூக்கும் நல்லுணர்வுகள் தாக்கிச் சிதைக்கும்.
ஆக்கபூர்வச் செயல்களை நீக்கும் உணர்வு.

*

ஏழ்மை பிரதிபலிக்கும் சிறுவன் படம்
ஆழ்ந்த ஏக்கம் அப்பிய முகம்.
வீழ்ந்திடாது கையொன்று தாங்கினால் இவன்
வாழ்ந்திடும் நிலையின் சோகம் தொலையும்.

*

கருவில் ஒரு குழந்தைச் செல்வம்
உருவாகாத ஏக்கம் தம்பதிகள் வாழ்வில்
பெரும் தாக்கம், சில சாதனைகளும்
தருவிக்கும் நோக்கம் கொண்டும் மாற்றும்.

*

‘பருவம்’ எழுதி ஒரு (வெண்கலச்) சான்றிதழ்
துருவமாகிப் போன ஏக்கத்தின் தாக்கம்
சருகாகி மறையலாம் திருவாக உயரலாம்
பெருமை அறுபத்தொன்பதிலும் எழுதுவதெனக்கு.

*

உங்கள் அறுபத்தொன்பதில் என்ன செய்கிறீர்களென்று
பார்க்க மந்திரத் தூர நோக்கி
ஒன்று வேண்டுமென்பது என் ஏக்கம்!
ஓராயிரம் ஏக்கங்கள் எழுத இடமில்லையே!

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 23-8-16

*

 

🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎊💐🎉

1. குட்டி வரிகள்

 

9 August 2011 at 16:59 ·

அருகிலிருப்பவனுக்குக் கை கொடுத்து உதவுவதிலும் பார்க்க,

தெருவில் போகிறனுக்கு உதவி செய்து புகழோடு

பாரி வள்ளலாவதிலே தான் மனிதக் கவனம் செல்கிறது.

paati

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&  

13 August 2010 at 20:50 ·

பாலுக்குள் சுவையாய்
பசியிலே உணவாய்
தாகத்தில் நீராய்
சோகத்தை வெல்லும்
சாகசம் காதல்.

I Love You Gif 48

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§ 

17 August 2010 at 09:32 · 

வாசிப்பு வாசம் இதமானது.
பலரை அது ஆனந்தவாசியாக்ககிறது.
எவ்வளவு வாசியான நிலைமை அது!

read

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

14. தாமரை இலைத் தண்ணீர். (509)

 

water on lotus

*

தாமரை இலைத் தண்ணீர்.

*

தருமம், நீதிநெறி, நியமங்கள் நெஞ்சில்
கருத்தாயிருத்திச் செயற்படாத புதிய சமுதாயம்
ஒரு தாமரை இலைத் தண்ணீராக
அருமை விதிகளிலிருந்து வழுக்குதல் தவறு.

*

ஆசாபாசங்களிற்கு இடமற்ற மனமாகக் கோபம்
பூசாத இதயமாக அழுக்குகள் முற்றும்
ஊசாடாத தாமரை இலையாய் ஓட்டாதிருந்தால்
வீசாது வாழ்வில் பிரச்சனைக் காற்று.

*

கிட்டுமா வெற்றி தோல்வியெனும் எண்ணத்தை
நீரொட்டாத தாமரையிலைத் தண்ணீராக விலக
விட்டு, கற்ற தமிழை முன்னேற்றல்
திட்டமான சிந்தனையாக்கி எழுதுதல் உச்சம்.

*

ஏசி முரண்படும் தம்பதிகள் காதலை
வாசியாக எடுத்து, கடுப்பு, பிணக்குகளை
தூசியாகத் தாமரையிலைத் தண்ணீராக உருட்டினால்
ஆசியுடை இல்லறம் சுவர்க்க பூங்காவாகும்.

*

எண்ணெய்யில் தண்ணீர் போன்றதே தாமரையிலைத்
தண்ணீரும், ஒன்றோடு ஒன்று ஒட்டாதது.
தன்னைத் தாங்கும் தண்ணீரை இலையில்
தங்க விடாத தாமரையுயிர் தண்ணீரிலே.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 27-5-2017.

*

lotous5