11. பேட்டி – நேர்முகம் – விழா

2022 வாழ்க தமிழ் – கலை மாலை விழாவில் எனது சிறு உரையும் கவிதையும்

சுந்தரக் கனக நிலா!

அது என்ன ?.சுந்தரக் கனக நிலா! …சு.ந்தரம் – அழகு. கனகம் பொன்
அழகிய தங்க நிலா இப்படி – தமிழ் சொல்லை –வார்த்தையைக் குறிப்பிடுகிறேன்.
அன்பே அமுதே அருங்கனியே ஆனந்தத்தேனே என்ற இவைகளைக் கேட்கும் போது இனிமையாக உள்ளதல்லவா!
கொஞ்சுமொழிப் பெண்களுக்கு அஞ்சா நெஞ்சம் வேணுமடி !
இதுவும் இனிமையல்லவா! இதனால் தான் சுந்தரக்; கனக நிலா என்று தமிழ் சொற்களைக் கூறுகிறேன். இதற்குப் பின்னாலே வருகிறேன். இப்போது தமிழ் சொற் பிறப்பு என்பது பற்றிப் பார்ப்போம்.

சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும்இ தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிளஇ தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள்இ மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாகஇ ‘தமிழ் – தமிள – த்ரமிள – த்ரமிட – த்ரவிட ஆகியது என்பர். சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி ‘தனது மொழி’ என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது ‘தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி’ என்ற பொருள் தரவல்லது என்கிறார். ——தகவல்ஃஃஃஇணையம் —–

சுந்தரக் கனகநிலா – (தமிழ் வார்த்தைகள்.)

தொடர்பு இணைப்பை மனிதருள்
படர வைக்கும் வளையம்.
இடர்கள் தீர்த்து இன்பம்
படர்த்தும் வார்த்தைகள் பூக்கள்.
ஓர் எழுத்தாயும் இணை
சேர்த்துக் குழு நிலையாலும்
வார்த்தைகளில் அர்த்தம் உயிர்க்கும்.
வார்த்தைகள் கடல் – மகா கடல்.

நேர்த்தியான வார்த்தைகள் கூட்டுச்
சேர்த்தால் இன்ப மொழிச்
சொர்க்கம் அருகிலே – இங்கேயே.
உதடுகள் பேசும் வார்த்தைகளை
உயிரான கண்களும் பேசும்.
தீர்க்கமான ஆசையில் பாசமாய்
போர்த்திய நேசக் கனகநிலா
வார்த்தைகள் உயிரை ஈர்க்கும்.

சிந்தனை வெள்ளத்தால் படியும்
சுந்தர வண்டல்கள் வார்த்தைகள்.
மந்திரமாய் சீவராசிகளை வசமாக்கும்.
தந்திரமாக பந்தென பொய்களும்
யந்திர வார்த்தைகளும் உருளும்.
தூசி பாசியுடை வார்த்தைகளால்
ஊசியாய்ச் சொருகும் வார்த்தைகளால்
கூசி ஒதுங்குவோர் நல்லோர்.

உணர்வுகளின் தாலாட்டில் அசைந்து
உதிக்கும் முத்துகள் வார்த்தைகளானால்
பேசிடும் வார்த்தையின் ஒலியும்
உயிரை வருடும் இனிமையினால்.
வார்த்தை ஒலி இனிமையில்
கீர்த்தியும் நெருங்கும் அருகில்.
வார்த்தைகள் வனப்புக் குடையாக
நேர்த்தியான பிரசவமொரு இன்பத்தொல்லை.

2009