100. பா மாலிகை ( கதம்பம்)592. பண்பாடும் கலாச்சாரமும்

தமிழ் சேவை – காவியக் களஞ்சியம் – 64. கவிதைத் தலைப்பு
பண்பாடும் கலாச்சாரமும்

00

சொற் பொருள் விளக்கம் –
அண்ணித்த –பொருந்துதல்
வண்ணம் – வளப்பம் மாட்சிமை
மண்பாடு – பூமியிள் இயல்பு மொழி
மேட்டிமை – மேன்மை பதம் -சொல்
ஒண்மை – ஒழுங்கு.

00


பண்பாடு பழந்தமிழ் பதமாம் – கலாச்சாரம்
அண்ணித்த அருத்தமான வடமொழி (சமசுக்கிருத) வண்ணம்.
மண்பாடு இயற்கை மகத்துவப் பள்ளியால்
எண்ணம் நடவடிக்கையால் எருவான பழக்கவழக்கம்
பண்பட்டுக் கற்றறிந்த பயில்வோரின் இணைப்பு
தொன்றுதொட்டுச் சீராக்கித் தொட்டவுயர் நற்தன்மை – பண்பாடாம்.
00
ஒண்மை ஒற்றுமை ஒருங்கிணைந்த கூட்டணி
மண்சார்ந்த கலப்பாக மேட்டிமை நிலைப்பாடு
உண்மையறிவு பஞ்சபூத உறவுக் கட்டமைப்பு
தூண்டும் இலக்கியமும் தொழில்சார் தெரிவுகளும்
உண்டி சமயம் உன்னத நடனமிசை
கொண்ட வீரம் கலைவழியாலுமான தனிப்பெருமை
00
அன்றைய பாரம்பரியம் அழியாதின்றும் நிலையுற்றது.
நன்றான மொழியான நல்விதையூன்றல் சிகரமேற்றும்.
என்றும் விழாக்களை ஏற்றி நடைமுறையாக்கல்
சின்னஞ்சிறார்களை அவ்வழி சீராய் நடத்துதல்
திருக்குறள் ஓளவை தருமநெறிப் பாதையிலிணைத்தல்
பண்பாடு; காக்கும் பாரம்பரியப் பொற்பாதை
00
மேற்கத்தியப் பண்பாட்டு மயக்கத்தில் சுயமிழத்தல்
ஏற்பென ஆடை உணவு மொழி
மாற்றியெம் மூத்தகுடி முத்திரையை அழித்தல்
தமிழையொதுக்கித் தரமெனப் பிறமொழிப் பரம்பலும்
ஒருவனுக்கு ஒருத்தியாய் ஒழுக்கத்தால் வழுவாமலும்
சமூகக் கட்டமைப்பை மதித்தல் வெகு பிரதானம்.
00
ஆலய வழிபாடு ஒன்றிணைந்த துதிப்பாடல்
இமாலயம் எட்டும் பண்பாட்டுப் பூசனை
கல்வியாலய நற்போதனையும் கருவானதாயகப் பிணைப்பும்
வரலாற்றுச் சுவடுகள் வகையாய் ஆவணப்படுத்தலும்
தமிழர் பண்பாட்டைத் துளிர்த்து மலர்விக்கும்
தமிழர் பணபாட்டுத் தூய்மைகளைப் பேணுங்கள்.
00
விருந்தோம்பல் – தீதும் நன்றும் பிறர்
தர வாரா – யாதும் ஊரே
யாவரும் கேளீர் – எம்பண்பாட்டுக் காலடிகள்.
கற்கோயில் கட்டிடக்கலைகள கனத்த அடையாளங்கள்.
அற்புத ஆதிக்குடியின் அருமைகளைப் போற்றுவோம்.
தொன்மை மட்டுமல்ல தொடர்ச்சியிலும் கட்டமைவோம்.
00
வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 6-5-2022

——————————–

Admin

Vetha Langathilakam சொற் பொருள் விளக்கம் – எல்லாம் தேவையில்லை என கருதுகிறேன்.

நீங்கள் சொற் பொருள் விளக்கம் எல்லாம் கொடுக்க வேண்டும் என்றில்லை.

கவிதையை மட்டுமே எழுதினால் போதுமானது,

ஒண்மை ஒற்றுமை ஒருங்கிணைந்த கூட்டணி – இங்கே கூட்டணி என்று எதை சொல்கிறீர்கள்…?

ருக்குறள் ஓளவை தருமநெறிப் பாதையிலிணைத்தல்

பண்பாடு; காக்கும் பாரம்பரியப் பொற்பாதை- சிறப்பு கவிஞரே..

அருமை – ஒப்புக்கொள்கிறேன் நான்.,

மேற்கத்தியப் பண்பாட்டு மயக்கத்தில் சுயமிழத்தல்

ஏற்பென ஆடை உணவு மொழி //

மாற்றியெம் மூத்தகுடி முத்திரையை அழித்தல்

தமிழையொதுக்கித் தரமெனப் பிறமொழிப் பரம்பலும்

ஒருவனுக்கு ஒருத்தியாய் ஒழுக்கத்தால் வழுவாமலும்

சமூகக் கட்டமைப்பை மதித்தல் வெகு பிரதானம்.

– இன்றைய காலகட்டத்தில் அவசியத் தேவை இது.

பிரார்த்தனை

ஆராதனை – சமஸ்கிருதம் கவனிக்க.

வரலாற்றுச் சுவடுகள் வகையாய் ஆவணப்படுத்தலும்

தமிழர் பண்பாட்டைத் துளிர்த்து மலர்விக்கும்

தமிழர் பணபாட்டுத் தூய்மைகளைப் பேணுங்கள். – நிச்சயமாய் வேண்டும்.

வழி மொழிகிறேன் கவிஞரே…

அற்புத ஆதிக்குடியின் அருமைகளைப் போற்றுவோம்.

தொன்மை மட்டுமல்ல தொடர்ச்சியிலும் கட்டமைவோம் – அருமையான கூற்று… வழி மொழிகிறேன் கவிஞரே.

Vetha Langathilakam

செல்வா ஆறுமுகம் பண்பாட்டைத் தான கூட்டணி என்கிறேன். ஒற்றுமை. ஒண்மையுடையது ——— பிரார்த்தனை – துதிப்பாடல்

ஆராதனை – பூசனை

வடமொழி – சமசுகிருதம்… ஒற்றுமை. ஒண்மையுடையது ——— பிரார்த்தனை – துதிப்பாடல்

ஆராதனை – பூசனை

வடமொழி – சமசுகிருதம்

இந்த மூன்றையும் இப்படித் திருத்தலாமா? மிக்க நன்றி

9-4-2022

மிக்க நன்றி மகிழ்ச்சி .  அனை வருக்கும் 

வாழ்த்துகள்     (கவிஞர்கள் குழுவினருக்கு)

  • 12-5-2022

.அதியமான்

இனிய    வாழ்த்துகள்    கவியே….

12-5-2022

99. பா மாலிகை ( கதம்பம்)591. மரகதவிழா

மரகதவிழா 21-7-2022

பொன்விழா ஐம்பது ஆகி
இன்று மரகதவிழாவும் ஆகியது
எமரல்ட் ஆங்கிலம் பச்சை
என்ற பொருளான மரகதமாகிறது
மரகதம் அணிவதால் மனோபலமும்
உரமாகத் திட்டமிட்டு வினையாற்றும்
தரமான நினைவாற்றலும் மேன்மையாகும்.
மரகதம் நவரத்தினங்களில் தனிப்பட்டது.
மரகதம் வரை வாழவைத்ததற்குச்
சிரமேற் கரங்களுடன் நன்றி.
தரமுடை வாழ்விற்கு வெகுநன்றி.
பரம்பொருளே! நிறையாரோக்கியம் நல்குவாய்.!
மனமெல்லாம் நிறை திருப்தி
அனலாடியை மறக்காத மனம்
அனயமற்ற ( தீவினையற்ற) வாழ்வையருள்!
அனவரதமும் இறையைத் தொழுவேன்

வேதா.இலங்காதிலகம் -தென்மார்க்

30. பாமாலிகை – (தமிழ்மொழி)77. தனக்குள்ளான பயணம் கவிதை – பாகம் இரண்டு

தனக்குள்ளான பயணம் கவிதை – பாகம் இரண்டு
00


விரிபுவி உலகில் விரல்கள்
விசிறும் வித்தகமாம் எண்ண
விதைகள் வியனுலகில் மொழிபெயர்த்து
விரிந்து மலையெனவே நிலைத்திருக்க
விருட்சமாயூன்றுவான் மாநிலத்தில் மதியூகி
புருவ விரிப்பு ஆச்சரியமாய்
கருத்தை ஊன்றிக் கவனிப்பதால்
பெரு வெளிச்சப் பக்கம் அமிழாது.
00
உறகுதலற்ற ( உறங்குதல்) தமிழ் போதும்
உமிழாதபடி உள்ளொளிரும் சக்தியாகும்
இறகுகள் தேவையில்லைப் பறக்க.
ஆற்றலும் முயற்சியும் அவரவர்
தோற்றுவாய். கரம் பிடித்துச்
சாற்றுதல் நீள்வது சிரமம்.
நூற்புலமையின் செயற்றிறன் தேவை.
ஆற்றலே முயற்சியின் தோற்றுவாய்.
00
தன்னைத் தானே உணர்ந்து அறிதலால்
மண்மீது தீரமாய் நடமாடலாம்
விண்வரை உயர்ந்தாலும் எம்
கண்கள் கீழே குனிந்தாலும்
உண்மையாய்த் தலை நிமிர்ந்து
எண்ணம் போல் வாழலாம்.
தன்னையறிதல் தன்னால் முடியும்
என்றவன் துணிந்து மின்னுவான்

00
வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 12-7-2022

6.  நான் பெற்ற பட்டங்கள்

கவிதைக் கலைமாமணி விருது.

கவிதைக் கலைமாமணி விருது.
குழுமத்திற்கு மிக்க நன்றிகள்.
00


நினைக்காத நாளில்லையே
00
கருவறை தொடங்கிக் கல்வறை யீறாக
சில்லறை இன்றிச் சிறக்கும் தூயது
நல்லறமாயிது வாய்த்திட்டால் நனி சிறந்த
பல்லறமுடைய தமிழ் பசுந்தான பரிமாணமாகும்.
00
தமிழ் மழையில் அமிழ்ந்த சிந்தனைகள்
குமிழ்ந்து ஈரமாகிக் குடை விரித்து
சிமிழாகும் மனம் நினைக்காத நாளில்லை.
துமிலம் புகழ் சிகரமெட்டத் துணையாகும்
00
துயரங்கள் பறக்கும் தமிழை இணைத்தால்
துஞ்சுதல் இல்லாத் துடிப்பு ஏற்றும்
அஞ்சாமை அழிக்கும் தேனிலூறிய செந்தமிழ்.
விஞ்சட்டும் புலமைத் தமிழ் வானோங்க!
00


( துமிலம் – பேராரவாரம்) _
வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் – 25-6-2022

29. பாமாலிகை – (தமிழ்மொழி) 76

தனக்குள்ளான பயணம் கவிதை.

எழுதுகோல் எனும் கருவியால்
உழும் தமிழ் இரசனையாம்
உணர்வுக் கலையின் இரசவாதம்
உடையவளாய் விதை நிலம்
உருவாக்கும் வானம் பார்த்தபூமியாள்
கருவாகழ மகிழும் மலராகிடு!
உருவாகி உலகிற்கு உயிராகு!
பெருமாற்றம் உருவாக்கு உலகுய்ய!
00
தனக்குள்ளான பயணம் கவிதை.
உனக்குண்டான அலட்சியம் அவமானங்களை
எனதல்லவென உன் பாதத்தின்
கனத்த கம்பளமாய் கீழே
உரமாகப் போடு! நிதானமாய்
உசாராகக் காலடிகளை ஊன்று!
உண்மையில் அலட்சியத்திற்கு அலட்சியமே
உருத்தான பதில் எனலாமோ!

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 7-7-2022