33.பாமாலிகை – (தமிழ்மொழி)80.புதிய சொற்கள்

32. பாமாலிகை – (தமிழ்மொழி)79.சிங்கநாதத்துடன் சிம்மாசனம்.

சிங்கநாதத்துடன் சிம்மாசனம்
00

( சிகண்டமாக-மயில்தோகை. சிங்கநாதம்- ஊதுகொம்பு)
00
தமிழமுதமென் ஊனுக்கு உயிர்
தமிழமுதமென் உயிருக்கு மது
அமிழ விடாது உயர்த்து
தமிழை என்றால் எள்ளுகிறார்.
00
சிக்கலோ அகங்காரமின்றிச் சிலுசிலுப்பாக
சிகண்டமாக என்னுள் சிக்கென
சிங்கநாதத்துடன் அமைத்தது சிங்காசனம்.
சிங்காரமாயின்று கவியேறுகிறது சிகரம்.
00
கவியரசி எந்நாளும் கருத்தில்
அவிட்டமாய் வானில் நாளும்
கவினுடன் மானுடரை ஈர்க்கும்
கவிநட்சத்திரமாய் நிலைக்கும் காதல்.
00
அகலமாக்கி விரிவாக்கி ஆழமாக
அறிவை நீளமாக்கி மையப்பொருளை
அடுக்கடுக்காய்ப் பல பரிமாணங்களிலும்
அழகாய்க் கவி அளிக்குமாசை.
00
மயில் நடனமாடும் முகிலாக
மழை இடி மின்னலாக
மாற்று உணர்வு மகிழ்ந்தளிக்கத்
தோற்றுவிடத் தேவையில்லை
00
எந்த வயதில் சிந்தாடியது
சுந்தரக் கவிதை வந்தாடியது!
மந்திரக் கவிதையா! மயிலிறகா!
மனதில் எழுந்த மாயக்குரலா!
00
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 29-9-2021

31. பாமாலிகை – (தமிழ்மொழி) 78. ஒளவை பண்பாடோதினார்

ஒளவை பண்பாடோதினார்
00

கணக்கெடுக்காமல் கருத்தில் கொள்ளாமல்
இணக்கமும் இல்லாமல் வாழ்கிறார்கள்
உணரார் உணர்ச்சியாக எழுதுவதை
கணக்கிட முடியாது அலட்சியங்களை
00
இருப்பையே காட்டும் விருப்பு
கருத்தா மன எண்ணமா
உருத்துடன் அதைக்காட்டி விடு
அருத்தமாகப் பேசிடு எழுதிடு!
00
தொலைவில் வானம் குடையாகிறது
அலையும் அலைகள் ஆடைகளாகிறது.
தலைமை தாங்க வேண்டும்
விலையற்றதான வித்துவ வரிகள்
00
வள்ளுவர் அழகு படுத்திய
வள்ளல் மொழிக்கு ஒளவை
கள்ளமறப் பிள்ளைகள் வளர
உள்ளம் கவரும் பண்பாடோதினார்.
00
கருத்தோடு வாசி மனங்கள்
திருந்தி மாசறு திருவினையாக்கலாம்
முருகுடை ஊட்டமிகு உணர்வுகள்
பெருகட்டும் திறமையாய்க் காட்டாறாய்!

00
1-8-2022

30. பாமாலிகை – (தமிழ்மொழி)77. தனக்குள்ளான பயணம் கவிதை – பாகம் இரண்டு

தனக்குள்ளான பயணம் கவிதை – பாகம் இரண்டு
00


விரிபுவி உலகில் விரல்கள்
விசிறும் வித்தகமாம் எண்ண
விதைகள் வியனுலகில் மொழிபெயர்த்து
விரிந்து மலையெனவே நிலைத்திருக்க
விருட்சமாயூன்றுவான் மாநிலத்தில் மதியூகி
புருவ விரிப்பு ஆச்சரியமாய்
கருத்தை ஊன்றிக் கவனிப்பதால்
பெரு வெளிச்சப் பக்கம் அமிழாது.
00
உறகுதலற்ற ( உறங்குதல்) தமிழ் போதும்
உமிழாதபடி உள்ளொளிரும் சக்தியாகும்
இறகுகள் தேவையில்லைப் பறக்க.
ஆற்றலும் முயற்சியும் அவரவர்
தோற்றுவாய். கரம் பிடித்துச்
சாற்றுதல் நீள்வது சிரமம்.
நூற்புலமையின் செயற்றிறன் தேவை.
ஆற்றலே முயற்சியின் தோற்றுவாய்.
00
தன்னைத் தானே உணர்ந்து அறிதலால்
மண்மீது தீரமாய் நடமாடலாம்
விண்வரை உயர்ந்தாலும் எம்
கண்கள் கீழே குனிந்தாலும்
உண்மையாய்த் தலை நிமிர்ந்து
எண்ணம் போல் வாழலாம்.
தன்னையறிதல் தன்னால் முடியும்
என்றவன் துணிந்து மின்னுவான்

00
வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 12-7-2022

29. பாமாலிகை – (தமிழ்மொழி) 76

தனக்குள்ளான பயணம் கவிதை.

எழுதுகோல் எனும் கருவியால்
உழும் தமிழ் இரசனையாம்
உணர்வுக் கலையின் இரசவாதம்
உடையவளாய் விதை நிலம்
உருவாக்கும் வானம் பார்த்தபூமியாள்
கருவாகழ மகிழும் மலராகிடு!
உருவாகி உலகிற்கு உயிராகு!
பெருமாற்றம் உருவாக்கு உலகுய்ய!
00
தனக்குள்ளான பயணம் கவிதை.
உனக்குண்டான அலட்சியம் அவமானங்களை
எனதல்லவென உன் பாதத்தின்
கனத்த கம்பளமாய் கீழே
உரமாகப் போடு! நிதானமாய்
உசாராகக் காலடிகளை ஊன்று!
உண்மையில் அலட்சியத்திற்கு அலட்சியமே
உருத்தான பதில் எனலாமோ!

வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் – 7-7-2022

28. பாமாலிகை – (தமிழ்மொழி) 75 தமிழ் புனித கங்கை

தமிழ் புனித கங்கை

(ஓச்சம் – புகழ்)
ஆசையாயழகுத் தமிழுலக
மாசையகற்ற மெழுகியோச்சமாக
காசையெதிர்பார்க்காது எழுதுகோலெடுத்து
ஓசையின்றி எழுதுகிறேன்
00

களவாடா அறிவு
இளகியழியா ஞானம்
அளவற்ற புனித கங்கையென
குளித்து நீந்துங்கள்.
00

நற்கருத்துடைக் கவிதை
அற்புதச் சொல்லோவியம்
பொற்பத அறிவுப்பூபாளமான
வெற்றிப் பயணமே!
00

பொறுப்பாய் இலக்கியக்
கருத்தில் கவனமீர்த்ததை
விருப்பு அடையாளமிடாது
உருத்தாய்க் கருத்திடுங்கள்!
00

நட்புக்குச் சிகரமாய்
உட்புகுந்து மனதுள்
ஒட்டி உறவாடுங்கள்!
எட்டிக்காயல்ல தமிழ்!


கவிநட்சத்திரம் வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் 23-1-2022

27. பாமாலிகை – (தமிழ்மொழி)74. அணிந்துரையாய் வாழ்வு

அணிந்துரையாய் வாழ்வு

தயங்க முடியாது கையை இழுத்தது.
முயங்கு என்று மொழி வழிந்தது
இயங்கிய கரம் இணைத்தது வரிகள்
மயங்கியது பொங்கிய எண்ணச் சுதந்திரம்.
மொழி சார்ந்த மனம் தத்துவமாய்
வழிந்தது சித்தியாய்ச் சமத்துவமாய்ச் சங்கீதமாய்.
00

கவிதையாய்ப் பறக்க விடப் போகிறேன்
கட்டிய நூலை இளக்கி விடப்போகிறேன்.
எட்டிடாத வெட்ட வெளியில் உயரும்!
கட்டான எண்ணத் தியானங்கள் இவை
கருணையான மையேந்தும் விழி நிறைய
கருத்துரைக்கும் நூற்காம்பிலிருக்கும் மலரே!
00

துணிவு இதழ் பிரிக்கும் நெஞ்சத்தின்
அணி பெரும் நம்பிக்கை ஆகிட
பிணியற்ற இதயம் தோகை விரிக்க
தணியாத உள்ளங்களின் தாறுமாறான தாண்டவத்
திணிப்பு பணிவற்ற பகிரங்கச் சீர்கேடாகாது
அணிந்துரையாய் வாழ்வு அணிவகுக்காதோவென நப்பாசை!
00

கவியருவி வேதா. இலங்காதிலகம். (இலங்கைத் தமிழிச்சி)
டென்மார்க் 25-4-2021

26. பாமாலிகை – (தமிழ்மொழி) 73. எண்ணக் கம்பளம்

எண்ணக் கம்பளம்
00

திரட்டும் ஒவ்வொரு சொல்லும்
திருவாசகமான கவிமொழியாய்த் தித்திக்கும்
திருத்தமுடைய திருமொழியாய்த் திண்மையாய்
திருவமுதாய் பிறக்கட்டும் திவ்வியமாய்.
00
பரிசுத்த சிந்தனைப் பதிப்பின்
வரிகளான்மாவை நீவும் மென்னிறகு.
சரிந்திடும் நிபந்தனையற்ற பாபுனைவு
உருத்துடன் நெய்யப்படும் உருப்படிகள்.
00
இன்கவிதை ஏவாமல் வருவது
இதய எண்ணச் சிறகுகள் இன்பத்தால்
இதமாகி வெப்பமாக இனாமாவது
என்னுயிரால் பிணைந்த எண்ணக்கம்பளம்.
00
நர்த்தன விரல்களே அருத்தமுடன்
வார்க்கும் மாமகுட வரிகள்.
சொர்க்கமாகக் காற்தடமின்றிச் சொரியும்
வர்த்தகமாய் நிறைகுடமாய் அமையும்.
00
துமிலமுடை (பேராரவாரம்)ஞாபகக்கிணறு மனம்
தமிழ் ஊற்றும் தரமுடைய
அமிழாத கவிமழை உன்னதம்.
அமிர்தசஞ்சீவி உயிரில் மலர்ந்த தமிழோடையாள்.
00
நன்நினைவுச் சொற்களை அடுக்கி

அன்பு பண்பால் வண்ணமூட்டி
என்கவிதைப் பூக்களால் மேடையிடும்
சீதனக்கவிதை சாதனை தரும்.
00
கவிதைப் பூக்களின் புன்னகை
புவிகைதட்டும் தேவப் பிரசாதம்.
கவிகையாய் (நன்மை) வேதனைகளைக் கொல்லும்
பவிகமான (சிறப்பு) வேதம் தமிழோடு கரைதல்
00
தேவையை நிறைவேற்றத் தேனெனும்
தேவவார்த்தைகள் தேடித் தேடி

தேங்குதலின்றி உயர்வாய்த் தேயாமதியாய்
தேர்ச்சியுடை மனித முயற்சியிது.
00
கவிதை கவ்விப்பிடித்துச் சுடர்கிறது
பூவிசிறி! மொழியின் அரசி!
பாவிதை விதைத்துப் படித்து
பூவிழிவிரித்து இரசிக்காத மனங்களுமுண்டு

00
குவிந்திடும் மனம் திறந்தால் நல்லறிவு
குவியும் அனுபவஅலை நுரைகள் முத்தாகும்
குவித்தல் கவிவலையில் மீன்களையல்ல
கவின் தமிழைத்தான் பிடிக்குமாசை
00


கவிவித்தகர் – வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 15-11-2021

25. பாமாலிகை – (தமிழ்மொழி) 72. தமிழ் எங்கள் பேச்சு தமிழே எங்கள் மூச்சு

தமிழ் எங்கள் பேச்சு தமிழே எங்கள் மூச்சு

வாழ்விற்கு அணியாம் மெல்லின, இடையின//
வல்லினத் தமிழ், வாய்மொழியாலும் பனையோலையில்//
வல்லமையாய் எழுதிப் பிரதியெடுத்துப் பாதுகாத்தது.//
தொல்லெழில் லெமூரியா – குமரிக்கண்டப் பிறப்பிது.//
இயலிசை நாடகம், அஃறிணை உயர்திணையாய்//
முச்சங்கம், மூவேந்தர் வளர்த்த ஐந்திலக்கணம்.//
மொழிகளுக்குத் தாயான மூத்தது, முதலாவது//
அமிழாத கருத்துப் பரிமாற்றம், வரலாறும்//
இழிவற்ற கலை. சமூகநிலை. பழக்கவழக்கம்//
எழிலுடை ஒழுக்கநெறிகள் எண்ணங்களுடைய சீரிளமையிது!//
00


கவிஞர் திலகம் – வேதா. இலங்காதிலகம் – டென்மார்க்
9-8-2021

24. பாமாலிகை – (தமிழ்மொழி)71. இன்பத் தமிழும் நாமும்.

STS Tamil Tv was live.

August 17 at 8:00 PM  · இன்பத் தமிழும் நாமும்.பன்னாட்டு கலைஞர்களை இணைத்து. பலம் மிக்க கவிகளுடன் வலம் வரும் நிகழ்வே கவிச்சோலை தமிழுக்கும் கவிகளுக்கும் பெருமைசேர்க்க உருவான இன்நிகழ்ச்சி எஸ் ரி எஸ் தமிழ் தொலைக்காட்சி உலகெல்லாம் பரந்து வாழும் எமது கவிஞர்களின் படைப்பை தாங்கி வருகின்றதுகவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்கவிச்சோலை நிகழ்வில் கலந்து சிறப்பிக்கின்றார்கள்கவிவாணர் இரா சம்பந்தன் யேர்மனிகவிஞர் வேதா இலங்கதிலகம் டென்மார்க்கவிஞர் கலாநிதி க.மதிபாஸ்கரன் கனடாஜென்னி ஐெயசந்திரன் பரபன்ஸ்கவிச்சோலையில் தொகுபாளர் கவிஞர் கணோஸ் பிரான்ஸ்

எஸ்ரிஎஸ் கவிமாலை
00

எழுத்து விமானத்தில் ஆசைப்பெற்றோர்,
தமிழாசிரியர்கள் துணையால் ஏறி
எழுச்சியான எழுத்தாணி கொண்டு
பழுத்த தமிழாலொரு சொல்லோவியம்
அழுத்தமாக ஒரு கவிமாலை
முழுதாகச் சமர்ப்பிக்கிறேன் இது
தமிழோடு விளையாடும் பொழுது.
இழிவற்றது எடுத்தாள ஆள இன்பம்
அமிழாது நாமிருப்போம் வா! வா!

00

கவிதைச் சொல் பூப்பல்லக்காகவும்
பவித்திரத் தென்றலின் இதமாகவும்
புத்துணர்வு தரட்டும் இன்பமாக.
வித்தகம்இ உத்தமம்! தமிழ்ச்சாறு!
முத்தமிழ் எத்தனை பழமைத்திமிர்!
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
தள்ளவியலாத் தெ ள் ளமுதச் சொத்தே! வணக்கம்!

00

எஸ்ரிஎஸ் கலையகம் ஏற்றும் தமிழ் விளக்கின்
இனிய தொகுப்பாளர்கள், பொறுப்பாளர்கள்,
திருவாளர்கள் கணேஷ், முல்லைமோகன், தேவராசா,
மேலும் தமிழ் மாந்தும் கவிநெஞ்சங்கள்
அனைவருக்கும் அன்புத் தமிழ்வணக்கம்

00

இன்பத் தமிழும் நாமும்.
00


நாவலந்தீவாம் குமரிக்கண்டப் பிறப்பு
தமிழ் ‘ திருவிடமொழி ‘ யென்ற பெயருடைத்து
‘ திருவிடர் ‘; குமரிக்கண்ட மக்களாம்.
தீந்தமிழின் மணிமகுடம் சங்கஇலக்கியங்களாம்
முதற்சங்கம் சிவன் முருகர் அகத்தியரும்
முப்பத்தெட்டு மன்னர்களிணைந்து பரிபாடல்
முதுநரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரமும் இயற்றினராம்.

முத்தான இரண்டாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்திலியங்கியது.
00

தோன்றின அகத்தியம், தொல்காப்பியம்,
இசைநூல் விளக்கம் வியாழமாலை.
மூன்றாம் தமிழ்ச்சங்கம் மதுரையிலியங்கியது.
தோன்றின நெடுந்தொகை, குறுந்தொகை,
நற்றிணை, பரிபாடல், புறநானூறு, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, கலித்தொக,. தமிழ்ப் பொக்கிஷங்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளல்ல பொய்த் தகவலது
ஆண்டுகள் இருபதாயிரம் பழமைத் தமிழிது
00


நக்கீரர் ‘இறையனார் அகப்பொருள் ‘ நூலில்
மூன்று தமிழ்ச்சங்கமும் முறையாக நடந்ததான குறிப்பு.
தன்னினம் காக்கும் திறப்பாம் தமிழுக்கு
உள்ளபடி உலகமொழியில் பதினெட்டாம் நிலையே.
தாய்வழித் தொடர்பு கருப்பையிலிருந்து
அகிலத்துப் பிறப்பு அங்கீகாரத்தால் மண்ணில்
முகிழ்ந்தது விரலால் அகரம்இ ஏட்டுச் சுவடியாய்
சஞ்சிகை. ஊடகங்கள் எத்தனை எத்னையுயர்வு!
00


பாட்டி, பாட்டன் மாமிமார் கூட்டில்
பட்டுத் தமிழில் ஊஞ்சலில், உரலில்
நெட்டுருவால் திருக்குறளில் செழித்தது
கூட்டுப்பிரார்த்தனையால் தேவாரப் பாடல்கள்
நான்கு வயதுப் பிள்ளைத் தமிழ் வேறு
நாற்பது வயதுத் தமிழொரு கூறு
தமிழொரு மது அருந்தியுனை இயக்கு!
நந்தமிழ் எம்முயிர்! பைந்தமிழ் எம்வேர்!
00


கம்பர், வள்ளுவர், ஒளவை பாரதி
கணக்கற்றோர் அள்ளிப் பரப்பிய ஆதிமொழி
இன்னா நாற்பது இனியவை நாற்பதெனப்
பதினெண்கீழ்க் கணக்கிலும் பாடங்களுண்டு
உலகிற்கு ஊருக்கு ஞான விளைச்சல்
பலநேச இணைப்புகள் உருவாக்கும்
சொல்வளம், பொருள், சுவையாழம்
கொள்முதலில்லாக் கொடையே கவின்தமிழ்
00


விலகாத பித்து வந்து ஒட்டிவிட்டால்
புலமையின் வண்ணம் எகிறி விரிந்திட
குலவிக் கூடிச் சிறு பவளஇதழில்
தமிழ்க் கன்னலமுத யாத்திரை செய்!
குடைநிழல் விரல் தூரிகை ஒரு
குடை கொண்ட மேகமாய்
தடையின்றிப் பொலியத் தமிழ் நுரைக்கிறது
கடைவிரிக்கிறது என் இதயக் கடலும்.
00


குருதிப் புனலோடு குவிந்த மொழி
அருவித் தமிழாய் அகண்டமொழி
அசுத்தம் அகற்றும் அற்புத வழியாய்
அதனால் எழுதுகிறோம் அறிவுத் தமிழை
சொற்கள் இறகுகளாகிப் பறக்க
அற்புதக் கனியாய் இனிக்கும் தமிழ்
எவரும் அரம்கொண்டு சீவாத தமிழ்
தவறு அந்நியமொழி அகத்தில் புழங்குதல்.
00


மொழியெம் வாழ்க்கை வழி!
ஆழி! ஊள்ளார்ந்து முத்துக்குளி!
குழவியிலிருந்து தமிழ் பேசத் தொடக்கு!
குளம்புவது பெற்றோரே சிறார்களல்ல!
புலத்து மொழிகளோடு தமிழினைக் காக்க
புரவலர் குழந்தைகளும் ஓயாத போர்
பாய் விரித்துப் பரப்புங்கள் தமிழை
சேய்களின் பாதையில் ஊன்றட்டும் தமி;ழ்
00


இன்னமுதக் கவிமாலை, கவியரங்கம், கவிதா ஊர்வலமாக
கன்னலமுதச் சொற்கள் கூட்டும் இரசவாதம்
பென்னம் பெரிய பயிர் செய்தலாயுயர் காதலால்
சின்ன மனச்சங்கால் உயிர்மெய்யாய்ப் பிரசவித்தலே.
தட்டும் விரல்நுனி வியப்புலகம் கணனி
எட்டும் இணையற்றது இணைந்து மின்னுங்கள்
மௌனத்தால் செழித்துப் பரவாது தமிழ்
மௌனத்தை அழித்தலாலேயே மௌரிகனாகலாம்(குபேரன்)
00


மௌவலாம் சொற்களால் சௌபாக்கியம் பெறலாம்
சௌரியம் (வீரம்) பெறுவதும் மெற்யறிவால் திண்ணம்.
முன்னம் செய்த தவம் தமிழோடணைதல்
முன்னோர் தந்த வரம் தமிழால் சாதித்தல்
உலகத் தொடர்பு மொழி தமிழ் நறுந்தேன்!
இக் கவிமாலை வாய்ப்பிற்கு நன்றி!
பொறுமையோடென் வரிகளை நுகர்ந்த
நேச நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
00


வாழ்க! வளர்க தமிழ் ஏழேழு உலகமும்!
வணக்கம்