88. 89. 90.photo poem

 88

குறிதவறுகிறதோ!
பெரியவரைக் கனம்பண்ணுதல்
உரியவரை மதித்தல்
அரியதை அறிதல்
பெரிய விடயங்கள்!
சிறியவருக்குச் சொல்லித் தருதல்
வறியதாகிப் போகிறதோ!
நெறியுடை முகாந்தரங்கள் (காரணங்கள்)
குறிதவறிப் போகிறதோ!!!!

மாசி-2021 வேதா

89

84. photo poem . உறங்காத பயணத்தில்……..

Pathivukal.com published.

உறங்காத பயணத்தில்……..

சொற் சுரங்கத்தில் அள்ளும்
அற்புத மணிகள் தினம்
உற்பத்தி செய்யும் படிமம்
கற்பிக்கும் பாடம் உலகிற்கு
நற்பேறு ஈயும் கடமையுண்டு.

ஆழ்மனதில் பூத்த எண்ணம்
வீழ்ந்து பரவி நதியூற்றாகி
வாழ்ந்திட உயிர் தருகிறது

தாழ்ந்திடாத அன்பின் சிலிர்ப்புகளில்
மலரும் மென்மொழிகளாக
கரங்களைப் பற்றுதலாக
இதயத்தை ஆதரவாய் ஒற்றுகின்றன

அடைகாக்கும் அன்பு மொழிகள்
ஆனந்தக் குஞ்சு பொரிக்கட்டும்

இதயக் கடலில் நினைவுகள்
இறகாக அசைந்து சிறகு விரித்துப்
படகாகிறது.
உறங்காத பயணமல்லவா இப்புரள்வு!

( படிமம் – பிரதிமை, வடிவம்)


2 – ஆனி – 2020

84. photo poem

இதுவன்றோ வேண்டும்!

இந்தக் கவிதை முதலாம் வலை — வேதாவின் வலையில்
பாமாலிகை கதம்பம் 269ல் பதியப்பட்டுள்ளது.
இணைப்பு கீழே உள்ளது.

81. Photo poem – புதியதைக் கையிலெடு!

புதியதைக் கையிலெடு!

சமத்துவ காற்றூதி ( பலூன்)
சாமர்த்தியமாய் வானில் விட்டதும்
மகாகர்வமாய் நீயென்ன செய்கிறாயாம்!
நானும் பலூன் விடவேண்டாம்

மரம் வளர்க்கலாம், மணிவடமாக்கலாம்.
மண்டலம் சுற்றலாம்.நீ
விண்ணைப் பார்! நான்
மண்ணை ஆள்கிறேன்!…

அடக்கியாளல், அதிகாரம் செலுத்தல்
தடக்கும் பாதை ஆகாதோ!
கிடக்கும் மேற்குலக நிர்வாகம்
திடமானது துணை கொள்ளலாம்.!

வேதா- 5- 2020

80. Photo poem – அகம்… கடல்

அகம்… கடல்

முகநுலில் கூடப் பாரபட்சம்
அகநூலின் அகலம் இது.
அனம்பாவம் அகலா நிலை
அகமடலின் விரிவு இது

அகளங்கன் (குற்றமற்றவன்) யார் உளன்!
இகலார் (பகைவர்) போலிணைந்திருப்பார்.
உகந்தாரெவர் அறிய முடியாதது
சகலகலாவல்லவராகக் காட்சி கோன்றும்.

சிகரம் ஏறினும் மாறாதது
சுகப்படுதல் திகம்பர இரகசியமே!
தகவு பெறுதல் சாகசமே!
திகம்பரன் இரகசியம் தீர்வு பெறுதல்.
14-4-2020