54. சான்றிதழ்கள் – கவிதைகள். 64- சிக்கு புக்கு ரயிலே….

 

 

kampa27-28-11-17

*

சிக்கு புக்கு ரயிலே….

*
அக்கம் பக்கம் பார்த்தே
திக்குத் திசையின்றி ஓடியே
சிக்கு புக்கு ரயிலேயென
எக்காளமாய் கூட்டுறவு வளர்த்தோமன்று.
*
ஒற்றுமை ஒருங்கிணைப்பால் நாம்
கற்றது பல நல்லவைகள்.
இற்றுவிழாது நெஞ்சினிலே என்றும்.
இனி வராது மறுபடியும்.
*
வேதா. இலங்காதிலகம் டென்மார்க். 27-11-2017
*
train
*
train

53. சான்றிதழ்கள் – கவிதைகள் 63-அரிதாரம்.

 

 

kampan - 20-12-11-2017

*

 அரிதாரம்.

*

அரிதாரம் ஒப்பனைப் பொடியாயினும்
உரிமையாக தமிழ்நாட்டை ஆள
அரிதார ஆளுமை முனைகிறது.
அரிதாகக் கட்டியாக தூளானதுமான
அரிதாரம் பளிங்கானவொரு மருந்தாம்.
திருமகள், மஞ்சள் கத்தூரியுமரிதாரம்.

*

துரோகமுடைய காதல், வஞ்சகம் 
துரத்தும் நட்பு, கையூட்டெனும்
துன்மதியில் துயிலும் அரசியல்,
துன்பம் துடைக்காத சமூகசேவை,
துச்சமென மதிக்கும் சொந்தங்களனைத்தும்
துடைத்தெறியும் அரிதாரங்களே.

*

புன்னகை, அழுகை, மெய்,
பொய், கோபமனைத்துமே அரிதாரம்
பாடையில் போதலே அரிதாரமற்றது.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-11-2017.

*

devi-blue

52. சான்றிதழ்கள் – கவிதைகள்- 62-அலைபாயுதே

 

 

 

chippikkul -1-12-17

*

அலைபாயுதே

*

நிலையின்றி என் மனம்
அலைபாயுதேன் எல்லை மீறி/
கலைக்கண்ணனின் கனிந்த பார்வை
கலையெனும் கண்ணான காதலோ!/

*

ஊன் பாகமாயுருவில் கலந்து
தேன் பாகாயினிக்கும் இது/
அன்பெனும் அவதியாம் உயிரூக்கி
இன்பநதியாய் இயக்கும் வாழ்வை/

*

புத்தக மயிலிறகாய் இதயத்துள்
பொத்தும் இருவர் உணர்வு/
தத்தித்தோம் போடுகிறது தலைமுறையாய்
மொத்தமான காதல் தத்துவநாடி./

*

அசையும் சுரபிகளின் மென்னகை
இசைத்து நனைக்குது உயிர்நதியை/
விசையாகி உறவை இணைக்கும்
வில்லாகிய இன்ப மன்மதபாணமாம்./

*

கண்ணுக்குள் நுழைந்து மனதோடு
வண்ணமாய் உயிருள் உரசி/
மண்ணுக்குள் மனிதனைப் பிணைத்து
எண்ணில்லாப் பலனீயும் காதல்./

*

பலர் வாழ்வு விலையாகுதே/
சிலரன்பு வளமாய் நிலையாகுதே/
தளராத மனம் தழும்பாதே./
நிலையான காதலென்றும் அலைபாயுதே./

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-12-2017

*

waterdivider

52. பா மாலிகை ( கதம்பம்)  நிலையில்லா வாழ்வு. 544.

 நிலையில்லா வாழ்வு.

மண் குடிசையானாலும் மகிழ்ச்சி ஒன்றே
மனிதனின் நிலையான செல்வம்.
ஒன்று முதல் ஒன்பது பத்துவரை
ஓடியோடி உழைத்து உயர்.
ஆறாத பசியுடன் அம்மாவிற்குக் காத்திருப்பு
ஆறுமா இரை அகப்படுமா.
பட்ட மரமானாலும் பயன் தரும் 
பாடை வரை அறி.
நிலையில்லா வாழ்வில் நிலைத்த முயற்சி
நிர்மூலமாக்காது மனிதனை என்றும்.
ஏழைக்குக் கைகொடுத்து ஏற்றுவது இருப்பதை 
ஏழாகப் பங்கிடும் குணம்.

*

– 20-6-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்

*

muruga

51. பா மாலிகை ( கதம்பம்) கடந்து போகும் நேரங்கள். 543

 

 

clock

கடந்து போகும் நேரங்கள்.

*

நடந்து முடிந்த பாடங்கள்
கடந்து போன நேரங்கள்.
உடந்தை எம் கவலையீனமே.
கிடந்து மனம் வருந்துமே.

*

கடந்த காலத்தில் ஊரில்
நடந்து வாழ்ந்த காலங்கள்
படர்ந்து பழகிய உறவுகள்
தொடர்ந்து வராதது பெருமேக்கமே.

*

தடம் மனதில் பதித்தவையினிக்
கேட்டாலும் வராதவை…..
கிடைத்த நேரத்தைப் பொன்னாக்குவோம்.

*

13-6-2018   வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

 

time

50. பா மாலிகை ( கதம்பம்) மொழி பெயர்ப்பு. 542

 

 

molipeya

*

மொழி  பெயர்ப்பு

*
மொழிபெயர்ப்பு மொழியாக்கம் ஒரு கலை
மொழி வளர்ச்சிக் கருவியாகவும் உலகிலே
தொடர்பாடலை இலகுபடுத்த வெகுவாய் உதவும்
தொலை உலகங்களை ஒன்றாக இணைத்தும்
தொடரும் சவால் நிறைந்த செயல்
*
பன்மொழிகள், கலை, இலக்கியம், பண்பாடு
படைப்பாக்க நுணுக்கம், சமூக அமைப்புகள்
படித்துணரும் வாய்ப்பு மொழிபெயர்ப்பின் அமைவு.
பிறர் கருத்து சிந்தனையைச் சுயமொழியில்
புரிந்திட உதவுமொரு இணைப்புப் பாலம்.
*
பிறமொழியறியாதவர் சொந்த மொழியில் அறியவும்
புதுக் கலைச்சொற்களறிவால் சொற் பஞ்சமழியவும்.
பலவிதமாய் மொழியைக் கையாளும் தாராளதன்மையுடன்
பாரம்பரிய நீண்டகால இலக்கியத்தொன்மை செம்மையறிவோம்
பாரிய உலக ஒற்றுமைக்கு அடித்தளமாகிறது.
*
பொழுது போக்கல்ல இலக்கியம்! பாரதியாரும்
பாடினார் அன்று, பிறநாட்டு நல்லறிஞர்
சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெறவேண்டும் என்று.
மொழிபெயர்ப்பு கடினமானதும், மாபெரும் சக்தியானதும்.
மனிதகுலத்தை வாழ்விக்க உதவுமொரு இயக்கமிது.
*
கிறிஸ்துவிற்கு முன்னர் இருநூற்று ஐம்பதில்
ஐரோப்பாவில் மொழி பெயர்ப்பு முதலுருவாக
கோமரின் ஒடிசி காப்பியம் இலத்தீனிலுதித்தது.
தமிழில் இந்தியாவில் விவிலியம் முதலாயுதித்தது.
தொடர்ந்து ரஷ்ய நூல்கள் வந்துதித்தன.
*
திருக்குறள் தொண்ணூறு மொழிகளில் மாற்றமானது.
கௌரவமான பண வருவாய்த் தொழிலிது.
கவனம், விடாமுயற்சி, மொழியறிவு பண்பாடுகளுதவுகிறது
கூகிளாலின்று அறுபத்துநான்கு மொழியாக்கம் முடியுமாதலால்
தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு இலகுவாகிறது.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-3-2018
*
akaram

13. கண்ணகி-3. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் -கனவு மெய்ப்பட வேண்டும்.

nila-kannaki-3

*

கனவு மெய்ப்பட வேண்டும்.

*

உரையற்ற காட்சிக் கடை
அரைகுறையிலும் சுருங்கும் குடை.
நுரையான இலவச உடை.
நுரைக்கும் பயப்பிராந்தி வாடை.
திரை மூடிய நாடகமேடை
தரையிலெம் கனவுமேடை
வரையற்ற வனப்புக் குடை
விரைந்து மெய்ப்படவேது தடை!

*

கனவு மெய்ப்பட வேண்டும்.
கனக சபையருள வேண்டும்.
கனதி நிலையுருக வேண்டும்.
கனல்வுளம் குளிர வேண்டும்.
அனர்த்தங்கள் அழிய வேண்டும்
இனங்களில் ஒற்றுமை வேண்டும்
வனவாசம் நீங்க வேண்டும்
வண்ணமான வாழ்வு வேண்டும்.

*

புனருத்தாரண நாடு வேண்டும்.
பனங்காடு செழிக்க வேண்டும்.
தினகரனாய் மொழியாக வேண்டும்.
திகிலற்ற தூக்கம் வேண்டும்.
மனிதநேயம் பெருக வேண்டும்.
மனதிலே சாந்தம் வேண்டும்.
தனதானியம் பெருக வேண்டும்.
தற்கொலைகள் மறைய வேண்டும்.

*

நாட்டில் அமைதி வந்தால் 
நாமும் அமைதி பெறுவோம்.
நாளும் எம் உணவும்
நல்ல அமுதாய் மாறும்.
நாட்டினர் கனவு மெய்ப்பட
நான்முகன் அருள வேண்டும்.
நானிலம் போற்றும் தமிழன்
நினைவு நிறைவுற வேண்டும்.

*

(இலங்கையள் என்பதால் இப்படி எடுத்தாளப்பட்டது)

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 8-3-2018

*

வேறு:-

கனவு மெய்ப்பட வேண்டும்.

(மனவு – மணி)

தினவு எடுக்கும் மனதில்
கனவு சாதகமாக விரிதல்
வினவும் தேவை இன்றி
நனவடைவு எளிதாம், மகிழ்வில்
மனவு அடிக்கும் மனதில்

கனவு காணென்பார் கற்றவர்.
கற்பகமாய்க் கடைத்தேறும் கணிப்பும்.
கனவுகள் கணக்கின்றிக் கருவாகும்.
கங்கையாகும் கரைந்தும் அழியும்
கச்சேரி வைத்தும் களைகட்டும்.

கள்ளமற்ற கலாப மனம்
கணிக்கும் புதுத் திட்டம்.
கடும் உழைப்பு வேண்டும்.
கண்ணிய நடை வெற்றியீயும்.
கனவு மெய்ப்படத் தடையேது!

மனச்சிந்தனைகள் நல்ல கனவுகள்
மகிழ்ந்திடும் செயல்கள் ஆகும்.
மகத்தான ஓயா முயற்சிகள்
மன்றம் அமைக்கும் வெற்றியாகும்.
குன்றிற்குயரும் நிலை வரும்.

21-3-2018

வேறு:-

கனவு மெய்ப்பட வேண்டும்

வெள்ளிமணி இலக்கணச் சொல்லடுக்கி
அள்ளி எறிந்து அருமைத் தமிழில்
துள்ளி விளையாடும் சொற்களில் பேசும்
வள்ளல் சிலரின் உறவு வேண்டும்.

நாடத் தெவிட்டாத நற்கருத்துகள்
ஆடவேண்டும் ஆசைப் பேச்சில்
வாடாத உற்;சாக ஊக்குவிப்பு வேண்டும்
நாடகமெழுவது கோடுகள் மீறலில் தானே!

2020

dream-1

12. மணிமேகலை(10) – கண்ணகி 2- சான்றிதழ்கள் – கவிதைகள் -செல்களிடம் தப்பிய சுவடிகள்.

 

 

nila-kannaki-2

*

செல்களிடம் தப்பிய சுவடிகள்.

*

ஏடுகளின் ஒன்றிணைப்புத் தொகுப்பே சுவடியானது
சுவடி, எழுத்துச் சுவடும் பிரதியுமுடையது.
சுவடிகள் காப்பியங்கள், காவியங்கள், அருந்தகவல்களை
கபடமற்றுத் தலைமுறைகள் கடந்தெம்மிடமிணைத்தது.

*

ஆரியர்கள் சிந்துவெளியில் ஊடாடிய காலத்தில்
தமிழர் ஓலைச் சுவடிகள் கொண்டிருந்தார்கள்.
தகடு, மரப்பலகை, பானை ஓடுகள்,
களிமண் பலகை, கல்வெட்டுகளில் எழுதினார்கள்.

*

திருஞானசம்பந்தரின் தேவாரச்சுவடி பாண்டி நாட்டு
திருவேடகத்தில் வைகையை எதிர்த்துக் கரையேறியது
சரபோசி மன்னரின் சரசுவதி மகாலில்
மூன்று இலட்சத்துக்கும் மேலான சுவடிகளுள்ளது

*

சிவபக்தியில் ஊறிய சிவபாதசேகரன் என்ற
சிறந்த சோழனாம் இராசராசன் தீருநாரையூர்ச்
சிறப்பையறிந்து நம்பியாண்டார் நம்பியிடம் வந்து
மூவர் தேவாரங்களைப் பிள்ளையாரருளில் பெற்றார்

*

தமிழ்தாத்தா சுவாமிநாதய்யர் பல சுவடிகளை
திருநெல்வேலி பாரீசெனச்சென்று திரட்டிப் பதித்தார்.
திருமுறை பன்னிரண்டாக செல்களிடம் தப்பியவையை
திருவுடை நம்பியாண்டார்நம்பி தொகுத்தார். பாடப்பட்டது.

*

சொல்லிற்கினிய தேவாரம் எல்லோர் குரலிலும்
பல்லாண்டு வாழும்; திருமறைகளும் அப்பன்
பிள்ளையார் அருளால் இராசராசன் காலத்தில் 
நல்லபடி உலாவானது நாமெய்திய புண்ணியமே!

*

வேதா. இலங்காதிலகம்.டென்மார்க். 1-3-2018.

*

 

manuscript-3

49. பா மாலிகை ( கதம்பம்) தந்தமோ!..மெழுகோ!….541

 

 

meluku

*

தந்தமோ!..மெழுகோ!….

*

சந்தனத்தில் குழைத்த பிஞ்சுப் பாதமன்றோ
தந்தத்தில் செய்ததோ இது இன்று!
முந்தி வரும் கொலுசோடு தாளம்
தந்தனாப் போடுகிறது மெழுகுப் பாதம்.

*

மெல்லப் பிடித்து மிருதுவாய் அணைத்து
செல்லமாய் வருடி ரசித்துப் பிணைத்து
அல்லது தூர இருந்து ரசித்து
தில்லானா போட வைக்கும் பாதம்.

*

பா ஆக்கம் பா வானதி    வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.  11-5-2016

*

paatham-2