45. பா மாலிகை ( கதம்பம்) குழந்தை. 537.

 

baby13

*

குழந்தை.

*

வஞ்சகம் அறியாத
மிஞ்சுதலற்ற பருவம்.
பிஞ்சுக் குழந்தை
மஞ்சள் கட்டி.
¤
பஞ்சு மென்மைப்
பிஞ்சு உடல்.
கொஞ்சம் புஞ்சம்.(திரட்சி)
புஞ்சுதலாக்கும் (ஒன்று சேர்க்கும்) குடும்பத்தை.
¤
பிஞ்சுப்பிறையான மழலை.
பஞ்சணைப் புதையல்.
பிஞ்சுக் குழந்தையால்
பஞ்சமற்ற இன்பம்.
¤
சஞ்சலமழிக்கும் குழந்தை
செஞ்சுடர் குடும்பத்திற்கு.
துஞ்சுதலைப் பர்த்தால்
நெஞ்சு நிறையும்.
¤
குஞ்சுக் கால்களின்
கொஞ்சு நடையழகில்
ஊஞ்சலாடும் மனம்
குஞ்சிரிப்பு (புன்னகை) கோடியாகும்.
¤
அஞ்சுதல் இல்லாத
அஞ்சுகப் பேச்சு.
கொஞ்சிடும் சர்வலோக
சஞ்சீவி செர்க்கம்.
¤
வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 11-8-16

*

குழந்தை

*

பஞ்சு உடல் மிஞ்சும் அழகு
கொஞ்சிடும் தெய்வம். கல்லும் கரையும்
பிஞ்சு மழலை மொழி கேட்டால்.
பச்சிளம் குழந்தை ஒரு வயது வரை.

நிறை வாழ்வின் அங்கீகாரம்.
நிகரற்ற இல்லற இன்பம் குழந்தை
கருவறை திறக்கும் திறவுகோல்.
கருவறைச் சிப்பியில் வந்துதித்த முத்து.

குழந்தையால் தான் தாலாட்டு வந்தது.
குடும்ப வாரிசுச் சங்கிலி வளையம்.
இல்லத்து விளக்கு பூமியின் நிலா.
அன்பின் இலக்கணம் சுவர்ண விக்கிரகம்.

உயிர் ஓவியம் வரம் இது.
குழந்தையில்லாதவர் தவமிருந்து பெறும் கொடை
பெற்றோர் அந்தஸ்து தரும் உயிர் சாரல்
பிரசவமென்பது குழந்தையின் மண்ணுலகப் பயணம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.22-6-16

*

Samme katu another poem:-  https://kovaikkavi.wordpress.com/2016/11/28/458-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/  

*

baby-items

44. பா மாலிகை ( கதம்பம்)  536. ஞானப் பேழை

treasure-box-

ஞானப் பேழை
*

ஆதி நூல்கள் தேன்கூடுகள் ஆராய்ந்திடச்
சேதி கூறுமறிவுக் களஞ்சியங்கள் ஞானப்பேழைகள்.
சாதித்த அறிஞர்கள் ஞானத் தேனீக்கள்.
ஓதிடவீந்த அறிவுக் காப்பியங்கள் பொக்கிசங்கள்.

*
ழூஞானம் என்றால் கல்வி, தத்துவநூல்,
அறிவு, பூமி நல்ல தேடலாம்.
அறிவுக் கடலில் விளைந்த முத்துகள்
அறிவு வளமீயும் ஞானப் பேழைகள்.

*

அளவிறந்தவை கொட்டிக் கிடக்குமாதிகாலப் பெட்டகங்கள்.
அகநானூறுஇ புறநானூறுஇ பைபிள்இ குர்ஆன்இ
அருத்தமுள்ள இந்துமதம்இ திருக்குறள் பகவத்கீதையென
மெய்ஞ்ஞானப் புதையற் பெட்டகங்களேராளம் தாராளம்

*

பொய்யாமொழிஇ வானுறை வாழ்த்துஇ உலகப் பொதுமறைஇ
முப்பால்இ உத்தரவேதம் தெய்வநூல்இ கன்மேலெழுத்துஇ
நன்னூல்இ திருக்குறளெனும் ஞானப்பேழையைப் பார்த்தால்….
பன்முகக் கூறுடைய ஊன்றுகோல் திருவள்ளுவம்.

*

பெருநாவலர்இ பொய்யில் புலவரெனப் பெயர்களுடையவர்
செந்நாப்பேதாரென்ற திருவள்ளுவரீந்த இன் கவி.
தமிழ்மறை ஈரடியிலுலகத் தத்துவம் கூறுவது.
குறளியின வள்ளுவரெழுதியது குறளிஇ குறளாகமருவியது.

*

அன்றாட நெறிகள் ஆன்மீக அறமுடையது.
தன்னிகரற்ற வாழ்வியல் நன்மார்க்க நீதியுடையது.
நன்கொடையிது இன்பித்துப் படியென மன்னுயிர்க்கீந்தார்.
அன்று மதுரையிலிது அரங்கேற ஒளவையாருதவினார்.

*

தன்னீர்மை பெருக்கிடும் என்றறிந்து நாட்களைக்
கொன்றிடாது திருக்குறள் படித்தால் சான்றோனாகலாம்.
பண்புகளினடிப்படை விளங்கினால் நலமுடன் வாழலாம்.
ஈரடிகளில் அறம் பொருளின்பமொழியும் குறள்வெண்பா.

*

1330 குறள்கள்இ எண்பது மொழிகளில்
மொழிபெயர்க்கப் பட்டது. வள்ளுவருக்குப் புலவர்கள்
அங்கீகாரம் வழங்கவில்லையதை மீறி வள்ளுவர்
சங்கப்பலகையிலிட அது திருக்குறளை ஏற்றதாம்.

*

இன்று கணனியுமொரு ஞானப் பேழையாய்
விரல் நுனியில் உலக விசேடங்கள் தருகிறது.
திறமையெனும் ஞானச்சாவி கொண்டு அற்புதமாம்
பல பேழைகள் திறந்து திறமை பெருக்கலாம்.

*

 1-5-2017

devi-blue

43. பா மாலிகை ( கதம்பம்) மூன்றாம் பால். 535

 

 

a3m paal

*

மூன்றாம் பால். – 1

*

உடல் உணர்வுப் பின்னல்
கடலான பாலின ஈர்ப்பு.
அடலான( போர்) தனிப்பட்ட உரிமை.
இடம் (விரிவு) கண்டது மேற்கில் (முன்பே)

*

புதுமை வழியுடைய இளையோர்
‘பால் புதுமையினர் ‘ அறிவு விரிவற்றோர்
பொதுமையான மனக்குளப்பத்தில் இன்று
சதிராடிச் சமூகத்தைக் குளப்புகிறது.

*

கல்வி, மருத்துவம், சட்டத்தில்
நல்ல விழிப்புணர்வு தேவை
திருநங்கைகள், திருநம்பிகள் மூன்றாவது
ஒருமித்து இருபதுக்கும் மேலானவை (பாலினங்கள்)

*

பெண் ஆணற்ற இடைநிலைப் 
பாலினத் தோற்றம் கொண்டோர்
புராணத்தில் அலி, ஒம்போது 
அரவாணி, பொன்னைக்கா பெயராகும்.

*

சுரபிகளின் தவறாய் தன்
மரபிலே மாற்றமான பாலினம்.
‘ இப்படிக்கு ரோஸ் ‘ விழிப்புணர்வை 
அப்படி அள்ளிக் கொடுத்தது.

20-4-2017
__________  

மூன்றாம் பால். –  2

*

வள்ளுவனின் மூன்றாம் பால்
துள்ளும் உணாவுகளின் தொகுப்பால்
கள்ளெனும் காமத்துப் பால்
உள்ளுந் தோறும் இனித்தல்.

*

தொடுதல், அணைத்தல், உராய்தல்,
படுதல், அழுத்தலெனப் பல
விடுதலையற்ற உடல் மொழி
விடுதலை காம வேதனைக்கு.

*

காமத் தீயிவ் உடலவதிகள்
சாமகானம் பாடி இணைவில்
சமாதானமாவது மூன்றாம் பால்.
காதலின் சுடர் காமம்.

*

காதலதிகாரம் காமப் பாலில் 
மோதலானது பதின்மத் தொடக்கத்தில்.
மூன்றாம் பாலின் நிறைவு
முழுதான வாழ்வு தரும்.

*

அறவழியில் இல்லறம் சமை!
ஆட்கொல்லி நோயை விலக்கு!
ஆளுமைப் பரத்தமையை ஒதுக்கு
அறவாழ்வுறுத்தலே வள்ளுவனின் மூன்றாம்பால்.
*

 
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  19-4-2017
*
devide

48. சான்றிதழ்கள் – கவிதைகள்.  காட்டுமல்லி பூத்திருக்க 58

 

 

nilachoru-21-4-17

*

நாட்டுப்புறப் பாடல்

 காட்டுமல்லி பூத்திருக்கு.

*

காட்டு மல்லி பூத்திருக்கு
காவலின்றி விரிந்திருக்கு
பாட்டுக் கட்ட ஆசையிருக்கு
நாட்டுப் பாடல் தானா வருது
நீட்டி முழக்குவோம் நேசமாக. (காட்டு)

*

கேட்டுப் பறிக்கத் தேவையில்லை
கேள்வி கேட்க யாருமில்லை
மூக்குப் பறிக்கும் வாசைன
முகர்ந்து பார்க்கத் தேவையில்லை.
மாலை கட்டிச் சூடுவோம். (காட்டு)

*

மலர் பந்தல் விரிப்பு.
மலையருவியருகில் தாளம்.
மனவருத்தமெம் உணவு குறைவு
மாய்ந்து வேட்டையாடுவோம்.
மகிழ்ந்து சேர்ந்து உண்போம். (காட்டு)

*

மரத்து மேல வீடு.
யானை வந்தால் ஓடுவோம்.
யாகமே யெம் வாழ்வு
புலி வரவுக்கும் குறைவில்லை.
புருவம் உயர்த்தும் வாழ்வே. (காட்டு)

*

வெள்ளைக்காரன் வருவானிங்கு.
வெகுமதிகள் தருவான். கூடாரம்
அடித்துக் கும்மாளம் போடுவான்.
காட்டு மல்லி மாலையை
கழுத்திலணிந்து ஆடுவான் (காட்டு)

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 23-4-2017

*

maxresdefault (3)k

47. சான்றிதழ்கள் – கவிதைகள் (வயிற்றுப் பசி -57)

puthumai-12-2015

*

வயிற்றுப் பசி!

*

சொல்லிப் பரியாது சொல்ல முடியாது
எல்லோரும் பெறுவது. அறவே தீராதது.
ஒரு நோய்! பெரும் பசி!
ஒரு சாண் வயிற்றுப் பசி!
படிப்படியாய் உயிர் வாழத் தூண்டுமுணர்வு.
அடிப்படைத் தேவை பசியெனும் உணர்வு.
உலகனைத்துச் சீவன்களின் பொது மொழி
அலக்கழித்து வாட்டும் இலக்கண வழி

*

உணவே பசிக்கு எரி பொருள் 
உணவிற்காய் உலகையே புரட்டும் மருள்
பசி மயக்கம் உயிரையும் பறிக்கும்.
பசித்தால் பெரும் குசி பிறக்கும்.
தாளாப் பசியால் அறிவுடமை, தவம்,
தாளாண்மை, முயற்சி, வண்மை, குலம்:,
தானம், கல்வி, மானம், காமமெனும்
தசமும் பறக்கும். பசி ருசியறியாது.

*

பசி ஏழைகளின் சொத்து. இதை
பகடையாக்குவான் பணக்காரன் தன் சுகத்திற்கு.
பசித்தால் புலி புல்லையும் உண்ணாது.
பகுத்தறிவாளன் மனிதன் எதையும் உண்பான்.
பசியாமையும் ஒரு நோய். நன்கு
பசிக்க இஞ்சி சாப்பிடலாம். ஒரேயளவு
சீரகம் – உப்பு வாயில் மென்றால்
சீரான பசி ஏற்படும் முயலுங்கள்!

*

 பா வானதி வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.  10-  12-2015

வேறு

*

பசி
1.
பசி உணவு, உணர்வு வேட்கை
பசி வந்தால் உருசி அறியாது.
பசி வந்தால் பத்தும் பறக்குமாம்.
பகுத்து உண்பானைப் பசி அண்டாதாம்.
2.
பசி வர உணவு உண்.
நடைப் பயிற்சி பசி தூண்டுமாம்
பசித்தவர் பலருலகில். உணவை வீசாதீர்!
பூனையின் பசிக்கு எலி பலி
3.
தீயின் பசி அனைத்தையும் சுருட்டியது.
காமப் பசியில் சிறுமியரும் பலி.
பணப் பசியே இலஞ்ச ஊழல்.
தேசியமொழி பசி. அஃறிணைக்கும் உண்டு.
4.
பசி வராது உண்பவரும் உளர்.
அறிவுப் பசியும் அற்புதமான உணர்வு.
பசி எடுக்கவும், பசிக்காதிருக்கவும் மாத்திரைகளுண்டு.
கருமமே கண்ணாயினார் பசி நோக்கார்.
5.
வயல் விளைந்தால் பசியுலகு அழியும்.
அன்னையின் முதலெண்ணம் வீட்டார் பசி.
புலி பசித்தாலும் புல் தின்னாது.
பசி சோர்வு, நடுக்கம் தரும்.
6.
தமிழ் பசி என்று பலர்
தமிழெழுதி இங்கு பசி ஆறுகிறார்.
இது ஆறும் பசி அல்ல.
பலரை அவதிக்கு ஆளாக்கும் பசி.

*

வேதா. இலங்காதிலகம். 20-8-16

Another one :-  

https://kovaikkothai.wordpress.com/2017/10/15/7-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-21-%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/

fruits

8- நான் பெற்ற பட்டங்கள் (கவித்தாமரை விருது)

 

dr jeeva . kavithamrai

*

டாக்டர் ஜீவாவின் கவிதைப்பூங்கா
பெருமையுடன் நடத்திய கவிக்களம்
16ல் காதலெனும் கடலினிலே
தலைப்பிற்கு சிறப்பாக கவியெழுதி
கவித்தாமரை விருதுக்கு கவிஞர்
வேதா. இலங்காதிலகம் அவர்கள்
தேர்வாகியுள்ளார் என்பதினை
அறிவித்து வாழ்த்துகிறோம்  
இதற்குரிய கவிதை  
17-3-2017  

காதலெனும் கடலினிலே

*

காதலெனும் கடலினிலே கூதலெனும் இன்பத்திலே
மோதலற்ற வாழ்வினிலே ஐம்பது வருடங்கள்!
ஆதலாலிது பொன் விழா ஆண்டெமக்கு!
பாதகமற்ற நேசமே சாதக சாகரம்.

*

ஈதலும் எடுத்தலுமாய் அன்பைச் சிந்தி
கீதம், கீத வேதமாய் அனுபவித்து
சாதல் வரை செல்வோமொரு நம்பிக்கை.
சாதனையாகுமிவ் விணைவு பிறர் பார்வைக்கு!

*

சீதளமான சூதில்லா சாதனைக் காதல்
போதனையாகும ஒரு சேதமற்ற பிணைதல்.
சோதனைகளிலும் பிரியாது துணை நிற்றல்
தீதற்ற உடையாத உறுதிக் காதல்.

*

காதல் படகு ஆதரவுத் துடுப்புடன்
பாதகமின்றிக் கரை சேரும்.
மேதகு திறமையால் வெற்றியுறும் காதல் 
வேதமாகும் உலகிற்கு! உற்சாகமாய் நீந்துங்கள்!

*

இரண்டாவது கவித்தாமரை விருது  

 

dr.jeev-kaithama-2

*

இதற்குரிய கவிதை  

மனிதம் வாழ்கிறதா?

புனிதமான கருணை, காருண்யம் அன்பானது
இனிதான கூட்டு இணைவு உணர்வது
இனம், மதம், மொழி கடந்தது
மனிதநேயம் என்று நாம் அழைப்பது.

காலத்தில் தீமையுயர்ந்து கலி முற்றியது
மூலத்தில் நல்லவைகள் ஆலமாய் மாறுகிறது.
ஓலமிடுகிறோம் மனிதன் மேலானதை மறந்ததை.
நிலம் நனையும் மழையே மனிதம்.

மரத்தின் நிழலாக மனிதம் வாழ்கிறது.
உரமான நற்பண்புக் கிளைகளை வெட்டுவது
தரமான நிழலாம் மனிதம் வாழ்வதை
திரமாகத் தடுக்கிறது துன்பமான நிலையதே.

மதமான குணங்கள் கதமானால் நிச்சயம்
மனிதம் வாழும். அன்பு சாந்தம்
புனிதமானது. அகங்காரம் அழுக்காறு அழிப்பது
புகலிடம் தரும் மனிதம் வாழ்ந்திட.

புகழ், பதவிக்காய் நாளும் தன்னை
அகழ்ந்து ஆவலில் நிம்மதி இழக்கிறான்.
அகவிருள் அழிந்து போதுமெனும் மனம்
அருகினாலும் போதுமே மனிதம் வாழும்..

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.9-3-2018

 

47ifaoekmx0

 

10. பாமாலிகை (இயற்கை) 88. பறவைகள் பலவிதம்.

 

scne

*

பறவைகள் பலவிதம்.

*

பறவைகளில் பத்தாயிரம் இனமுண்டாம்.
உறவாக தெய்வ வாகனமுமானது.
பறவைகளில் சைவம் அசைவமுண்டு
பார்வைக் கூர்மையோடு மூன்றிமைகளுண்டு.

*

பறவைகளில் சிற்றினம் தாரிச்சிட்டு.
பறக்காதபெரியது தீக்கோழி ஈமியூ.
இறகலங்காரம் பாட்டினால் உறவிணைக்கிறது.
அறமில்லா மனிதருக்கும் உணவாகிறது.

*

‘ வலசை போதல் ‘ என்ற
காலநிலைப் புலப்பெயர்விற்குச் சூரியன்,
நில அடையாளங்கள், நட்சத்திரங்கள்
திசையறி கருவி ஆகிறது.

*

பறவையாகினால் சுற்றுலா அனுபவிக்கலாம்.
மயில் தோகை, கிளிப்பேச்சு,
குயில் கூவல் சிறப்பம்சம்.
இரைதேர்தல் உண்ணலேயிவை தொழில்.

*

உணவு முறைகளுக்குரிய அலகுடையவை.
மீயடுக்கு மூளையெனும் மேன்மையமைப்புடையது.
கூழாங்கற்களையுண்டு சமீபாட்டுக்குதவும் பறவையுமுண்டு.
தூக்கணாங்குருவிக்கூடு சிறப்புத் தொழில்நுட்பம்.

*

(இரைதேர்தல் – இரை தேடல்)

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 24-3-2017

*

birds

46. சான்றிதழ்கள் – கவிதைகள் (மனித நேயம்-56)

 

puthu-7-2016

*

மனித நேயம்

*

இரக்கம், அன்பு, கருணை
சமூக உணர்வினைக் காட்டுதல்
மனித நேயம். உயிரின் நிலையாம்
அன்பு, அளவிலா நேச வழியது, தன்னலமற்றது.

*

குழப்பம் செய்பவனும் மனித நேயம்
இல்லாதவனே! கொலையாளி போன்றவன்.
குறை சொல்வதிலும் குறையகற்ற
உரையாடலாம் பிறரை மிதிக்காது.

*

சமூகத்தில் பிறர் மதிக்கும் பதவி
அந்தஸ்திலுள்ளவன் பண்பாளனென்பது பொதுவிதி.
இவை மறந்து சிலர் சில இளையோர் போன்று
நடப்பவர் மனித நேயமிழந்த பண்பற்றவரே.

*

பிறரைத் தள்ளி ஒதுக்கித் தானுயரும்
மாபாதகனாகி மனித நேயமழிக்கிறான்.
சுய உயர்வு, சுயநலம், சுய சிந்தனையாம்
முட்புதர்களே மனிதனின் கேடு…காடு

*

அன்னை தெரேசா நெல்சன் மன்டேலா போன்ற
பலர் மனித நேயக் காவலர்.
அவர்கள் மனித நேய ஆதரவாளர்
மனித நேயம். பலரை வாழவைக்கிறது

*

மக்கள் சேவை மகேசன் சேவை
என்றார் விவேகானந்தர்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மையென்பதும்
சிறந்த மனித நேய வழி.

*

ஏழைக்கு உணவிடுதல் அபலை கண்ணிர்
துடைப்பவன் இறைவனுக்கு நிகராகிறான்.
நெகிழ்ந்த இதயம், பிறரை மதித்தல்
ஏழைகளின் துன்பம் துடைத்தல்
இறைவனால் விரும்பப்படும் செயல்கள்.

*
வேதா. இலங்காதிலகம்   ஓகுஸ் டென்மார்க்.  July 2016.
*
vector_146.cdr

42. பா மாலிகை ( கதம்பம்) பாசம் தேடும் பந்தங்கள் 534

 

 

paasam...

*
பாசம் தேடும் பந்தங்கள்

*

பாசம் தேடும் பந்தங்கள் 
நேசக் குடமுழுக்கிற்காய் ஏங்குபவர்கள்.
வாசனையுடை வாழ்க்கைச் சொந்தங்கள்
வேசமிடாமையே ஒற்றுமை நிம்மதிகள்.

*

நேசத்தை வாழும்வரை அலட்சியமாக்கி
நாசமாக்கும் விதியை உணரவிடாது
மோசமற்ற பாசமே மொட்டவிழ்ந்த மலராக்கும்
பாசநிறைவேயியற்கையியல்பு. வாழ்வின் பலம்.

*

நீசமற்ற வெண்மையன்பு பற்றுதலாகி
நிறைதூக்கமீயும் துன்பம் தூரமாகும்.
வாழ்வாதரமாம் வழியும் அன்புக்காய்
ஆழ்ந்த ஏழையுள்ளம் வருந்துமியல்பானது.

*

முதியோரில்ல முதியவர்கள், மோதி
முட்டும் கணவன் மனைவி, பாதையோர
ஏழைகள் குழந்தைகளாக மாநிலத்தில்
எண்ணற்ற பாசம் தேடும் பந்தங்கள்.

*

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.   17-7-2016

*

1424422_773891019303899_1021719375_n99

41. பா மாலிகை ( கதம்பம்) (பற்றிக் கொண்டு படர்தல்..) 533

 

creeper

*

பற்றிக் கொண்டு படர்தல்..

*

நிச்சயமாக அத்தனையும் பற்றிக்கொண்டு படர்தலே.
பொன்மொழிகளான நல் வார்த்தைகளை
பண்புடைய நல்ல செயல்களை நாம்
பற்றிப் படர்ந்தே நல் மனிதரானோம்.
காற்று எப்படியெங்கும் புகுந்திடுதோ
ஒற்றும் நல்லவைகளும் பரவி ஒளிர்கிறது.

*

உயிர்க்க நினைக்கும் கொடிகளான பச்சைகள்
கொழு கொம்பைப் பற்றுதலாக நல்லவற்றை
வழுகினாலும் இறுகப் பற்றி எழு!
ஒற்றை விரல் பற்றி ஆரம்பிக்கும்
மழலை எம்மைச் சுற்றியே படர்கிறது.
பெற்றவர் நற் பண்புகள் தொற்றிப் படர்கிறது.

*

பெற்றவர் பொறுப்பு அத்தனை விலைமதிப்பற்றது.
கற்றுக் கொண்டு வளர்தலும் கருணை
காட்டிக் கொண்டு வாழ்தலும் பெருமை.
புற்றாக கெட்டவை வளர்த்து வாழ்வில்
கருநாகவிடமாக அவற்றை உமிழ்தல் கேடு.
ஆகவே நல்லதைப் பற்றிக்கொண்டு படர்!

*

வேதா.இலங்காதிலகம் டென்மார்க்..12-7-2017

*

lines-flowers-and-nature-475142