144. சான்றிதழ்கள் – கவிதைகள். 142. மரணித்து வா மனிதா.

மரணித்து வா மனிதா.

மரணித்தும் பெயர் நிலைக்க உன்னை
இரணமாக்கும் தீயவைகள் அழித்து வாழ்!
சரணாகதியாகும் நற் பழக்கம் நீ
மரணித்தும் வாழ்வு தரும் வழி.
விரணம் (பகைமை) விரட்டி வாழ்தல் உயர்வு.

பிரணவம் அன்பாய் பண்பாய் வாழ்தலே
முரண் இதில் அறவே இல்லை.
தரணி குவளை போன்ற நல்லாரை
சுரணையுடன் வாஞ்சையாய் உயர்த்திப் பேசும்!
பரணி பாடும் பாக்கியம் உருவாகும்.

. 7-6-2020

3. எனது 6வது – 7வது நூல்கள்.

வாழ்த்துரை: (V. Jeevakumaran)

முகநூலின் பதிவுகள் ஒரே வேளையில் அதிக வாசகர்களை சென்றடைந்தாலும்… அதிக நேர்மறையான… அல்லது எதிர் மறையான… அல்லது விருப்புகளை… அல்லது புறம் தள்ளல்களைப் பெற்றாலும் அதன் ஆயட்காலம் அந்த முகநூலின் ஆயுட்காலத்துடனும் அல்லது அதன் ஆசிரியரின் ஆயுட்காலத்துடன் தன்னைக் குறுக்கிக் கொண்டு விடும் என்பதில் எனக்கு என்றுமே பெரிய வருத்தம் உண்டு.

என்னுடன் நட்பில் உள்ள பல நல்ல கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு நான் எப்பவும் சொல்வது கணனித்திரையில் உள்ள பதிவுகளை அச்சுக்கு கொண்டு வாருங்கள் என்பதே. அத்தடன் ISBN எண் கொடுத்து அதனைப் பதிவாக்கும் பொழுது எங்கள் காலத்தையும் தாண்டி அவை வாழும். அவை அங்கீகாரத்துடன் வாழ்கின்றதா அல்லது அங்கீரம் இல்லாது வாழ்கின்றதா என்பதனை வாசகர்களும் அறிஞர்களும் இலக்கிய உலகமும் முடிவு செய்யட்டும்.

படைப்பாளியின் பங்கு படைத்தலும் காத்தலும் தான்.அருளலும், அழித்தலும், மறைத்தலும் வாசகனின் கைகளில் தான் உண்டு.சகோதரி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்கள் முகநூலில் வந்த அவரது அனைத்துக் கவிதைகளையும் இங்கே தொகுக்காமல் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு இலக்கிய முகநூல் அமைப்புகளினால் அங்கீகரிக்கப்பட்ட கவிதைகள் 83 ஐ இங்கே தொகுத்துள்ளார்கள். அத்துடன் அந்தக் கவிதைகள் எந்தக் காலகட்டத்தில் அங்கீகரிக்கப்;பட்டவை என்பதையும், அதற்காக என்னவென்ன விருதுகள் வழங்கப்பட்டன என்றும் பதிவு செய்துள்ளார்.ஆம்!கணனிவழியாக அங்கீகாரம் பெற்ற கவிதைகள் அச்சுவழியாக வாசகர்களின் அங்கீகாரம் தேடி வாசகர்களின் கைகளுக்கு வந்துள்ளது.

கண்ணதாசன் பெயரையும் பாரதிதாசன் பெயரையும் தமது அமைப்பின் பெயராக கொண்ட அமைப்புகளிடம் இருந்து இந்த விருதுகள் கிடைத்ததாலோ என்னவோ இவ்வேளையில் பாரதியினதும் கண்ணதாசனின் படைப்புகளையும் என்னால் நினைத்துப் பார்க்காமால் என்னால் இருக்க முடியவில்லை. இருவருமே தமது படைப்புகளை எந்தவொரு எல்லைகளுக்கும் நிறுத்தி வைக்கவில்லை. பல தளங்களில் தங்கள் படைப்புகளை பரவ விட்டவர்கள்.’தீக்குள் விரலை வைத்தால் உன்னை தீண்டும் சுகம் தோன்றுதடா’ என மிக உயர் பத்தி நிலையைப் பாடிய பாரதியே ரஸ்ய விடுதலை பற்றியும்… ‘காதல் காதல் காதல் காதல் போயிற் சாதல் சாதல் சாதல்’ என்நு காதல் பற்றியும்… எளிதாக அனைவருக்கும் புரியும்படி ‘ஓடி விளையாடு பாப்பா என்று குழந்தைகளுக்காகவும் பாடி விட்டுச் சென்றான். அவ்வாறே கண்ணதாசனும் ‘நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்’ என்று காதலினுள் தத்துவத்தை எடுத்துச் சொன்ன அதே எழுதுகோலே குடிமகனே பெருங்குடி மகனே’ என்ற ஆபாச பாடல்களும் எழுதினான். ஆனால் நிலைத்திருப்பவையை காலம் தீர்மானித்து விட்டது.

இவ்வாறே சகோதரியின் இந்தப் படைப்புகள் எந்த புவியியல் சார்ந்தோ அரசியல் சார்ந்தோ இல்லாது எல்லா எல்லைகளையும்; தாண்டிப் பயணப்படுகின்றன.இலங்கையில் பிறந்து டென்மார்க்கில் வாழும் இந்தக் கவிதாயினி இந்தியாவின் காவிரி நீர்பிரச்சனை பற்றியும் தீயில் எரிந்த குழந்தைகள் பற்றியும் கவலை கொள்கின்றார். இயற்கையைப் பார்த்து மகிழ்கின்றார். இழிசெயல்களைப் பார்த்து ஆவேசம் கொள்கின்றார். சில மரணங்கள் அவரை தூங்கவிடவில்லை.உலகமெங்கும் நடைபெறும் நிகழ்வுகளும் அவை மீதான இவரின் பார்வைகளும் கருக்கள் ஆயிருக்கின்றன.அவை கவிதைகளாக பரிணமித்துள்ளன.

பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்ற 83 கவிதைகள் இங்கு நூலாகக் பிரசுரமாகியிருக்கின்றன.இலக்கிய வாழ்விலும் சரி… உலக வாழ்விலும் சரி… ஆசிரியயை வாழ்த்தும் வயது எனக்கில்லையாயினும் டென்மார்க்கில் வாழும் சக எழுத்தாளனாக அவரின் படைப்புகள் உலகமெங்கும் உள்ள தமிழ் வாசகர்களின் நெஞ்சங்களில் இடம் பெற வேண்டும் என்று ‘கல்லுக்குள் தேரையையும் அந்தத் தேரைக்கு உயிரையும் கொடுத்த’ ஆண்டவனையும் இயற்கைiயும் வேண்டிக் கொள்கின்றேன்.

அன்புடனும் ஆசிகளுடனும்

வி. ஜீவகுமாரன்-

நினைவு நல்லது வேண்டும்.

மேகலாவின் அணிந்துரை

2. எனது 6வது – 7வது நூல்கள்.

இது பதிவுகள் இணையத் தளத்தில் இணைய
ஆசிரியர் வ.ந. கிரிதரனின் ஆக்கம்
எனது நூல் பற்றிய அவரது உரை

சிட்னி உதயசூரியன் ஐயாவின் வாழ்த்து உரை.