25. பாமாலிகை (தாய்நிலம்.) 60. விழித்தெழு தாயகமே!

விழித்தெழு தாயகமே!

செழித்த நல் சிறப்புகளை முற்றாக
மழித்துச் சுருட்டிட ஒரு படையாக
வழித்து நாளும் விவரமாய் வேட்டையாடுகிறது.
விழித்தெழு என் அருமைத் தாயகமே!
00

அறிவைப் பாவித்து அகந்தையை அழித்து
குறிவைத்து உயர் குடியாக நாட்டை
நெறியோடு நடத்தி நன்னிலை காண
வெறியோடு செல்ல விழித்தெழு தாயகமே!
00
ஒருமைப்பாடு ஒடுங்காது ஒற்றுமை ஓங்கி
ஒருமித்து மடமையை ஒழித்து விழித்து
அருமை மொழியாம் அன்னைத் தமிழோடு
செருக்குடன் நாட்டை சிறப்பாக்க விழித்தெழு!
00
அதிகாரம் எம்மை அதட்ட விடாது
மதியோடு அன்பை முன்னெடுத்து நல்ல
புதிய உதயம் வெளித்திட எம்
புத்தியோடு தன் மானமாய் எழுவோம்.
00

12-7-2022

24. பாமாலிகை (தாய்நிலம்.) 59. முன் கதைச் சுருக்கம். – அஞ்சலி

முன் கதைச் சுருக்கம். – அஞ்சலி
0


எங்கள் இன்பம் எங்கள் துன்பம்
எங்கள் கையில் என்பது பொது
எங்கள் நிம்மதி எங்கே! அதை
எவர் எடுத்தார் பெரும் கொள்மதியாய்!
எங்கள் நாடு நரகத்தில்
எவர் செய்தார் அத் துரோகத்தை
எவர் செய்த பிழை இது!
எவர் திருத்தி அமைதி காண்பார்!
0
காட்டு மிருகமாய் மனிதரைச் சுடுதல்
கடவுள் பலியாய் வெட்டி வீழ்த்தல்
நாட்டு மனிதர் செய்கிறார் தினம்
பூட்டுகிறார் ஏன் ஆறு அறிவை!
தீட்டும் ஆணவச் செருக்கினால்
நாட்டுக்கு நாசம் நிறைவது கொடுமை
வீட்டு ஐந்தறிவு மிருகமாய் இன்று
ஆட்டம் போடும் மனிதர்கள் அங்கு.
0
சிங்களப் பிரபுத்துவப் பரம்பரை ஆட்சிகள்
சீருடன் செழித்து நிலைத்து ஊன்றிட
சிங்களத் தமி;ழ்ச் சகோதரத்துவ வாழ்வைச்
சிறிதேனும் ஆட்சியாளர் ஏற்கவில்லை
சிங்கள பௌத்த காவலாளிகள் தாமென்று
சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார் என்றும்
சிக்கல் திரைகளாற் பிரித்தே ஆள்கிறார்
சிங்கள தமிழுறவைச் சிறுசிறு தீவாக்கிட்டார்
0
இவைகளை உடைத்து நொறுக்க
இன்னுயிர் ஈந்த வீரர்கள் இன்று
மா வீரர்களாய்க் கல்லறை மடியில்.
குட்டக் குட்ட குனிய மாட்டோமென்றார்
வெட்டப் பட்டும் வெடிகளாலும் இன்று
கட்டிடத்தினுள் கல்லறையினுள் வாழ்கிறார்.
கொட்டுகிறோம் மலர்களோடு எம் அஞ்சலிகளை
மட்டுப் படுத்த முடியாத அஞ்சலிகள் இது
0


27-11-2007. வேதா. இலங்காதிலகம். (இலங்கைத் தமிழிச்சி)
டென்மார்க்.
(இலண்டன் தமிழ் வானொலியில் நான் வாசித்த கவிதையிது)

22. பாமாலிகை (தாய்நிலம்.) 57. நம்நாடு (எதுகை – ண்)

நம்நாடு (எதுகை – ண்)

ண்டகோளத்தில் என்னிலங்கை..
அண்மைப் பயணமல்ல
அண்டுவார் வெளிநாட்டவர்.
மண்ணுயரம் பேதுருதாலகாலை ( இம்மலை 2524 மீட்டர் உயரமுடையது)

¤
ஆண்டவரடி சிவனொளிபாதத்தில் (மலை)
அண்ணனோடேகலாம் நம்நாடு.
ஆண்மையாளரங்கு வீரர்.
ஆண்டியும் நாட்டிலுள்ளார்.
¤
உண்டாகிறதங்கு தேயிலை.
ஊண் (உணவு) சாலைகளுண்டு.
உண்ணாவிரதப் போராட்டமுண்டு.
எண்ணெழுத்தாரம்பமெனக்கு நம்நாட்டில்.
¤

ஓண்டியாயும் வாழ்கிறான்.
ஓண்டிக்குடியும் அங்குண்டு.
கண்குளிர்ச்சி நம்நாடு.
கண்டி மலைநாடு.
¤

ண்வாய்கள் ஏராளம்.
கண்காணிப்பு தாராளம்.
கண் மயக்கும்
பெண்களும் அதிகம்.
¤
குண்டு மணியங்குண்டு. (குன்றிமணி)
கூண்டுக் கிளியுமுண்டு.
சுண்ணாம்பு நிறையவுண்டு.
பண்டைத்தெருப்பு இடமுண்டு.
¤
தண்டமிழ் வளருதங்கு.
தண்டபாணி கோயிலுண்டு.
முண்டாசு கட்டுவாரங்கு.
விண்ணப்பமிட்டால் விசாபெறலாம்.
¤

14-8-16

21. பாமாலிகை(தாய்நிலம்.) 56 மாவீரச்சூரியர்…..இது போதும்!…..

மாவீரச்சூரியர்…..இது போதும்!…..

மாண்புடை போர்ப் பரணியின்
மாவீரச்சூரியர் இவர்.
மாலையிட்டு விளக்கேற்றுகிறோம்.
மாபெரும் உணர்வு தூண்டுகிறார்.

சுடுகுழல் – ஆபரணம்.
படுக்கைத்தோழி – மரணம்.
எடுத்த வாழ்வின் முடிவு
விடுதலைச் சாவில் முடிந்தது.

சுருளான கால அகராதியில்
அருளிய வாழ்வு
இருளாகும் போது
பொருளற்றுப் போகிறது.

மானத்துடன் முன்னின்று
சயனைட் குப்பியுடன்
அயராது போரிட்டனர்.
வியத்தகு மாவீரராகினார்.

யுத்தக் காரிருட்டில்
எத்தனையோ மின்மினிகளாக,
மொத்த நம்பிக்கையொளியாகினர்.
சத்தாகினார் ஈழவிடுதலைக்கு.

விரிந்த கரத்துள் மலர்கள்,
எரியும் விளக்குகள்,
சரிந்த சாகச வீரர் சமாதியில்
பரிவோடு தூவுகிறோம் அஞ்சலிக்காய்.

இது போதும்! இனி வேண்டாம்!
புதிய கல்லறைகள் இனி வேண்டாம்!
விதி மாறட்டும்! மாவீர விதைகள்
பதிவாகியது போதும் என பிரார்த்திப்போம்!

நகுலவேணி
ஸகன்டிநேவியன்.

26-11-2008 ஐரிஆர் வானொலியில் ல் நான் வாசித்தது
25-11-2008 தமிழ் ஆத்தேர்ஸ்.கொம்ல் இணையத்தளத்தில்
27-11-2009 ரிஆர்ரி வானொலியில் நான் வாசித்தது.

20. பாமாலிகை (தாய்நிலம். – 55.

ஓளி!

மின் காந்தக் கதிர் வீச்சுகள்
தென், வட துருவ ஒளியெனவும்
என் கண்ணிற்குப் புலனாகும் ஒளி
நன் வேகமுடை வீரிய இயக்கம்!

நேசம் உடைய வாசமிகு ஒரு
தேசம் எமக்கில்லை என்று இன்று
பாசமாய் ஒளி ஏந்தல் இன்று
கூசும் நிலை இது மாறட்டும்.

வளி என்று பரவட்டும் ஞானம்
ஒளி பரவ மடைமை அழியும்.
களி பவளமாய் மிளிர்தல் ஆகும்.
ஓளி ஏற்றுவோம் இருள் அகலட்டும்!

அடர் இருள் தேசம் ஒளியாகட்டும்!
படரும் ஒளி அமைதி தரட்டும்!
தொடரும் தடைகள் எளிதாய் விலகட்டும்!
இடரற்ற அரசியல் மலர்ந்து செழிப்பாகட்டும்.

27-11-2018

19. பாமாலிகை (தாய்நிலம்.) – 54. புன்னகைக்க மறந்து பூந்தளிர்கள்.

Mother With Children In Park

புன்னகைக்க மறந்து பூந்தளிர்கள்.

இயற்கை வாழ்வை அனுபவிக்க ஈழத்தில்
இசைந்த சூழ்நிவை அணுகாத வேளையில்
கசந்த வாழ்நிலை காணும் பிள்ளைகள்
வசந்தமாய்ப் புன்னகைக்க மறந்த பூந்தளிர்கள்.

புதுவித மூளைச்சலவையால் காலத்தில்
புலம்பெயர் இளந்தளிர்களும்
புன்னகைக்க மறந்த பூந்தளிர்களாவாரோ!
மென்னகைத்து உலகை வெல்வாரோ!

13-10-2000
(இலண்டன் தமிழ் வானொலி புதன் கவிதை)

18. பாமாலிகை (தாய்நிலம்.) – 53. அகதி வாழ்வு

அகதி வாழ்வு

அகதி வாழ்வின் அல்லல் தெரியாது
சகதிப் பிரிவு, உறவுத் தவிப்பறியாது
மிகவான உயரிணைந்த மண்ணைப் பிரிந்து
சுகமற்ற காலத்தில் புலம்பெயர்ந்திங்கு
திகதியற்று ஊர் திரும்ப முடியாதிங்கு
தொகுதியின்று தனித தீவுகளாய் நாமிங்கு.

கலாச்சார இடிபாட்டிலெம் கவனம் நெரிபட
காலடிதடுமாறி அன்னியமொழியால் விழி பிதுங்க
குலாதார வாரிசுகள் அடிப்படை ஆதரவிழக்க
காலாதி காலமான பண்பாட்டுப் பாதை மாற
மூலாதார வாழ்வின்சீலம் நிலைமாற
கோலாகல வாழ்விங்கு நற்கோலம் மாறுது.

லைமுறைகள் தம் வாழ்க்கைத் துணையை
தலைமாறி அன்னிய சூழலில் தெரிதல்
தலையெடுக்கும் புலம்பெயர் பிரச்சனை
தலையிறக்கமிது எம்மின அழிவு நிலை.
தலைவாழையிட்டுத் தலையிடும் நிலையுமில்லை.
தலைவிதியிது பும்பெயர்ந்த நிலையிங்கு.

சுள்ளெனக் குததும் ஊசிக்குளிரில் தினம்
உள்ளம் வேதனையுடன் உடல் பலமிழக்கும்.
வெளிநாட்டில் நாம் பணம் காய்க்கும் மரமாம்
உள்நாட்டில் பணம் பிடுங்கம் தரம்
கொள்ளையிலேயிது கடற்கொள்ளைத் தரம்
வள்ளத்தில் வரும் போது துடுப்புடையும் தரம்

28-11-2005
(துவக்கு.கொம் கவிதைப் போட்டிக்கு எழுதியது.
21-3-2006 ரிஆர்ரி தமிழ் அலயில் வாசித்தது.

17. பாமாலிகை (தாய்நிலம்.) – 52. ஆண்டவனும் உள்ளாரோ!

ஆண்டவனும் உள்ளாரோ!
————————————-

வண்ண இயற்கைத் துறைமுக மென்று
கண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.
எண்ணெய், துறைமுக அபிவிருத்தியென்று
எண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.

நல்ல பொருளாதாரத் திட்டம் என்று
சில்லுச் சில்லாகச் சின்ன நாட்டை
பல்லிளித்துக் கொடுக்கிறார் பலன் எடுக்க,
கையளித்து ஆப்பிழுத்த குரங்கு ஆகிறார்.

முன்னைய சனாதிபதி பிரதம மந்திரிகள்
பின்னி முடிச்சாக்கிய இனப் பிரச்சனை
பென்னம் பெரிய விசுவரூபம் எடுத்து
சின்னா பின்னம் ஆக்குகிறது பல்லுயிர்களை.

கொல்லும் வெறி கொண்ட தலைமை!
நல்ல போர் நெறியற்ற இராணுவம்!
எல்லாமாய் ஈழத்தில் செய்யும் கொடுமை,
சொல்லும் தரமன்று! இல்லையொரு தர்மமங்கு!

வல்லுறவுப் பாலுறவு! வயது முதிர்ந்;தோர்,
செல்ல மழலைகள் விதிவிலக்கின்றி அழிக்கிறார். கல்லுளிமங்கனையும் கரைக்கும் நிகழ்வுகளங்கு!
செல்லுகளிலும் இரத்தம் கொதித்துப் பாயும்!

பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மீது!
ஊரங்கு அழியுது! உயிரங்கு பிரியுது!
யாரங்கு கேட்பது! ஆண்டவனும் உள்ளாரோ!
சீரற்ற நாடகம் அரங்கேறி ஆடுது!

15-5-2009

http://www.vaarppu.com/view/1807/

16. பாமாலிகை (தாய்நிலம்) – 51. மீண்டு(ம்) வருகிறோம்.

மீண்டு(ம்) வருகிறோம்.

ஆண்டுஆண்டாக நாம் எமது பாதையில்
தாண்டி வந்தது போராட்டமாகத் தான்.
பூண்டகோலம் மாறாது தீவைச் சிங்களமாக்க
வேண்டிய பாதையில் தான் அரச பயணமும்.
தண்டம் அடக்குமுறையென தாண்டியது போர்.
ஈண்டு வட்டம் தொட்ட இடத்திற்கே.

ஆடம்பர வாழ்வு சலுகைக்காக ஒரு கூட்டம்.
சுயதொழில் செய்துயர்ந்தோரை அலட்சியம்
செய்யுமொரு கூட்டம். தமிழீழம்இ போர்
இலட்சியமென்போரை இழிவு படுத்துமொரு
கூட்டமெனஇ ஊரையடித்து உலையில் போடுகிறார்கள்.
முண்டியடித்துக் கொண்டாடுகிறாரின்று பாராளுமன்றக் கதிரைக்கு.

இன்னபல குளப்பங்கள், சுனாமிகள், அழிவுகள்,
இறப்புகள் போர் என்பன மறக்காத வடுக்களாக.
உரிமைகள், உறவுகள் மாற்ற முடியாதவைகள்.
காலமெனும் தொடர்கதையில் மீண்டு(ம்)
வருகிறோம் – எழுவதற்குத்தான்.

.28-2-2010