12. Haikuu..

Sathar Mohamed Asaath‎ to ஹைக்கூ பூஞ்சோலை

12-4-2020· 

#தரப்பட்ட_படத்திற்கு_
#ஹைக்கூ_எழுதுவது_எப்படி?
“””””””””””””””””””””””””””””””””””””””””
“”””
ஹைக்கூ எழுத பல வழிமுறைகள் இருக்கலாம். பலர் அதைப் பெரிய வித்தை என்றும் கருதலாம்.

ஆனால் நான் இங்கு சொல்லப் போவது அதன் அமைப்பு ரீதியாக மிக எளிதானது.
புதியவர்களுக்கு வரப்பிரசாதமானது.

ஏதாவது ஒரு புகைப்படம்–

தரப்பட்ட படத்தில் ஒரு சிறுமி அல்லது சிறுவன் தலையில் ஒரு பெரிய விறகுக் கட்டு சுமந்து வருவதாக உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

மொத்தம் மூன்றே வரிகள்.
அதில் முதல் வரி சும்மா ஒரு பெயர்ச்சொல்.

இங்கு படத்தைப் பார்த்துவிட்டு

சுமை

என்று போடுவோம். ஆனால்
தனிச் சொல் முதல் இரு வரிகளில் வரக் கூடாது என்பதற்காக…

தலையில் சுமை

அடுத்து இப் பெயர்ச் சொல்லை பொருத்தமான ஏதாவது ஒரு வினைச்சொல் கொண்டு முடிப்போம். அதுவே இரண்டாவது வரி.

தூக்க முடியவில்லை
அல்லது
தாங்க முடியவில்லை

இப்படிப் பொருத்தமாக
எப்படி வேண்டுமானாலும்
போட்டுக் கொள்ளலாம்.

இப்போது முதல் இரு வரிகள் கிடைத்தாயிற்று.

தலையில் சுமை
தாங்க முடியவில்லை

ஹைக்கூவில் இம் முதல் இரு வரிகளும் ஒரு கூறு. இவை ஒரு காட்சியைக் காட்டும்.
இங்கு தலையிலுள்ள சுமையைத் தாங்க முடியவில்லை என்பது ஒரு காட்சி.

கடைசியாக ஈற்றடி.

ஆனால் அது வாசகர் எதிர்பாராததாக இருக்க வேண்டும். ஆகவே இரண்டாவது வரிக்கு பொருத்தமான ஒரு செயப்படுபொருளைப் போடுவோம்.

இங்கு எதைத் தாங்க முடியவில்லை?
முன்பு ‘தலைச் சுமை’ என்று போட்டோமல்லவா? அதற்று மாற்றமாக

வறுமை

என்று போடுவோம். அதை மேலும் சிறப்பாக்க..

இளமையில் வறுமை

எனப் போடுவோம்.
அடுத்து
பின்னிரு வரிகளையும் பார்ப்போம்

தாங்க முடியவில்லை
இளமையில் வறுமை..!

இது இளமையில் வறுமையைத் தாங்க முடியவில்லை என்ற வேறொரு காட்சியைக் காட்டுகிறது அல்லது கருத்தைத் தருகிறது.

இனி மூன்று வரிகளையும் ஒன்றாகப் பார்ப்போம்.

தலையில் சுமை
தாங்க முடியவில்லை
இளமையில் வறுமை!

அவ்வளவுதான்! முடிந்து விட்டது!

ஆனால் எது எப்படியாயினும்
எழுதிய மூன்று வரிகளுக்கும் ஏதோ
தொடர்பு இருக்க வேண்டும்.

இங்கு அந்தச் சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ தலையிலுள்ள சுமையைத் தாங்க முடியவில்லை.

ஆனால்… அதைப் பார்க்கும் நமக்கு

‘இளமையில் வறுமை’

எனும் கொடுமையைத்
தாங்க முடியவில்லை
என்று இதன் பொருள் வரும்.

நாமும் இளமையில் வறுமைப் பட்டிருக்கலாம். இன்னும் யோசிக்க யோசிக்க இன்னும் வரும்.

ஹைக்கூவுக்கு புதியவர்கள் படங்களைப் பார்த்து ஹைக்கூ எழுதும் போது இந்த முறையைப் பின்பற்றி எழுதிப் பாருங்கள், வெற்றி நிச்சயம்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

இவண்,
என்றும் உங்கள் தோழமையுள்ள,

சத்தார் எம். அஸாத்.

11. Haiku

(மூன்று வரிகள்..
இரண்டாவது வரி சற்று நீளமாக நிகழ்காலத்தில்.
மூன்றாவது வரி திருப்பமாக
பெயர்ச்சொல்லில்..
மூன்று வரிகளும் வரிப்பிளவுடன்..)

(தனிச் சொல் முதல் இரு வரிகளில் வரக் கூடாது)

ஹைக்கூவில் முதல் இரு அடிகளும் சேர்ந்து ஒரு கூறாகும்

(சரியான கைக்கூ எழுத உதவும் வரிகள் என்று இதைப் பதிகிறேன்.)

ஹைக்கூவில் ( நிலவில் ஒரு கைக்கூ குழுவில்… )
முரண்_அழகு

ஹைக்கூ கவிதைகளில் கையாளப்படும் உத்திகளில் ஒன்று முரண் ஆகும். இதனைக் கையாண்டு எழுதப்படும் ஹைக்கூக்கள் தனித்துவமான ரசனையைத் தருவதோடு இலகுவில் மறக்காமல் நெஞ்சில் நிலைப்பவையும் ஆகும்.

அது சரி… முரண் என்றால் என்ன?
அதை எப்படி ஹைக்கூக்களில் பயன்படுத்துவது என உதாரணங்களோடு பார்ப்போம்.

எதிரும் புதிருமாய் மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும்.

இது

சொல் முரண்
பொருள் முரண்
சொற்பொருள் முரண்

என மூவகைப்படும்.

  1. சொல் முரண்
    ”””””””””””
    கருப்பு – வெள்ளை
    ஏற்றம் – இறக்கம்
    இன்பம்- துன்பம்

என எதிர்ச் சொற்கள் கவிதையில் இடம்பெறச் செய்துஎழுதப்படுவது சொல் முரணாகும்.

எ. கா.

ஏறும் வயது
இறங்கிச் செல்கிறது
வாழ்நாள்..!

இங்கு ஏறுதல் × இறங்குதல் எனும் சொற்கள் முரணாக அமைந்துள்ளது.

  1. பொருள் முரண்
    ””””””””””””’
    எதிரும் புதிருமான செயற்பாடுகளைக் கொண்ட கருத்துக்கள் பொதிந்தாக எழுதப்படுவது பொருள் முரண் எனப்படும்.

எ.கா.

முட்டை வாங்கி வந்தாள்
சித்திரப் பாடத்தில்
ஓவியா..!

இங்கு ஓவியா எனும் பெயரை வைத்துக்கொண்டு சித்திரம் வரையத் தெரியாமல் இருப்பது
என்பது எதிரும் புதிருமான பொருள் – அதாவது கருத்தாக அமைந்துள்ளது.

  1. சொற்பொருள் முரண்

கவிதையில் எதிர்ச்சொற்கள் பாவிக்கப் படுவதுடன் கருத்தும் எதிரும் புதிருமாக அமைந்திருக்கும்.

எ.கா.

அமைதிப் பேச்சுவார்த்தை
அடடா… முடிந்தது
அடிதடியில்

இங்கு அமைதி × அடிதடி எனும் எதிர்ச்சொற்கள் இடம்பெறுவதுடன் கருத்தும் நேர் எதிராய் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய முரண் கவிதைகளைத் தொடுப்பது கவிஞர்களுக்கு இலகுவாக இருக்கும். நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே!

சத்தார் எம். அஸாத் – 26-4-2018

10 ஹைக்கூ –

  1. விவசாயி விதைக்கிறான்.
    வானம் பொய்த்தது.
    விவசாயி
    தற்கொலை. 6-3-2018.

2. நீர்வீழ்ச்சி

கட்டுக்குள் அடங்காது
பொங்கிப் பெருகியது..
நீர்வீழ்ச்சியாய்க் கண்ணீர்.

22-2-2020

பூமியின் சுழற்சியில் //
அச்சு சாய்கிறது. //
பருவகாலங்கள் வசந்தமுமாகிறது.//

16-2-2020

Image may contain: 1 person, eyeglasses and closeup

9. ஹைக்கூ

ஹைக்கூ

  1. காலாவதியான பொருட்கள்
    ஏழ்மையின் உருவம்.
    மனித அவலம்

2.கழிவுப் பொருட்கள் கடற்கரையில்
வயதுவரம்பினெல்லையில் ஆச்சி
கையேந்தும் நிலை

3. எலும்பெண்ணும் கோலம்.
ஏழ்மையின் பரிதாபம்
இரந்துண்டு வாழ்தல்.

8-4-2018

8. ஹைக்கூ (49)


#கருப்பொருள்:-#ஹைக்கூவில்_அஃறிணை_உயிர்கள்


1. முடி சூடிய அரசன்
முனிவரும் மயங்கும் நடனம்
அழகு
மயில்


2. வீட்டை உடைத்தது
காட்டை, கோயிலை உடைத்தது
காட்டு யானைகள்.

ஒட்டகத்திற்குத் தென்றல்
பாசாங்கற்ற கம்பீரம்.
பாலைவனப் பேய்க் காற்று.

அவளின் கூட்டுமாறிற்குக்
குச்சிகள் தயார் நிலையில்
இலையுதிர் காலம்.

16-2-2018

7. ஹைக்கூ (45)

37.

pasi

தீராப் பாசமுடன்
தாயுமானவன் அணைப்பு.
அமுதூட்டும் அண்ணன்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-4-2018

*

38.

maruthaany-2

இப்படியேயொரு நிழற்படமெடு
கலையோடு கண்ணுமாகும்
மருதாணி வண்ணம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 3-4-2018

*

39.

kaalai poluthu

கண்ணாடி நீர்
மரத்துடன் காத்திருக்கிறது.
கதிரவனைத் தரிசிக்க
11-4-2018

*

16-4-2018    இயற்கை சார்ந்த

40. இலைகள் சிவந்துள்ளன
குச்சிகளாகும் மரங்கள்
இலையுதிர்காலம்.

42. இரவில் நடையுலா
பயந்த அனுபவம்
சருகினுள் பாம்பு.

43. இலைகள் உதிர்ந்ததால்
நடைபாதையில் அமைதியில்லை
சருகுகளின் சத்தம்.

44. குளத்து நீர்
அழுக்குகள் மிதந்தது
காய்ந்த இலைகள்.

45. சருகுகளால் வழுக்கி
விழுந்தாள் பிள்ளை.
மழை வீழ்ச்சி
__________________ 

வேறு:-

கலையோடு இயற்கையை நேசிக்க
சிலைகளினழகை கோயில்களில் இரசிக்க
நிலையான சுகாதாரக் காற்றெடுக்க
விலையற்ற ஆனந்தம் ஆன்மாவிற்கு
ஆரோக்கிய உணவை மாற்றாது
ஆனந்தித்து உணவை இரசிப்பது
ஆதார சக்தி உடலது
ஆதாய அதிமூலமது இதுவே

2019

 

waves

6. ஹைக்கூ (36)

 

garden

*

32.  வசந்தகாலம்.

பூக்களின் விதானம்.
பசுமைப் பூங்கம்பளம்
வசந்தருது திருமணமோ

20-3-2018

 

anil

*

33.   குடை மடங்கி
        என்னை மூடிக்கொள்ளுமோ!
        பயந்த அணில்

24-3-2018

kuliyal

*

34.    குளிக்க வேண்டும்
         குடிக்க வேண்டும்
         நீரை சேமியுங்கள்!

27-3-2018

chulal

*

35.   சுழலில் அகப்பட்ட
        பெண்ணின் நிலை
        வன்முறைக் காற்று

28-3-2018

chulal-2

*

36.   காவேரி காய்ந்துவிட்டது
        விவசாயி கண்ணீர் வடிக்கிறான்.
        குளங்களைக் கட்டுங்கள்.

31-3-2018

 

maxresdefault (3)k

5. ஹைக்கூ (31)

 

poonai

*

27.       15-3-2018

  வேட்டையாடுவோர் பலர்

    அதில்    நானுமொருவன்.

    நன்கு விழித்திரு

*

28.   தலைப்பு:- தேனீர்.

இலங்கைக்கு உச்ச நிலை.
மலையக மக்களால்
ருசிக்கும் தேனீர்.
16-3-2018

*

29.

கரு – தாவரங்களும், பூக்களும்.

1. நாளும் உணவாக்குங்கள்
நீரிழிவு நோய் கட்டுக்குள்ளாகும்.
ராகி புட்டு

2. அடியிலிருந்து நுனிவரை
அத்தனையும் பயனாகும்
வாழை மரம்.

31-     3.    நீர்மட்டத்தின் மேல் மலரும்
தெய்வங்களின் ஆசனம்.
தாமரைப் பூ

*

 

trees...

 

4. ஹைக்கூ (26)

hai

*

20.    

பள பளக்கும் இலைகள்
மின்னொளிக் கதிர்கள்
அதிகாலைச் சூரியன்

8-3-2018

kaalai

21. வீறுடன் சண்டையிடைவேளை
       விசுவரூபப் பசி
      சல்லிக்கட்டுக்   காளைக்கு
        7-3-2018

22. 

8-3-2018

மேய்ச்சல் நிலத்திலிரு
மாடுகள் முட்டி மோதுகின்றன.
ஊர்க்    கலவரம்

varumai

23.  

பாத்திரம் துலக்கினாலும்
பார்வை பாடசாலைச் சிறுவரில்
அறிவுப் பசி.

13-3-2018

crow

24.            14-3-2018
1. நாளும் குளித்தல்
சுகமான அனுபவம்
சுகாதாரம் பேணல்

2. பொறுமையாகக் காத்திருப்பு
குளித்து உண்ண.
ஒற்றுமையே பலம்

26.  3. இலைதுளிர் காலம்
காகங்கள் தேடுகின்றன
பசிக்கு இரை

*

kutuvi-a

3. ஹைக்கூ (19)

poonai

*

13       வேதனை பொங்குகிறது.
           விழியிலும் அனல்
            பசிக்   கோபம்.

14.        துப்பாக்கி வெடிகள்
             குமுறுது நெஞ்சம்.
              இனத்   துவேசம்

15.        பிரளய குமுறல்.
              சுயம் தின்னுமனல்
              இளமையில்  வறுமை

road

*

2-3-2018.

16.    நீண்ட பாதை
         சகதியில் ஏழ்மைச் சிறுவர்
         மாரி காலம்.

17.     பசுமையோடு பழைய வீடு.
           சகதியில் வண்டியோட்டுகிறார்.
          ஏழைச்   சிறுவர்.

18        மடிக்க முடியாது நீண்டது.
             தடம் பதிக்கலாம்
             மேடு பள்ளச் சாலை

muddai

19.         முட்டி உடைத்தேன்
               இந்த ஓட்டையா!
                புதுப்  பிறப்பு
                    5-3-18

*

easter-eggs-borders.jpg