15. சோழா

Vetha Langathilakam

  · 

Public

கண்ணான கண்ணே இனிய பிறந்தநாள்

எட்டும் வரை எட்டு சோழா!!!!!

கிட்ட இருந்து வாழ்த்துவது போல

பட்டுக் கண்ணனை வாழ்த்துகிறோம்.

எல்லா வளமும் நலமும் நிறையட்டும்.

இறையாசி நிறையட்டும் தாத்தி அப்பப்பா

அத்தை குடும்பம் அப்பா எல்லோரும் வாழ்த்துகிறோம்

Happy Bday kanna… 17-9-2022

13.  சோழா

விஐயதசமி சோழா. 2017

விஐயதசமி சோழா.

October 18, 2017  · எங்கள் சோழா சின்ன பேரனின் ஏடு தொடக்கலில் நான் விரல் பிடித்து எழுதியது மட்டும் தான்.சோழா! சொல்லுங்கோ என்று அ விலிருந்து அகேனம் வரை தமையன் சொல்லிக் கொடுத்தார். சோழாவும் தடங்கலின்றி அழகாகக் கூறினார்.எங்க மகன் திலிபனுக்குச் சரியான ஆச்சரியம் தன் பிள்ளைகள் திறமை பற்றி….

12. சோழா

பதினேழு – இரண்டாயிரத்திருபத்தொன்று –புரட்டாதி
(எங்கள் இரண்டாவது பேரனுக்கு)

00
இன்றைய நாள் இணைந்தது
இன்பப் பிறந்தநாள் சோழனுக்கு
இன்பமாய் வட்டமிட்டு இன்னும்
இன்னும் வரட்டும் பொன்னான பிறந்தநாட்கள்!

00
மனதில் எதையும் மறைக்காது
மகிழ்ந்து கேள்வி மழையாக்கும்
மனோதைரியம் மகத்துவமானவன்!
மகா உன்னத கிரகிப்பாளன்!

00
மண்ணிலே அன்பு பெருக
மதுரமாய் ஆசைகள் நிறைவேற
மதுரசமாய் தமிழோடிசைந்து வாழ
மங்கலம் உண்டாகட்டும் செல்லமே!

00
அண்ணன் வெற்றி அப்பா
அம்மா உறவுகளோடு ஒன்றாக
அன்போடு ஆரோக்கியம் பெருக
அருமையாய் நீடு வாழ்க தங்கமே!

00
அப்பப்பா – தாத்தி –அத்தை –மாமா அனைவரும் வாழ்த்துகிறோம்.
டென்மார்க் – பெரியபிரித்தானியா 17-9-2021

8. சோழா 14 தேவாரம் பாடுவோமே

தேவாரம் பாடுவோமே

பாடுவோமே இன்று பாடுவோமே
ஆடுவதின்றித் தேவாரம் பாடுவோமே
ஈடு இல்லா இறை புகழை
ஈடுபாட்டுடன் பாடுவோமே!

மனஅமைதி ஒழுக்கம் வளர
மனகிழ்வுடன் பாடுவோம்
கனமான கவலைகள் தீர
மனச் சோர்வின்றிப் பாடுவோம்.

கொண்டாட அப்பப்பா தாத்தியுடன்
கொள்ளைப் பிரியமாய்ப் போய்வர
கொரோனா நோயை அழித்துவிட
கொடையாய் உன்னருள் தருவாய்!

ஏன் வந்தாய் கொரோனா!
ஏன் பிரித்தாய் உறவுகளை!
தேன் போன்ற வாழ்வை
தேங்கிட வைத்தாயே எதற்காக!

18-10-2020

7. சோழா. (13) உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

திருவாசகம் 19ம் பாடல் முதல் வரி போல சமூகத்திடம் (பாடசாலைக்கு) எங்கள் இரண்டாவது குட்டிச் செல்லம் சோழா 11-8-2020 சேர்க்கப் பட்டார்.
சோழாவின் பாடசாலை முதல் நாள் 11-8-2020

எம் கையிற் பிள்ளை
உமக்கே அடைக்கலமாம்
இரண்டு மூன்று மணியளவு
இணைப்பு பாடசாலையுடன்.

சோழாவின் அரிவரி வகுப்பு
சோதியாக ஆரம்பம், தனிமையில்லை
சோர்வில்லை. அண்ணா வெற்றி அருகிருந்தார்.
சோபனமாக (நன்னிமித்தமாக) அறிவுக் குத்துவிளக்கேற்றினார்.

இத்தரையாம் மேற்குலகில் உதித்தவர்
மத்தியாம் வயலில் காணமாட்டார்
கத்தரித் தோட்டத்து வெருளியை.
மொத்தமான கட்டிடக் காட்டினுள் படிப்பார்.

பனிமனிதன் செய்து வழுக்குவார்
இனிதான தமிழும் படிப்பார்
கனிவாய்க், கருத்தாய் உயருவார்
கல்வி இனிக்கட்டும் தேனாக.

புது நட்பு, புது அறிவு,
புத்கச் சுமை முதுகில்
புன்னகையோடு பெற்றவர் கவு
பத்திரமாகப் படித்து உயர்வாய் செல்லமே.

17-8-2020