7. கவியரங்கம். 9-7-2016 (7வது எத்தனம்)

26ம் கவியரங்கம். 9-7-2016 (7வது எத்தனம்)VETHA

சமுதாயச் சிந்தனைக்கு வித்திட்டவர்…. ————
தமிழ் வணக்கம்———————————————
தமிழ் என்னுயிர்
தமிழ் என்னுயர்வுக்கு வான்
தமிழ் அறிவுக்குத் தோள்
தமிழ் எம் பிறவிக்குத் தாய்.
தமிழ் எம் அசதிக்குச் சுடர் தந்த தேன் என்கிறார் பாரதிதாசன்
அத்தகைய தமிழுக்கு வணக்கம். —
தலைமை வணக்கம்—————————————————–
26ம் கவியரங்கத் தலைமையே!
திருவாளர் ராமதாஸ் காந்தியே! வணக்கம்.
சமுதாயச் சிந்தனைகள் சிறக்க
வித்திட்டவர் யாரென்று தலைமையேற்கும் திறமையே வணக்கம்.
சபை வணக்கம்————————————————————
நாட்டின் நிலை அலசி
சமுதாயச் சிந்தனை அலசும்
பல் திறமை விற்ப்பன்னச் சபையோரே வணக்கம்.
பணிவோடு என் கருத்தைத் தருகிறேன்
தகைமையாய் கேளுங்கள்
துணைத் தலைப்பு—————————————————
பாரதிதாசனார்
சமுதாயச் சிந்தனைக்கு வித்திட்டவர் பாட்டுக்கவி பாரதிதாசனார் என்று கூற வந்துள்ளேன்.
ஒன்றே சமூகமெனும் சகோதரத்துவம் பற்றி எழுதினார்
சமதர்மத்தால் வாழ்வோம்.
நேசத்தால் ஒன்றாய் நிற்போம் என்றார்.
புதிய உலகம் என்று உலக ஒற்றுமை வரிகூறி
தாமும் தமர்களும் வாழ்வதற்கே என்று
பேரிகைகொட்டி எழுதினார். கூடித் தொழில் செய்க
வாழ்வினிலே உயர்வு கொள் ஆய்ந்து பார்!
மானிட சக்தி பெரிது! முன்னேறு என்றார்.
எழுச்சியுற்ற பெண்கள், மூடத் திருமணம்
குழந்தை மணம் கொடுமையென்றெழுதினார்
பெண்க்கு நீ தி குழந்தைப் பேறு மரணம் தவிர்க்க காதலுக்கு வழி வைத்து
கருப்பை வழி சாத்துவோமென்று
கர்ப்பத் தடைபற்றி அன்றே கூறினார்.
தமிழின் இனிமை, உணர்வு,
தமிழ் வளர்ச்சி தமிழ் காதலென
தமிழ் சங்க நாதம் முழக்கினான்.
( எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
என்ற கலங்கரை விளக்க சங்கு நாதம்.)
மயில், முல்லை, சூரியன், காடு
கானல் என்று பணம் கொடுத்து
வாங்காத மருத்துவமாம் இயற்கைக் காட்சி
இன்பம், மக்கள் நிலையை எழுதினான்.
இதனால் மனநலன் சிறந்து
சமுதாய நலன் பெருகுமன்றோ!
எளிய நடையில் தமிழ் நூல் எழுத வேண்டும்.
ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
நாணிட வேண்டுமென்றான். இலவச
நூற் கழகம் எவ்விடமும் வேண்டுமென்றான்.
தமிழில்லா பிறமொழி நூல்கள்
தமிழாக்கி வாசிக்கத் தரவேண்டுமென்றான்.
அற்பத் தீண்டாதோர் என்னும் அவரும்
பிறரும் ஒரு தாய் கர்ப்பத்தில் வந்தாரன்றோ
என்று தீண்டாமை பற்றியும் எழுதினார்.
மாந்தரில் சாதி வகுப்பது சரியா
ஆய்ந்து பார் என்கிறார்.
உலகின் சிறந்த ஒளடதம் ஒவ்வொரு
மனிதனுக்கும் மாபெரும் தேவையான
காதலைப் பற்றி 120க்கும் மேற்பட்டு கவிவரிகள்
எழுதினார். என் அத்தான் பொன் அத்தான்
என்றெழுதினார். இதைக் கவிஞர் கண்ணதாசன்
அத்தான் என் அத்தான் என்று பாடி வைத்தார்.
இப்படியாக இன்னும் பல உண்டு! நாடு முன்னேற
மக்கள் நலன் முன்னேற, நல் சமுதாயச்
சிந்தனைக்கு பாரதிதாசனார் பெரிதும் வித்திட்டார்.
என்று கூறி நேரக் கட்டுப்பாட்டால் இத்துடன் முடிக்கிறேன்
நன்றி நவிலல்————————————-
இது வரை அனைத்தும் கேட்டவருக்கும்
எனக்கு இந்தக் களம் தந்தவர்களிற்கும்
நிலாமுற்றக் குழுவினருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


9-7-2016.