8. பாமாலிகை (தாய்நிலம்.) – 43. விலகாத ஞாபகக் கிடக்கைகள். நினைவுகளின் உயில் இது!

விலகாத ஞாபகக் கிடக்கைகள். நினைவுகளின் உயில் இது!

யாயும் எந்தையும் வலி கிழக்காரே.
யானும் ஈர்பதினொரு அகவைகள் செழிப்பான
செம்புலமாம் கோவையில் (கோப்பாய்) இனிது வாழ்ந்து
செம்புலப் பெயல் நீராய் நெஞ்சம் கலந்தேன்.
கம்பலம் (ஆரவாரம்) மிகு போர்நிலவரம் நிறைபாரமாய்
நம்பலமான கோவையை விட்டுப் புலம் பெயர்வு
தெம்பெல்லாமுறையும் குளிர் நாடாம் டென்மார்க்கிற்கு.
நகர்வு ஆயித்துத் தொளாயிரத்து எண்பத்தொன்பதில்.

இப் பிறப்பின் இணைப்பாம் தாய்மண்ணில்
தப்பின்றி மண்ணில் ‘ அ ‘ எழுதிய நினைவுதேசம்.
செப்பமாய் கோவை முத்தமாரியம்மனைத் தொழுது
வெள்ளி தோறும் கூட்டுப் பிரார்த்தனையில் கிரமமாய்த்
தேவாரதிருவாசகங்களோதி பக்தி படிப்பை அள்ளிப்பூசினேன்.
தெள்ளிய நினைவு கற்பகப் பிள்ளையார் கோவிலில்
திருமுருக கிருபானந்தவாரியார் சொற்பொழிவும், வேறெங்கோ
அருந்திய குன்றைக்குடியாரின் அறமொழிகளுக்குமப்பாவுக்கு நன்றி.

என்னப்பப்பா முருகேசு சுவாமிநாதர் கோவையில்(1910ல்)
பெண்களுக்காக சரஸ்வதி பாடசாலையை உருவாக்கினார்.
ஆண்களுக்கான 1872ன் ஆறுமுகநாவலர் பாடசாலையையுமிணைத்து
கோ.மத்தியகலவன் நாவலர் பாடசாலையாக்கி 1913ல் மனேஐரான
இங்கிவர் விரலிணைத்துச் சென்று ஆரம்பமானதென் கல்வி
பாடசாலையெதிரேயிவர்கள் வயல்இ உச்சி வகிடாக வரப்பு.
அழகுடனாடை மாற்றுதலாக இயற்கை தழுவிப்
பழகி நாளும் பதித்த பருவமென் சிறு வயது.

தரிசுநிலம் உழவில் பறவைகள் பூச்சிகளுண்ணும்.
விதைப்பு காகங்கள் விதைப்பவரைச் சுற்றிப் பறக்கும்.
வெள்ளம் வயலை நிறைக்க மறு கிழமை
கொள்ளையழகாய்ப்; பச்சை நெல்முளைகளங்கு நிமிரும்!
வளர்ந்து கதிர்முற்றும் கர்ப்ப வயல்!
விளைந்த நெல் அருவிவெட்டு சூடுமிதிப்பு.
கூலியாளருக்கு பிட்டு தேநீருடன் அப்பாவோடு
எத்தனை தடவைகளானந்தத் துள்ளல் நடை!

சீரான காட்சிகளிதயத்தில் பச்சைகுத்திய ஓவியம்!
பாடசாலையருகு மதகில் மழைவெள்ளம் மேவும்.
உள்ளே விளையாட்டிடத்தில் மீன்கள் துடிக்கும்,
இரவிரவாகக் கத்திக் களைத்த தவளைகள்
வயிறு வெடித்துக் கிடக்கும்! மச்சமுண்ணாத
எனக்கு அதைக் காண அவருப்பாயிருக்கும்!
அதிகாலையூர்வலம்! ஐல்ஐல்லென மாட்டு வண்டிகளில்
வாழைக்குலைகள், புகையிலை, வெங்காயம் மிளகாய்.

விளைந்த இயற்கைச் செல்வங்களுடன் கல்வியங்காட்டிற்கு
சந்தைப்படுத்த பயணிக்கும் ஊக்கமிகு காட்சி
அமரர் கோவை விவாகப் பதிவுகாரப் பெரியப்பா
வீட்டில்(சுப்பிரமணியம் சுவாமிநாதர் )துயிலும் போது
இவ்வனுபவம் அலாரமாக தூக்கத்திலிருந்து எழுப்பும்.
முதுமையேற இதயக்கிணற்றில் மின்னும் பாலநினைவுகள்
உயிரையெழுப்பும். கோவில்கள், தபாற்கந்தோர், சுடுகாடு,
நகரபாதுகாவலர் நிலையமென குறையற்ற ஊரன்றுமின்றும்.

பாடசாலை மாற்றம் புலமைப் பரிசில் பரீட்சையால்.
விடுதியனுபவம் ஸ்ரான்லி கனகரத்தினம் மத்திய மகாவித்தியலயம்.
பத்திலிருந்து மூன்று வருட முன்னேற்றமங்கு.
நடனம் நாடகம் இசையெனுமுலக விளக்கங்களள்ளினேன்.
வட்டார விளையாட்டுப் போட்டிகளில் செந்திரேசா
இந்து மகளிர், இராமநாதன் கல்லூரியென
பல நட்புகள்இ அறிமுகங்கள் உலக அறிவின்
விரிவு. பின்னர் கோவை கிறீஸ்தவ கல்லூரி.

வீட்டினருகில் பாடசாலை. கிராம சுகங்களழியாதது.
கிட்டுமானந்த மாலைகளோடு ஆடும் ஊஞ்சலது.
கோழியேன் முட்டையிடவில்லையேயென்று தேடினால் மாதமுடிவில்
வைக்கல்பட்டடையில் நாலாறுமுட்டைகள் குஞ்சு பொரித்ததும்
ஆச்சியோடு மாட்டுத் தொழுவத்தில் காவலிருந்து
பால் கறக்குமழகின் ரசிப்பும்! பாலைக் காய்ச்சியாடை,
தயிர்கடைந்து வெண்ணெய் உண்ணும் உருசியும்!
இன்றிங்கு வேறு விதமாக பெட்டிப் பாலில் நீந்துகிறோம்!

(வரிசை தப்பிய எறும்பாக நானும் – குமரிக்கண்டமான வலி கிழக்கு வாழ்வும் – ஆழ்கடலில் படமாக.)

ஆடி 2017.

வேறு

கடந்த காலம்.

அப்பா அம்மாவுடன் வாழ்ந்த காலம்
அன்பான இல்லத்தில் குலவிய காலம்
தப்பின்றித் தமிழைப் பயின்ற காலம்.
செப்பமாய்ப் பஐனைகள் பாடிய காலம்.
அப்பப்பா நினைக்கையில் இனிக்கும் காலம்.
எப்போதும் மறுபடி வராத காலம்.

கெந்திப் பிடித்துக் குதூகலித்ததும்
கொக்கான் வெட்டி மகிழ்ந்ததுவும்
கோலம் போட்டு இரசித்ததுவும்
கோணலின்றிப் பரீட்சைச் சித்திக்காய்
கோயிலில் தேங்காய் உடைத்ததுவும்
கோடிக்கும் பெறவியலா அநுபவங்கள்.

காலமெனும் நீள் அதிகாரத்தில்
கடந்த காலம் பக்கம் பக்கமாய்
கிடந்து சுளலும் மனதில் பசுமையாய்.
தொடர்ந்து அசைகிறது தொல்காப்பியமாய்.
தொடர் கதையின் முன்னதிகாரமிது.
தொகுப்பில் இணையும் சிற்றதிகாரமிது.

2017

30. photo poem . கலங்கரை விளக்கு

கலங்கரை விளக்கு

பொலிவுறு தமிழின் பெருங்காதலால்
நலிவுறா ஆலாபனையலை மனமெங்கும்.

சலிப்புறாது வெள்ளி நிலாவை
வலியின்றி மாந்தும் கடலுக்கு
கிலி தருமொரு தோற்றம்!

சோர்வற்ற தமிழ் வெள்ளிநிலா
ஆர்வமுடை கடல் நானோ!
ஈர்ப்புடை கனவுகள் உயர்ந்தன
ஆர்ப்பரிக்கும் புலம்பெயர் அலைகளால்

காலவழியில் கற்பக தருவாய்
கோலக் கலங்கரை விளக்காய்
நீலக் கடலாய் வாழ்வைத்
தாலாட்டும் கவிதைத்தீபம் சுகபோகம்
.

21-8-2019

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-02-23/6654-2021-05-18-17-56-07

29. photo poem – உருவேந்தும் உடை

உருவேந்தும் உடை

உணர்வுகள் உள்ளே உந்த
உகந்த வார்த்தைகளை உருட்டி
உன்னும் மனது உடையெனும்
உருவேந்தும் மொழியை உதிர்க்கிறது.

வசீகர வரிகள் பரந்து
வரமான மலர்களாக மணக்கிறது.
வசியமான கருத்துகள் மனதில்
வச்சிரமாய் ஒட்டும் முனைவிது.

துக்கம் காயங்கள் அழிய
துணையாகும் வரிகள் ஒரு
துருவநட்சத்திரமாகஇ துளசியாக மாறும்.
துன்னெறி அழிக்க உதவிடும்

17-8-2019

https://www.geotamil.com/index.php/2021-02-11-18-02-23/6654-2021-05-18-17-56-07

12. பிரபலங்கள் – பாரதி மீண்டும் பிறந்து வந்தால்….

பாரதி மீண்டும் பிறந்து வந்தால்….

வேரது ஆடுகிறது தமிழிற்கு ஏன்!
சீரது கொண்டு தானே படைத்திட்டேன்!
ஊரதிரும் கருத்துப் பிழைகளுடன், யாரும்
ஆரதிக்க வியலாத எழுத்துப் பிழைகளுடனும்
பேரதையழிக்கும் தமிழைத் தீரத்துடன் திருத்துவேனென்பான்.

மரத்தடி மகாநாடுகள், மாலை வகுப்புகளாக
மகிழ்ந்து சாரதியாவான் மறுபடி தமிழுக்கு!
மண்ணுக்கு நிகர் மொழியென மார்தட்டி,
மதுவாகத் தமிழை நேசி! அச்சமில்லையென
போதும் போதுமெனத் தமிழ் கொடுப்பான்.

போதைப் பொருட்களை மண்ணுக்குள் புதைத்து
மாதைப் பேணி மானம் காத்திட
பாதை தமிழென்று பலரையும் சேர்ப்பான்
கீதையுமோதி, போற்றி சிவசக்தியென்று துதிப்பான்
வாதை தொலைக்காட்சியென்று வயலிற்கு அழைப்பான்.

ஆணை அலட்சியம் செய்யும் பெண்ணுக்கு
பூணு நல்லறம் நாணமென்று மாற்றியே
ஆணின் விடுதலைக்கும் புதுப் பாட்டெடுப்பான்.
மாண்புடை பாலகர் எதிர்காலத் தூண்களென
மகிழ்ந்து பட்டமேற்றிக் கும்மியடிக்க வைப்பான்.

ஓயாதே ஓடி விளையாடு பாப்பாவென்று
ஓராயிரம் வீரக்கதைகள் கூறி தேசிய
உணர்வைத் தட்டியெழுப்புவான்! ஓயமாட்டான் பாரதி!

10-12-2017.

சுட்டும் விழிச்சுடரே…..

சுட்டும் விழிச்சுடரால் தீர்க்கமாய் உன்
கட்டும் தமிழ்க் கதிரின் ஆளுமையை
எட்டுத் திக்கும் கொட்டிய எட்டயபுரத்தானே!
கட்டுப்படாது பலர் இங்கு கட்டறுந்துள்ளனர்.

கெட்டு அழிந்ததால் இனியெம் வருங்காலப்
பட்டுத் தமிழ்ப் பாலகரையாவது உன்
பாட்டுத் திறத்தாலே பாலித்திட வேண்டுமென்று
வீட்டுக்கொரு தமிழனும் திட்டமிட வேண்டும்.

11-12.2017.

28. photo poem – நதிப் பேச்சு

நதிப் பேச்சு

மென் மேகங்களின் கவிதை மனம்
அன்ன தொகை மழைக் கவிதைகளை
அழகுறப் பொழிகிறது மகா சமுத்திரத்தில்
சலதோசப் பயம் கடலுக்கு இல்லை.
நதி பேசுகிறதா பேசுவது இல்லையா!
குதியிடும் அதன் சிறகுகள் தரும்
அதி இலயமிடும் ஆனந்த ஒலி
சுதிகூட்டும் இசைப் பேச்சுத் தானே!

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க் 14-8-2019

34. பா மாலிகை ( காதல்) – 101. அழகிய தேவதை

அழகிய தேவதை

கண்ணழகில் பெரும் கனவுகளின் விரிப்பு.
விண்ணழகின் அரும் வானவில் வனப்பு.
கண்ணிறையும் பசுஞ்சிறகின் கதகதப்பு
எண்ணத்திலழகிய தேவதை நினைவு சிலிர்ப்பு.

இன்னமுத அலங்கார மெழுகுவர்த்தியொளி குவிய
பனிப்பஞ்சு மனக்காதலை இன்றேனும் மொழிய
கனியிதழ் பிரிப்பாளா வெம்மைக் காதலடைய
தனியே வருவாளா தாமரைச் செல்வியவள்.

10-1-2018

27. photo poem – உறவுக்கான சுதந்திர வெளி

இயல்புடைய உறவுக்கான சுதந்திர வெளிக்கு
இங்கும் பஞ்சமே!….நிராகரிப்பு, அலட்சியத்தால்
அறிவாளப் பிரபலங்களும் அப்படியே தான்!.
பங்கிடும் பண்பைப் பதுக்கும்
பண்பற்ற பயணமே இது.
இதனால் எமது அன்புக் குமிழிகள் அடங்கி விடுவதில்லை.

9-8-2019

7. எனது 4வது – 5வது நூல்கள் –

(எனது நூல்கள் பற்றி இங்கு

எனது முதல் மூன்று  நூல்கள் பற்றி முதலாவது வலை வேதாவின் வலையிலும்-  
https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

4கு 5தாவது நூல்கள் பற்றி வேதாவின்வலை.2 லும். 
https://kovaikkothai.wordpress.com/category/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-5%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/


 மேலும்  இங்கும் அவை தொடர்கின்றன.


Mathiyuganathan Satgunanathan

 
இந்த வாரம் டென்மாக் ஓகூஸ் நகர் வாழ் கவிதாஜினி திருமதி வேதா இலங்காதிலகம் அவர்களின் ” குறள் தாழிசை ” , ” பெற்றோரியலில் சிற்றலைகள் ” ஆகிய இரு நூல்கள் படித்தேன். மகிழ்ச்சி பாராட்டுகள். திருமதி வேதா ” விடா முயற்சிக்கு சொந்தக்காரர் ” என்றால் அது மிகையாகாது. வேதாவின் “கவிதைகள் “இதில் ஆரம்பித்து பயணிக்கிறார் . என்னுடன் பல கவி அரங்கில் கவி பாடியவர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
பல பொது அமைப்புடன் இணைந்து வேலை செய்பவர். பெற்றோரியலை பார்க்கிறபோது என் நினைவுக்கு வந்ததும் அப்படி ஒரு அமைப்பு. அவர் படித்து அத்துதுறையில் பணி புரிந்தார் .ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள் .
இங்கே வேதாவின் வெற்றிக்கு பின்னால் ஒரு ஆணின் பங்கு , ஆம் அது அவர் கணவர் திரு இலங்காதிலகம் . அன்பு நிறைந்தவர் .அவருக்கும் பாராட்டுகள், நன்றிகள்.
நீவீர் இருவரும் வாழியநீடு வானுயர் புகழ்பெற்று !
தொடரட்டும் , வெல்லட்டும் உங்கள் முயற்சி.
என்றும் அன்புடன்
மதி


இணையத்தளம் வலைச்சரத்தில் சகோதரர் மகேந்திரன் எழுதியது..

‘ பெற்றோரியலில் சிற்றலைகள் நூலில்-‘ – வேதாவின் ஆத்திசூடி –

ஒளவையின் ஆத்திசூடி கண்டு ங்கத் தமிழின் வளத்தை எண்ணி பெருமித்திருந்த வேளையில், இதோ பார் வேதாவின் ஆத்திசூடி என்று தற்கால ஒளவையாய் தரணியில் வளம் வருகிறார் சகோதரி வேதா.இலங்காதிலகம். இவரின் வேதாவின் வலை சென்றால் தமிழின் இனிமையை முழுமையாக பருகிவிட்டு வரலாம். செல்வோமா..

இதோ அவருக்காக..

அறம்செய விரும்பென
ஒளவையின் மொழியினை

பழகி வருகையில்
என்மொழியை பாரடியோ!
ஏற்றமிகு ஆத்தியை
மாற்றிப் புனைந்தேன்

வாழ்விற்கு ஏற்ப!
எனப் பகன்று வந்தாயே!
கலியுலக ஒளவையே!!
..2010..


7. பாமாலிகை (தாய்நிலம்) – 42. முள்ளிவாய்க்கால் சரீரம்

இந்த மலரில் (கவியுலகப் பூஞ்சோலைக் குழுமம்)
வந்த கவிதை. 201
9

முள்ளிவாய்க்கால் சுவடுகள்

ஓளவை மொழிகள் திருவள்ளுவர் வாக்குகள்
கையெடுத்து வாழ்ந்த எம் வாழ்வு
மையடித்து விட்டது போல இருண்டது.
கையாலாகாத நிலைக்குத் தள்ளப் பட்டோம்.

ஆசியாவின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்டது
ஆசிரியன் இல்லா வாழ் நிலமானது.
ஆசு வாசமற்ற குண்டுத் தாக்குதல்
ஆறாக இரத்தமும் சதையும் ஓடியது.

பாதமிட மண்ணற்ற பரிதவிப்பு நிலை
பாதகம் பயமின்றி படமெடுத்து ஆடியது.
பாவிகளிடம் நீதி கேட்டும் பலனில்லை.
பாழானது முள்ளிவாய்க்கால்! புத்தபோதனையும் இறந்தது

29-5-2018