7. குறுகிய வரிகள் (112)

 

arimukam

*

அறிமுகம் ஆனோம்.

*

அறிமுகம் ஆனோம். அச்சம் விலகியதும்
அறிவை வளர்த்தோம் சேவைகளோடு கையிணைத்தோம்.
அறியாமை போக்க கல்வியகம் அமைத்தோம்.
அறிவரங்கம் அமைத்து அறிவொளி பரப்புகின்றோம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 20-12-2017.- 20-12-2017

*

kaaval

காவல்

*

பாலுக்குக் காவல் பூனை
மீனுக்குக் காவல் நாயா!
எப்படி ஆவல் அடக்கும்!
தப்படியாகாதோ இது!
உண்மைக் காவலன் இவனோ!
பிரதியுபகாரமோ! நன்றியணர்வோ!
9-12-2017

*

13557740_1090518607695659_7759270420775917436_n

*

முயற்சி — 8-10-2017

*

உயிரின் ஓயாத பயிற்சி
எயிறிலி! (சூரியன்) உயர்விற்கு முயற்சி!
அயர்வற்ற ஊக்கத்தின் சுழற்சி.
உயற்சியின் சோராத மலர்ச்சி!
மயூரகதியான (குதிரை நடை) சுறுசுறுப்பு
வாழ்வின் வளர்ச்சி!.

*

 

divider

 

Advertisements

4. நான் பெற்ற பட்டங்கள்(11)

 

தமிழுலகில் நான்பெறும் 16வது பட்டமாக
                -கனல்கவி-
என்ற பட்டத்தை பெற்றுள்ளேன். தமிழுக்கு ஆண்டவனுக்கு…நன்றிகள்.

nilaa. kanal kavi

*

நிலாமுற்றம் – கவிஞனின் கனவு.
கடைசிவரித் தலைப்பு கவிதை.
கடைசிவரி:-

25508166_2002576499965256_1339735498830385932_n

*

உதிரும் வண்ணக்கனவுகளே

*

எதிரும் புதிருமானவை கனவுகள்.
அதிரும் பலமற்ற எண்ணங்கள்
உதிரும் பவழமல்லிகையாய்ப் பரவும்.
முதிருமறிவில் சில முதுமையாகும்.
பதியும் காலடித் தடமாகவும்
சதிராடும் மழைத் தாளமாகவும்
புதிய மின்னலாகவும் கனவுகள்
தகுதியுடைய கனவுகள் பலனாகும்.

*

உதிராத வண்ணக்கனவுகளாக நிழற்படங்கள்
கதிராக விரிந்தொளி வீசிடும்.
உதிக்கும் வண்ணக்கனவுகளை நூலில்
பதித்திட கவிதையாக இனிக்கும்.
சொற் சங்கிலிகளை இணைத்து
நற்கனவு மாலை செய்தாலே
பொற்கனவு சக்தியுடைய எண்ணமாகும்.
கற்கோவிலாக நிமிராதோ கனவுகள்.

*

கொட்டும் பனியில் இயற்கை,
வட்டமிடும் வயோதிபரசைவு பனியில்,
சீனி வியாதியாளரின் அதிக
தீனியாம் தீராத ஆசை,
பாலில்லா மார்பைச் சுவைக்கும்
குழந்தையின் தீவிர எண்ணம்
புதிராகும் வானவில்வண்ணங்களும் மாதிரி
உதிரும் வண்ணக்கனவுகளே!

*

பாதையில் கானல் நீரும்
உதிரும் வண்ணக்கனவுகளே…..

*

EN - paddankal

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 21-12-2017

*

12076127-stuhy-rosette-badge,-ilustrace

 

 

 

2. பிரபலங்கள், பாரில் அவதரித்த பரிசுத்த குமாரன்.

 

 

merry-christmas

*

பாரில் அவதரித்த பரிசுத்த குமாரன்.

*
(ஏலவே – ஏற்கெனவே)
ஈராயிரம் வருடங்களின் முன்னர் இரட்சகர்
ஈடற்ற கருணையாளன் பெத்தலகேமில் பிறந்தார்.
ஈனர்களால் அறியவியலாத பிறப்பைச் சோதிடர்
ஈடுபாட்டுடன் அறிந்தார். விண்மீன் வழிகாட்டலில்.
ஈகையாளனைக் காண ஆவலாய் நடந்தனர்.
*
ஏரோதின் அரண்மனை பெரும் சலசலப்பானது.
ஏவலிட்டானரசன் இருவயதிற்குள்ளான ஆண்பிள்ளைகளையழிக்க ஏலவேயறிந்த எச்சரிக்கையால் ‘ திருக்குடும்பம்’ எகிப்திற்கேகியது.
ஏரோது மரிக்க மறுபடி யூதநாடு வந்தனர்.
ஏசுநாதர் போதனை இரட்சிப்புடன் நாட்களோடியது.
*
கருணைமகனையழிக்க யூதர்கள் திடமுடன் துன்புறுத்தினர். கடைசியிராப்போசனத்தில் ‘ நம்முளொருவனெனைக் காட்டிக்கொடுப்பா’னென்றார். கருணையற்ற செயல்கள் நிகழுமென முன்னரேமொழிகிறார்.
காட்டிக்கொடுக்கிறான் யூதாசு யேசுவை முத்தமிட்டு.
கர்த்தர் கொடுமைக்காரர்களால் சிலுவையில் அறையப்படுகிறார்.
*
கறையற்ற நல்வாழ்விற்குச் சொல் செயலால்
நிறையுதாரணமாக வாழ்ந்து காட்டிய மீட்பர்
இறைமகன் பலருக்கு மறுகாட்சி கொடுத்தார்.
இடிபாடுகளகற்ற மாட்டுத்தொழுவத்தில் கன்னிமேரியிடமவதரித்த
இறைதூதர் யேசுவின் பிறப்பே நத்தாராகிறது.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 21-12-2017
*
santasit-l

7. பாமாலிகை (இயற்கை.) மல்லிகை 85.

 

original_flower_mali

*

மல்லிகை

*

சுயநலமற்ற மல்லிகை
வியக்கும் சுகந்தம்.
இயல்பு மணம்
மயக்கும் மன்னனை
¤
உயர்ந்த கொண்டையிலே
இயலணி (இயற்கை அழகு) தரும்
பயனுடை மல்லிகை
நயனம் பெண்ணழகிற்கு.
¤
தயக்கமின்றி கூந்தலில்லிட
தூய உணர்வு
இயக்கும் மன்னனை
ஐயமின்றி நெருங்குவான்.
¤
கயவனும் மல்லிகையில்
வயகரவாய் மயங்குவான்
குயவனும் குறத்தியை
மயக்கிட கொடுப்பான்.
¤
தூயது மென்மையானது.
நியமமாய் மல்லிகையும்
கையளிக்கும் அல்வாவும்
தியக்கமான (மயக்கம்) மன்மதனம்பு.
¤
நயத்தகு பிலிப்பைன்சின்
யெயமுடைய தேசியப்பூ.
பயனாகும் மருத்துவத்திற்கு.
வியப்பு இருநூறினமுண்டாம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-8-2016

*

மல்லிகை பற்றிய எனது இன்னொரு இணைப்பு இதோ!…….

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/7/  

*

 

maxresdefault (3)k

 

 

7. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். ( மடமையைக் கொளுத்துவோம்.)

 

 

m

*

 மடமையைக் கொளுத்துவோம்.

*

கடமையைச் செய்வோம்., மடமையைக் கொளுத்துவோம், 
உடைமையாய் பெண்களை உரிமையோடு காப்போம்.
கடைமை (கீழ்மை) நிலைக்குச் செல்லாது உயர்வோம்
அடிமை என்பதில்லை அடைதல் என்று சாதிப்போம்.

*

மோகக் கனலைத் தேவைக்கென ஆக்கி
தாகம் அறிவிலென்றுன் தரம் போற்றி
பாகம் ஆண பெண்ணென்று பிரிக்காது
பேதமின்றி கௌரவ உதாரணமாய் வாழ்ந்திடுவோம்.

*

பேதமை (மடமை) கொளுத்துதல் பிரதான தேவை
பேரானந்தம் அடையலாம் பேராளன் ஆகலாம்
பேசாமை கலைத்(ந்)தால் பேரவையில் தோன்றலாம்.
பேணுதல் குழந்தைகள், முதியோரென்று திடமாவோம்.

*

இன்பத்தைச் சூறையாடும் மடமை இடைஞ்சல்!
உன்னத அறிவொளியால் கல்லாமை தீர்ப்போம்
அன்பான விண்ணப்பங்களிது கருணையாய் இருப்போம்.
சின்ன இதயம் நலிவுறாது வல்லமையாக்குவோம்.

*

வாடி வயிறு நிறைத்து மாற்றாரைக்
கூடியடுத்தோரை வாடச் செயது இளமையகல
தேடி வரும் இயமனிடம் செல்லாது
வேடிக்கையின்றித் திடமாய் மடமையைக் கொளுத்துவோம்.

*

 17- 3-2017  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

 

19145851_10211785973101979_299792921280484325_n

6. பாமாலிகை (இயற்கை)(தடாகத்தில் தாமரை! 84.)

 

lotous-2

*

தடாகத்தில் தாமரை!

*
 
தடாகத் தாமரைக்கா மனது
படாத பாடு படுகிறது.
நடாத படிக்கட்டுத் தாமரைக்கு
அடாது மனம் துடிக்கிறது!
*
தாமரையிலை தண்ணீரை எப்படித்
தாங்குகிறது! சோதிக்கிறாயா கண்ணே!
தடுமாறி உருள்வதாய் மனம்
ததிங்கிணதோம் போடுவது பாராய்!
*
உயிருடைச் சிற்பமே நீயோ
உன்னதம் தாமரையோவெனும் ஆய்வு
உன் தலைமாலையாய் படரவா…
உத்தமியே உன் பதிலென்ன…?
தண்ணீர் எந்தி வரவா
கண்ணீரின்றி உனைக் காப்பேன்
மண் மானம் காத்து
மகிழ்ந்து இணைய வருவாயா…?
*
– வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.15-6-2016
*
lotus-border

6. குறுகிய வரிகள் (11வதில் 31-32-33

 

poo

*

ha Langathilakam

22 May 2013 at 10:29 ·

குட்டி வரிகள்.

(விஷ்ணு படம் வரி- 22-5-13 (ஒன்றே குலம் ஒருவனே தேவன்) ஒளிகிறாயா! ஓடுகிறாயா! களிப்புடை விழியை அளியென மைதீட்டி ஒளியோடு காத்திருக்கிறேன்.

நீல விழிநிறைத்து கோலமிட்ட மை நூலெடுத்து வீசும் வலை தெரியலையா! ——————–

வேறு — எத்தனை கணைகளெனைக் குத்தினாலும் உன்னில் பித்தாகி விழுவேனென சுத்தமாய் எண்ணாதே! ———— https://www.facebook.com/…/ondrekulamoruv…/459830970767581/…  

*******

 

24910108_1929094560739971_3336583976439883067_n aadu

இது என்ன சோதனை ஆண்டவா!
மனிதனைப் போல மூளை மாறியதா!
மேட்டு நிலத்து மேய்ச்சல் சிந்தனைக்குரியது!
அசட்டுத் துணிச்சல்! ஆபத்துப் பாதாளம்!
ஆழமறியாது காலிடச் சொன்னது இயமனோ!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-6-2016

 

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

 

sathutankam

11 -12 2012
நினைவில் நீதியை ஒதுக்குவான்.
பனைத்துணை சுயநலம் பிணைக்கிறான்.
சுனைவற்ற முனிவுடை அனையன்.
வினைக்களமிவன் வாழ்வு தான்.

(பனைத்துணை – பேரளவு குறித்த சொல்
சுனைவு – சுரணை
முனிவு – முயற்சி.
அனையன் – அத்தன்மையானவன்
வினைக்களம் – போர்க்களம்)

*

 

sunflow

13. சான்றிதழ்கள் – கவிதைகள் ( மோகனப் புன்னகை வீசிடும் நிலவே)

 

amirth-kaathal-15-2-17

*

19th February 
நடுவர் அனுராஜ் அவர்கள் தேர்வுசெய்து
சிறந்த கவிதைக்கான
சான்றிதழ் பெறுகிறார்
கவிஞர் வேதா. இலங்காதிலகம்
அவருக்கு கவிஞர் ஜெயசுதா, நடுவர் அனுராஜ் ஆகியோருடன்
அமிர்தம் குழுமமும் வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறது
*


 மோகனப் புன்னகை வீசிடும் நிலவே

*


ஊகனம் (ஊகம்) பின்னும் உலக வாழ்விலே
கூகனம் (மாய்மாலம்) பண்ணும் உறவின் நீள்விலே
மோகம் ஊட்டும் மன்மத மாலையில்
மோகனப் புன்னகை வீசிடும் நிலவே.
மோகனம் பாடுமென் காதல் வீணையே!
கரும்பு வில்லோ மன்மத பாணமோவுன்
புருவம் எனையிழுத்துக் காதல் மொழிகிறதே
கருவண்டோ, மீன்விழிகளோ காந்தமடி காந்தம்

*


ஓளித் திரைக் கன்னத்திலுன் எழில்
களியுமிழும் சிறு மூக்கு சிமிழே!
அளி மொய்க்கா தேனுதடு சுந்தரமே!
கிளியாயுன் தோளில் அமர்ந்திட வரவா!
அருமை இதழ்கள் சிந்திடும் மதுவால்
ஒருவித மயக்கம் கட்டழகு மொட்டே!
சுருண்ட கருங் குழலும் ஈர்க்குதே
வருமோ உன்னோடு இணையும் நாள்!

*


காயாமல் காயும் காதல் அனலை
ஓயாமல் உன் விழியால் ஊதுகிறாய்
சாயாமலுன் மேல் தீராதே வெப்பம்
மாயா விநோதினி என் மருக்கொழுந்தே!
மல்லிகையும் பெரு மயக்கம் தெளிக்குதே
அல்லியே என் அமுதசுரபியே சொல்
இல்லம் வருவாயா பொக்கிசமே இன்பமாய்
இல்லறத் துணைவியாய் இணைவோம் மகிழ்ந்து.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.15-2-2017

*

1457745k8p286od3g

6. பாரதிதாசன் சான்றிதழ்கள் கவிதையுடன். (விதியை வெல்வோம் வெளியே வா பெண்ணே.!)

 

sanka-bara-6

*

Zegu Zegu
Admin · 22 March · 

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்

17/03/2017 நாள்.
விதியை வெல்வோம் வெளியே வா பெண்ணே எனும் தலைப்பில் பாரதிதாசன் கவிதை
எழுதும் போட்டியில் 
கவிதை எழுதிய

கவிஞர் Vetha Langathilakam
சிறப்புச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப் படுகின்றார்.

*

விதியை வெல்வோம் வெளியே வா பெண்ணே.!

*

பதிக்குச் சேவை செய்வது மட்டும்
விதியல்ல பெண்ணேயறிந்து கொள்!
அதிகரித்து உன்னறிவை விருத்தி செய்!
இதிகாசங்கள் வாசி! இழிவற்ற நீதிகள்
இறைந்து கிடக்கு உண்மை! வியப்பில்லை! 

*

உன் பிள்ளைகளிற்கு நீயொரு உதாரணமாக
உருவம் காட்டு! மாதிரிப் படமாகு!
உள்ளம் நிறைந்த அனுபவமது 
உகந்தது நல்லதொரு குடும்பத்திற்கு!
உதவியாகுமொரு நல்ல சமூகத்திற்கு!

*

வீடு முன்னேற நாடு முன்னேறுமென்று
வீம்பாகக் கூறும் வரிகளல்ல
வீர வரிகளென்று எண்ணிடு!
வீராங்கனையென்றால் உடலில் மட்டுமல்ல
வீச்சான மனதுடன் வருவதைச் சமாளித்தலுயர்ச்சி!.

*

அழுவதை நிறுத்து! ஆய்ந்து தெளிவாகு!
அதிசயப் புன்கையோடு வாழ் அழுகையிலல்ல!
அலையாகு! நீயொரு துளியல்ல! புரள்!
அகவுறுதி நம்பிக்கையோடு அகழியைத் தாண்டு!
அற்ப பேராசை ஏக்கம் தவிர்!

*

இலக்கு வைத்து நட பெண்ணே!
விலக்காதே உரிமையைக் கையிலெடு! முன்னேறு!
துலக்கமாய், தயங்காது நதியாக ஓடு!
விலக்கு பெண்ணை அடிமை என்போரை!
விதியை மாற்றி வெல்வோம்! வெளியே வா பெண்ணே!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 13-3-2017.

*

blackwith colour