80. Photo poem – அகம்… கடல்

அகம்… கடல்

முகநுலில் கூடப் பாரபட்சம்
அகநூலின் அகலம் இது.
அனம்பாவம் அகலா நிலை
அகமடலின் விரிவு இது

அகளங்கன் (குற்றமற்றவன்) யார் உளன்!
இகலார் (பகைவர்) போலிணைந்திருப்பார்.
உகந்தாரெவர் அறிய முடியாதது
சகலகலாவல்லவராகக் காட்சி கோன்றும்.

சிகரம் ஏறினும் மாறாதது
சுகப்படுதல் திகம்பர இரகசியமே!
தகவு பெறுதல் சாகசமே!
திகம்பரன் இரகசியம் தீர்வு பெறுதல்.
14-4-2020

28. வெற்றி – யானை

யானை

யானை வருகுது யானை வருகுது
எல்லோரும் விலகுங்கோ
சுளகு போல காதாம்
தெரியவில்லை எனக்கு (யானை)

கழுத்தில் மணியும் இல்லையே
நாங்கள் கையில் மணியை எடுப்போமா!
நாங்கள் எறி யிருக்க
தாத்தி சுமக்கிறார். (யானை)

யானை பெரிய யானை
மெல்லப் பொகுது யானை
தள்ளி நில்லுங்கோ
யானை வருகுது யானை வருகுது..

(அப்பம்மாவிற்குப் பெயர் தாத்தி.
அப்படித்தான் என்னை அழைப்பார்கள்)

21-3-2020

வேறு:-

சவாரி….

யானை குதிரை சவாரியிதோ
யானை; பாகன் யாரிங்கே
யாசிக்காது வந்த சொந்தம்
யாமியம் (தவம்) செய்தவர் நாம்.
00

யாழினும் மழலை இன்பமும்
யாத்திரைச் சவாரியும் ஆனந்தம்
யாரிங்கே குதிரை ஓட்டி
யாப்பியம் (பொழுதுபோக்கு) இது இன்பம்.
00

கொள்ளை ஆனந்தம் பேரனுக்கு
கொண்டாட்டம் தாத்தியோடு இவனுக்கு
திண்டாட்டம் சிலவேளை எமக்குண்டு
நண்டாட்டம் கோணலாய் நடந்திட்டால்

2020

27. வெற்றி – பச்சை மண்.

பச்சை மண்.

பிறரது செயல்களிற்கு அபிப்பிராயம் கூறுவது வழமையான மனித இயல்பு தானே!
தனது மனைவியை அம்மா என்றும் தன் கணவரை அப்பா என்றும் எமக்குத் தெரிந்த ஒருவர் அழைப்பதைப் பற்றி என் கணவர் கூறிச் சிரிப்பார்…..; எமது ஆரம்ப கால திருமண வாழ்வில்;.
எமக்கு மகன் பிறந்து வளர்ந்து பேச ஆரம்பிக்க மகன் தாயாகிய என்னை ‘வேதா’ என்றும் தந்தையாகிய கணவரை ‘இஞ்சேருங்கோ’ என்றும் அழைக்கத் தொடங்கினார். எங்களிற்குச் சிரிப்பு!
நான் கணவரிடம் ‘ நீங்கள் என்னை அம்மாவென்றும் நானுங்களை அப்பாவென்றும் அழைத்தால் மகனும் பழகுவார்’ என்றேன் . அப்படியே செய்தோம்.
பிள்ளையும் நாளடைவில் சரியாகி எம்மை அம்மா, அப்பாவென அழைத்தார்.
இது அன்று….
இது இப்படியிருக்க எமது பேரனின் தாயாரின் சகோதரியும் 9 வயது மகளும் இரண்டு கிழமை விடுமுறையில் மலேசியாவிலிருந்து டென்மார்க் வந்தனர்.
எமது பேரன் வெற்றியின் பெற்றோரை பெரியம்மா, பெரியப்பா என்று தங்கை மகள் அழைப்பார். வந்து ஒரு கிழமையாகியது. ‘இந்தப் பகிடியைக் கேளுங்கோ அன்ரி வெற்றி எங்களை பெரியம்மா, பெரியப்பா என்று அழைக்கிறார்’ என்று மருமகள் சொல்லிச் சிரிக்கிறார்.
குழந்தைகளைப் பச்சை மண் என்போமே! இது தானே!.
வீட்டில் நாங்கள் வெற்றியின் குறும்புகளைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சிரிப்போம்.

பச்சை மண்ணெம் வெற்றி
பசுந்தான செல்வமே பேராண்டி
இச்சையுடன் உன்னோடு பழகி
இழைந்து குழைந்து இளகி
அச்சுப் பிச்சு மழலையில்
அகங்குளிர நனைகிறோம்.
இச் சுவை யெம்மை
இன்பலோகத்தில் அமிழ்த்தும்.
அச்சுவை முதிர்ந்து நீயும்
அருமையாய் வளர்க கண்ணா!

2013

26. வெற்றி

6 years ago

September 6, 2013 at 8:53 AM · 

வெற்றியின் சாகசம்!!!!!

மிகவும் ஆசையாக வெற்றிக்கு ஆடுகின்ற குதிரையை வாங்கி வந்தேன். பெரிதாக ஆர்வமின்றி இருந்தார் தூக்கி மேலே போடுங்கள் என்றேன்.
இப்போது இவரது ( ) சிறந்த கருவி இது தான். கிறீச் கிறீச்சென்று ஆடும் சத்தம் வீடு முழுக்கக் கேட்கும். இப்போ என்னடாவென்றால் அதில் ஏறி நிற்கிறார். பயங்கரமன்றோ! நிற்பதைப் படம் பிடிக்க முயன்றேன் முடியவில்லை. அதில் பாதியை எடுத்துள்ளேன்…..

வெற்றி வளர்ந்து பாடசாலை சென்ற போது

25. வெற்றி – B days

Vetha Langathilakam added 7 new photos.April 18, 2019 · 

குளிர் வெயிலாகக் காலம் உருண்டு
தளிர்கள் துளிர்த்து மலர்கள் மலர்வதாய்
மிளிர்கிறது காலம் மிக வேகமாக.
மிளிர்தலாக (பெருமையடைவதாக)எங்கள் வெற்றியும்
வளர்ச்சியடைகிறான் ஏழு வயதாக
எங்கள் மூத்த பேரனின் சில படங்கள் ஏழு ஜனன தினம்..

எங்கள் செல்லக்கட்டி முதல் பேரன் 6வது பிறந்த நாள் கொண்டாடினார்
நேற்று 17-4-2018. 

வெற்றி 4வது பிறந்தநாள்.2016.

Vethris 3rd B-day

Vethri’s 2nd b’day 2014.

24. வெற்றி.

பம்பரம்.

பம்பரம் பம்பரம் புதிய பம்பரம்
சுற்றி ஆடும் சுளன்று ஆடும் (பம்பரம்)
நூலைக் கம்பில் சுற்றுங்கோ சுற்றுங்கோ
நூலைக் கட்டையாய் சுற்றுங்கோ சுற்றுங்கோ (பம்பரம்)
பச்சை வளையம் கையால் அழுத்தி
நூலை இழுங்கோ நூலை இழுங்கோ
பம்பரம் சுற்றும் சற்றிச் சுற்றி
சுளரும் சுளரும் பம்பரம் சுற்றும் (பம்பரம்)

27-5-2015

23. வெற்றி –

(வெற்றியின் 22 ஆக்கங்கள் இந்த இணைப்பில் உண்டு. https://kovaikkavi.wordpress.com/category/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf/)

வெற்றிக்குட்டிக்கு நான் பாடும் பாட்டு. எந்த நிலையிலிருந்தாலும் அதற்கேற்றமாதிரி ஆடுவார்.

குதிரை ஆட்டம்.

ஆடுங்கோ ஆடுங்கோ
குதிரை ஆடுங்கோ
வெற்றி ஆடுங்கோ!
சிரித்து ஆடுங்கோ

சிவப்புக் குதிரை
மரக் குதிரை (சிரித்து ஆடுங்கோ)ஆடுங்கோ

முன்னும் சாய்ந்து
பின்னும் சாய்ந்து
இன்னும் வேகமாய்
உன்னி உன்னி ஆடுங்கோ

வெற்றி ஆடுங்கோ
குதிரை ஆடுங்கோ. (ஆடுங்கோ)

29-10-.13

வண்ணத்திப் பூச்சி

வண்ணத்திப் பூச்சி வண்ணத்திப் பூச்சி
எண்ணிப் பார் எண்ணிப் பார்!
வண்ணம் பலவே வண்ணம் பலவே
எண்ணம் கிளறுது எண்ணம் கிளறுது.

” மாளிகைத் தோட்ட மயூரங்கள்
தூளியிலாடும் குழந்தையாய்
மகிழ்ந்து துள்ளும் மழலை
மண் விளையாடும் அனுபவத்தில்…

12. Haikuu..

Sathar Mohamed Asaath‎ to ஹைக்கூ பூஞ்சோலை

12-4-2020· 

#தரப்பட்ட_படத்திற்கு_
#ஹைக்கூ_எழுதுவது_எப்படி?
“””””””””””””””””””””””””””””””””””””””””
“”””
ஹைக்கூ எழுத பல வழிமுறைகள் இருக்கலாம். பலர் அதைப் பெரிய வித்தை என்றும் கருதலாம்.

ஆனால் நான் இங்கு சொல்லப் போவது அதன் அமைப்பு ரீதியாக மிக எளிதானது.
புதியவர்களுக்கு வரப்பிரசாதமானது.

ஏதாவது ஒரு புகைப்படம்–

தரப்பட்ட படத்தில் ஒரு சிறுமி அல்லது சிறுவன் தலையில் ஒரு பெரிய விறகுக் கட்டு சுமந்து வருவதாக உள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

மொத்தம் மூன்றே வரிகள்.
அதில் முதல் வரி சும்மா ஒரு பெயர்ச்சொல்.

இங்கு படத்தைப் பார்த்துவிட்டு

சுமை

என்று போடுவோம். ஆனால்
தனிச் சொல் முதல் இரு வரிகளில் வரக் கூடாது என்பதற்காக…

தலையில் சுமை

அடுத்து இப் பெயர்ச் சொல்லை பொருத்தமான ஏதாவது ஒரு வினைச்சொல் கொண்டு முடிப்போம். அதுவே இரண்டாவது வரி.

தூக்க முடியவில்லை
அல்லது
தாங்க முடியவில்லை

இப்படிப் பொருத்தமாக
எப்படி வேண்டுமானாலும்
போட்டுக் கொள்ளலாம்.

இப்போது முதல் இரு வரிகள் கிடைத்தாயிற்று.

தலையில் சுமை
தாங்க முடியவில்லை

ஹைக்கூவில் இம் முதல் இரு வரிகளும் ஒரு கூறு. இவை ஒரு காட்சியைக் காட்டும்.
இங்கு தலையிலுள்ள சுமையைத் தாங்க முடியவில்லை என்பது ஒரு காட்சி.

கடைசியாக ஈற்றடி.

ஆனால் அது வாசகர் எதிர்பாராததாக இருக்க வேண்டும். ஆகவே இரண்டாவது வரிக்கு பொருத்தமான ஒரு செயப்படுபொருளைப் போடுவோம்.

இங்கு எதைத் தாங்க முடியவில்லை?
முன்பு ‘தலைச் சுமை’ என்று போட்டோமல்லவா? அதற்று மாற்றமாக

வறுமை

என்று போடுவோம். அதை மேலும் சிறப்பாக்க..

இளமையில் வறுமை

எனப் போடுவோம்.
அடுத்து
பின்னிரு வரிகளையும் பார்ப்போம்

தாங்க முடியவில்லை
இளமையில் வறுமை..!

இது இளமையில் வறுமையைத் தாங்க முடியவில்லை என்ற வேறொரு காட்சியைக் காட்டுகிறது அல்லது கருத்தைத் தருகிறது.

இனி மூன்று வரிகளையும் ஒன்றாகப் பார்ப்போம்.

தலையில் சுமை
தாங்க முடியவில்லை
இளமையில் வறுமை!

அவ்வளவுதான்! முடிந்து விட்டது!

ஆனால் எது எப்படியாயினும்
எழுதிய மூன்று வரிகளுக்கும் ஏதோ
தொடர்பு இருக்க வேண்டும்.

இங்கு அந்தச் சிறுவனுக்கோ அல்லது சிறுமிக்கோ தலையிலுள்ள சுமையைத் தாங்க முடியவில்லை.

ஆனால்… அதைப் பார்க்கும் நமக்கு

‘இளமையில் வறுமை’

எனும் கொடுமையைத்
தாங்க முடியவில்லை
என்று இதன் பொருள் வரும்.

நாமும் இளமையில் வறுமைப் பட்டிருக்கலாம். இன்னும் யோசிக்க யோசிக்க இன்னும் வரும்.

ஹைக்கூவுக்கு புதியவர்கள் படங்களைப் பார்த்து ஹைக்கூ எழுதும் போது இந்த முறையைப் பின்பற்றி எழுதிப் பாருங்கள், வெற்றி நிச்சயம்.

வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

இவண்,
என்றும் உங்கள் தோழமையுள்ள,

சத்தார் எம். அஸாத்.

133. சான்றிதழ்கள் – கவிதைகள் 141. வில்லு வண்டியில் போவோமா!

வில்லு வண்டியில் போவோமா!

கல்லில் ஏறி உருளும் போது
வில்லு வண்டி குலுங்கிப் போக
கொல்லுது உன் விசமப் பார்வை
பல்லும் பளிச்சென மின்னி மறையுது
புல்லரிக்குது பெண்ணே என் கண்ணே!

கூட்டுக் குடித்தனத்தில் ஒன்றாய் நெருங்கி
ஒட்டி உறவாட இடமே இல்லை
பட்டு நேரமடி இது நெருங்கிக்
கிட்டே வாடி கண்ணே உன்
பட்டுக் காஞ்சிபுரம் பளபளன்னு மின்னுதே!

காலோடு கால் பாவக் காற்று
மேலோடு உரசக் காதல் தீ
தோளோடு இணைந்து புதிதாகப் பொங்குதே!
ஆலோடு விழுது பூமியை அணைப்பதாய்
நாளோடு இணைந்து அனுபவிப்போம் உல்லாசம்.

இந்தத் தனிமை எப்போதும் வராது
சொந்தக் குழந்தை மடிக்கு வருமே!
சிந்தும் இன்பம் ஏந்தி மகிழ்வோம்.
தந்தச் சிலையே தளிர்க் கொடியே
நந்தவனக் காற்றாய் இறுக அணையடி

5-4-2020

79. Photo poem – எண்ணமாம் மகரந்தப் பொடி…

எண்ணமாம் மகரந்தப் பொடி

அமைதி ஒத்திகை இயற்கையோடு
சமைத்திட தனித்து இருவெனும்
சம்மட்டியால் போட்டு விலக்கியது
பிணி நுண்ணுயிரி…பெரும் பாடம்!

சொற்கள் கூட்டி இரசவாதம் செய்து
விற்கள் பூட்டுவதாய் நயமாக
சிற்பமாய் இணைத்து மொழியை
அற்புதம் என்று செதுக்குகிறேன்

தமிழோடு உருகும் நேரமிது.
அமிழ்ந்து வாசித்து கருத்தை
உமிழ்வதால் இன்பமே !
கவிழ்த்திடுங்கள் அலட்சியத்தை

வானளாவிய சுதந்திரமாய் மொழியை
ஆனந்த பரவசமாய் ஆதூரத்தோடு
மானசிகமாய் நேசத்திருவிழாவாக மண்ணிற்கு
மானாவாரியாக விதைத்தல் நற்பயன்.

14-11-19