10. பேட்டி – நேர்முகம் – விழா

இன்றைய விழாவில எனது வரிகள் — திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல் வெளியீடு 21-5-2022

திருக்குறளின் சில சிறப்புகள்


பதினெண்கீழ்க்கணக்கு சங்கஇலக்கிய நூற்றிரட்டின்
ஆதித் தமிழ் மொழி இலக்கியம்!
அதியற்புத வாழ்வியற் பொய்யாமொழி! – நல்
விதி! நம் புலம்பெயர் வாழ்வுமொழி டெனிசிலின்று
பிரசவமாகிறது – திருவாம் மரியாதை மேன்மையுடைய திருக்குறள்.
00
ஈரடிநூல் – அறம் பொருள் இன்பமுடைய
முப்பால் – உலகப்பொதுமறையான அறநூல்
அப்பொழுதே முதலில் ஐரோப்பிய மொழிபெயர்ப்பு
1730ல் வீரமாமுனிவரென்ற கொன்ஸ்தான்ஷியஸ்
யோசப் பெஸ்கியால் இலத்தீன் மொழியில் பிறந்தது.
00
திருக்குறள் – ” வெள்ளி இழைகளுக்கிடையில் பதிக்கப்பட்ட
தங்கக் கனியாம் ” மொழிகிறார் கார்ல் கிரவுள்.
அணுவைத் துளைத்தேள் கடலைப் புகுத்திக்
குறுகத் தறித்த குறள் ஒளவை போற்றினார்.
தமிழ் – கடவுள் – என்ற சொற்கள் இல்லாத குறள்.
00
இருநூற்று நாற்பத்தேழு தமிழ் சொற்களில்
இருநூற்றுப் பத்து சொற்களாலமைந்த குறள்
1812ல் முதன் முதலில் அச்சிடப்பட்டது.
14000 சொற்களாலமைந்தது திருக்குறள்.
130 மொழிகளில் வெளியாகி யுள்ளதாம்
00
இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை!
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்.!
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்!
குறள் வெண்பாவெனும் பாவகையால் ஆனது.
கிறிஸ்துவிற்கு முன் மூன்றாமாண்டும் ஓராமாண்டிற்கும்
இடைக்காலத்தில் இயற்றப்பட்டதாக ஆய்வாளர் கூற்று.
00
மதங்கள் – இறைவனின் – பெயரில்லாத குறள்.
திருக்குறளை அரங்கேற்ற எங்களைப் போன்று
திருவள்ளுவரும் சிரமப்பட – ஒளவைத் தமிழ்மூதாட்டி
துணையாகி – தமிழ் சங்கத்தில் அரங்கேறியது.
வான்மறை உலகப்பொதுமறையென 12 பெயர்கள் தாங்கியது திருக்குறள்.
00
தமிழ்க் கலாச்சாரத்தை வரையறைசெய்த நூல்
தனிநபர் அடிப்படைப் பண்பு – அறநெறி –
அகிம்சையின் மையமாக உருவானது.
கிறிஸ்தவ மதஏடு பைபிள் போல எம்தமிழ் கையேடு திருக்குறள்.
டேனிஸ் மக்களும் இதன் புனிதம் அறிவது மகிழ்ச்சியே.

இதன் இயக்கத்திற்குத் துணையான அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாழ்க தமிழ்!!!!

152, சான்றிதழ்கள் – கவிதைகள் 149. பண்பாடும் கலாச்சாரமும்

தமிழ் சேவை – காவியக் களஞ்சியம் – 64. கவிதைத் தலைப்பு
பண்பாடும் கலாச்சாரமும்


சொற் பொருள் விளக்கம் –
அண்ணித்த –பொருந்துதல்
வண்ணம் – வளப்பம் மாட்சிமை
மண்பாடு – பூமியிள் இயல்பு மொழி
மேட்டிமை – மேன்மை பதம் -சொல்
ஒண்மை – ஒழுங்கு.
00
பண்பாடு பழந்தமிழ் பதமாம் – கலாச்சாரம்
அண்ணித்த அருத்தமான வடமொழி (சமசுக்கிருத) வண்ணம்.
மண்பாடு இயற்கை மகத்துவப் பள்ளியால்
எண்ணம் நடவடிக்கையால் எருவான பழக்கவழக்கம்
பண்பட்டுக் கற்றறிந்த பயில்வோரின் இணைப்பு
தொன்றுதொட்டுச் சீராக்கித் தொட்டவுயர் நற்தன்மை – பண்பாடாம்.
00
ஒண்மை ஒற்றுமை ஒருங்கிணைந்த கூட்டணி
மண்சார்ந்த கலப்பாக மேட்டிமை நிலைப்பாடு
உண்மையறிவு பஞ்சபூத உறவுக் கட்டமைப்பு
தூண்டும் இலக்கியமும் தொழில்சார் தெரிவுகளும்
உண்டி சமயம் உன்னத நடனமிசை
கொண்ட வீரம் கலைவழியாலுமான தனிப்பெருமை
00
அன்றைய பாரம்பரியம் அழியாதின்றும் நிலையுற்றது.
நன்றான மொழியான நல்விதையூன்றல் சிகரமேற்றும்.
என்றும் விழாக்களை ஏற்றி நடைமுறையாக்கல்
சின்னஞ்சிறார்களை அவ்வழி சீராய் நடத்துதல்
திருக்குறள் ஓளவை தருமநெறிப் பாதையிலிணைத்தல்
பண்பாடு; காக்கும் பாரம்பரியப் பொற்பாதை
00
மேற்கத்தியப் பண்பாட்டு மயக்கத்தில் சுயமிழத்தல்
ஏற்பென ஆடை உணவு மொழி
மாற்றியெம் மூத்தகுடி முத்திரையை அழித்தல்
தமிழையொதுக்கித் தரமெனப் பிறமொழிப் பரம்பலும்
ஒருவனுக்கு ஒருத்தியாய் ஒழுக்கத்தால் வழுவாமலும்
சமூகக் கட்டமைப்பை மதித்தல் வெகு பிரதானம்.
00
ஆலய வழிபாடு ஒன்றிணைந்த துதிப்பாடல்
இமாலயம் எட்டும் பண்பாட்டுப் பூசனை
கல்வியாலய நற்போதனையும் கருவானதாயகப் பிணைப்பும்
வரலாற்றுச் சுவடுகள் வகையாய் ஆவணப்படுத்தலும்
தமிழர் பண்பாட்டைத் துளிர்த்து மலர்விக்கும்
தமிழர் பணபாட்டுத் தூய்மைகளைப் பேணுங்கள்.
00
விருந்தோம்பல் – தீதும் நன்றும் பிறர்
தர வாரா – யாதும் ஊரே
யாவரும் கேளீர் – எம்பண்பாட்டுக் காலடிகள்.
கற்கோயில் கட்டிடக்கலைகள கனத்த அடையாளங்கள்.
அற்புத ஆதிக்குடியின் அருமைகளைப் போற்றுவோம்.
தொன்மை மட்டுமல்ல தொடர்ச்சியிலும் கட்டமைவோம்.


வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 6-5-2022

151. சான்றிதழ்கள் – கவிதைகள் 148. சுருங்கும் சுற்றமும் நொறுங்கும் சொந்தமும்.

உலகத் தமிழர் பாசப் பறவைகள்…..

சுருங்கும் சுற்றமும் நொறுங்கும் சொந்தமும்.

சொற் பொருள் விளக்கம்.
( அருங்கு – உயர்வுடையது – சிறப்புடையது.
ஒருங்குதல் – ஒதுங்குதல்.
முருங்குதல் – அழிதல்.
நுறுங்குதல் – சிதைதல்
கருங்காடு – சுடுகாடு)

00

அருங்குடைய அன்பு அமைதி இன்றி
சுருங்கும் சுற்றமாய் வாழ்வு இறுகி
ஒருங்குதலாகி ஒட்டுறவாடல் ஒழிகிறது சுயநலத்தால்
கருங்காடு ஏகுகிறது நொறுங்கும் சொந்தம்.
முருங்குதல் அற்ற மனம் உருவாக்கு!
00
குறுஞ்சிரிப்பு – ஆதரவெனும் குறுங்கோல் எடு!
நுறுங்குதல் என்பது மனிதம் மறைந்ததால்
உறுதி பொறுமை உயிரற்றுப் ;போனது.
பொறுப்புடன் நடந்து சுற்றத்தை விரித்திடு!
நொறுங்காது செழிக்கும் உன் சொந்தங்கள்!


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க். 18-4-2022