24. பாமாலிகை – (தமிழ்மொழி) 74

எஸ்ரிஎஸ் கவிச்சோலை


எழுத்து விமானத்தில் ஆசைப்பெற்றோர்,
தமிழாசிரியர்கள் துணையால் ஏறி
எழுச்சியான எழுத்தாணி கொண்டு
பழுத்த தமிழாலொரு சொல்லோவியம்
அழுத்தமாக ஒரு கவிமாலை
முழுதாகச் சமர்ப்பிக்கிறேன் இது
தமிழோடு விளையாடும் பொழுது.
இழிவற்றது எடுத்தாள ஆள இன்பம்
அமிழாது நாமிருப்போம் வா! வா!

00

கவிதைச் சொல் பூப்பல்லக்காகவும்,
பவித்திரத் தென்றலின் இதமாகவும்
புத்துணர்வு தரட்டும் இன்பமாக.
வித்தகம் உத்தமம்! தமிழ்ச்சாறு!
முத்தமிழ் எத்தனை பழமைத்திமிர்!
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
தள்ளவியலாத் தெ ள்ளமுதச் சொத்தே! வணக்கம்!

00

எஸ்ரிஎஸ் கலையகம் ஏற்றும் தமிழ் விளக்கின்
இனிய தொகுப்பாளர்கள் பொறுப்பாளர்கள்
திருவாளர்கள் கணேஷ், முல்லைமோகன், தேவராசா
மேலும் தமிழ் மாந்தும் கவிநெஞ்சங்கள்
அனைவருக்கும் அன்புத் தமிழ்வணக்கம்

00

இன்பத் தமிழும் நாமும்.

நாவலந்தீவாம் குமரிக்கண்டப் பிறப்பு
தமிழ் ‘ திருவிடமொழி ‘ யென்ற பெயருடைத்து
‘ திருவிடர் ‘ குமரிக்கண்ட மக்களாம்.
தீந்தமிழின் மணிமகுடம் சங்கஇலக்கியங்களாம்
முதற்சங்கம்; சிவன், முருகர், அகத்தியரும்,
முப்பத்தெட்டு மன்னர்களிணைந்து பரிபாடல்
முதுநரை முடுகுருக்கு கலரியவிரை பேரதிகாரமும் இயற்றினராம்.
முத்தான இரண்டாம் தமிழ்ச்சங்கம் கபாடபுரத்திலியங்கியது.
00

தோன்றின அகத்தியம், தொல்காப்பியம்,
இசைநூல் விளக்கம் வியாழமாலை.
மூன்றாம் தமிழ்ச்சங்கம் மதுரையிலியங்கியது.
தோன்றின நெடுந்தொகை, குறுந்தொகை,
நற்றிணைஇஇ பரிபாடல் புறநானூறு, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, கலித்தொகை, தமிழ்ப் பொக்கிஷங்கள்
இரண்டாயிரம் ஆண்டுகளல்ல பொய்த் தகவலது
ஆண்டுகள் இருபதாயிரம் பழமைத் தமிழிது

00
நக்கீரர் ‘இறையனார் அகப்பொருள் ‘ நூலில்
மூன்று தமிழ்ச்சங்கமும் முறையாக நடந்ததான குறிப்பு.
தன்னினம் காக்கும் திறப்பாம் தமிழுக்கு
உள்ளபடி உலகமொழியில் பதினெட்டாம் நிலையே.
தாய்வழித் தொடர்பு கருப்பையிலிருந்து
அகிலத்துப் பிறப்பு அங்கீகாரத்தால் மண்ணில்
முகிழ்ந்தது விரலால் அகரம்இ ஏட்டுச் சுவடியாய்
சஞ்சிகைஇ ஊடகங்கள் எத்தனை எத்னையுயர்வு!
00
பாட்டி, பாட்டன் மாமிமார் கூட்டில்
பட்டுத் தமிழில் ஊஞ்சலில், உரலில்
நெட்டுருவால் திருக்குறளில் செழித்தது
கூட்டுப்பிரார்த்தனையால் தேவாரப் பாடல்கள்
நான்கு வயதுப் பிள்ளைத் தமிழ் வேறு
நாற்பது வயதுத் தமிழொரு கூறு
தமிழொரு மது அருந்தியுனை இயக்கு!

நந்தமிழ் எம்முயிர்! பைந்தமிழ் எம்வேர்!

00
கம்பர்இ வள்ளுவர், ஒளவை பாரதி
கணக்கற்றோர் அள்ளிப் பரப்பிய ஆதிமொழி
இன்னா நாற்பது இனியவை நாற்பதெனப்
பதினெண்கீழ்க் கணக்கிலும் பாடங்களுண்டு
உலகிற்கு ஊருக்கு ஞான விளைச்சல்
பலநேச இணைப்புகள் உருவாக்கும்
சொல்வளம், பொருள், சுவையாழம்
கொள்முதலில்லாக் கொடையே கவின்தமிழ்
00
விலகாத பித்து வந்து ஒட்டிவிட்டால்
புலமையின் வண்ணம் எகிறி விரிந்திட
குலவிக் கூடிச் சிறு பவளஇதழில்
தமிழ்க் கன்னலமுத யாத்திரை செய்!
குடைநிழல் விரல் தூரிகை ஒரு
குடை கொண்ட மேகமாய்
தடையின்றிப் பொலியத் தமிழ் நுரைக்கிறது
கடைவிரிக்கிறது என் இதயக் கடலும்.
00

குருதிப் புனலோடு குவிந்த மொழி
அருவித் தமிழாய் அகண்டமொழி
அசுத்தம் அகற்றும் அற்புத வழியாய்
அதனால் எழுதுகிறோம் அறிவுத் தமிழை
சொற்கள் இறகுகளாகிப் பறக்க
அற்புதக் கனியாய் இனிக்கும் தமிழ்
எவரும் அரம்கொண்டு சீவாத தமிழ்
தவறு அந்நியமொழி அகத்தில் புழங்குதல்.
00
மொழியெம் வாழ்க்கை வழி!
ஆழி! ஊள்ளார்ந்து முத்துக்குளி!
குழவியிலிருந்து தமிழ் பேசத் தொடக்கு!
குளம்புவது பெற்றோரே சிறார்களல்ல!
புலத்து மொழிகளோடு தமிழினைக் காக்க
புரவலர் குழந்தைகளும் ஓயாத போர்
பாய் விரித்துப் பரப்புங்கள் தமிழை
சேய்களின் பாதையில் ஊன்றட்டும் தமி;ழ்
00

இன்னமுதக் கவிமாலை, கவியரங்கம், கவிதா ஊர்வலமாக
கன்னலமுதச் சொற்கள் கூட்டும் இரசவாதம்
பென்னம் பெரிய பயிர் செய்தலாயுயர் காதலால்
சின்ன மனச்சங்கால் உயிர்மெய்யாய்ப் பிரசவித்தலே.
தட்டும் விரல்நுனி வியப்புலகம் கணனி
எட்டும் இணையற்றது இணைந்து மின்னுங்கள்
மௌனத்தால் செழித்துப் பரவாது தமிழ்
மௌனத்தை அழித்தலாலேயே மௌரிகனாகலாம்(குபேரன்)
00
மௌவலாம் சொற்களால் சௌபாக்கியம் பெறலாம்
சௌரியம் (வீரம்) பெறுவதும் மெற்யறிவால் திண்ணம்.
முன்னம் செய்த தவம் தமிழோடணைதல்
முன்னோர் தந்த வரம் தமிழால் சாதித்தல்
உலகத் தொடர்பு மொழி தமிழ் நறுந்தேன்!
இக் கவிமாலை வாய்ப்பிற்கு நன்றி!
பொறுமையோடென் வரிகளை நுகர்ந்த
நேச நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
00
வாழ்க! வளர்க தமிழ் ஏழேழு உலகமும்!
வணக்கம்

00


வேதா. இலங்காதிலகம் டென்மார்க் (ஓய்வுநிலை முன்பள்ளி ஆசிரியை,
பன்முகத் திறனுடை எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர்)

47. பா மாலிகை ( காதல்) 114 கொஞ்சம் பொறுப்பாயா!

கொஞ்சம் பொறுப்பாயா!

00
காதலை மறைக்காதே பூவினும்
மெல்லிய காதலை மறைக்காதே
மூடி மூடி வைத்தாலும்
இருமலும் காதலுமொரு குணமே
மல்லிகை, முல்லை, மருக்கொழுந்தாய்
ஊரெங்கும் வாசனை வீசுமே (காதலை..)

00
தேசிய நறுமணம் அறிவாயா!
தேங்காத உணர்வு புரிவாயா!
தெளிவற்ற மௌனம் பெரும்திரையே!
உன் விழிகள் காட்டிக் கொடுக்கும்
உன் கன்னம் நூறு சொல்லும்
தடுமாறும் பொழுதே தெரியுமல்லவா! ( காதலை..)
00
கன்னிப் பெண்ணின் மனதில்
காதல் இரகசியம் தானே!
மோதலிலும் காதல் வருமா!
விழியால் மொழி கூறேன்!
நிலம் ஏன் நோக்குகிறாய்
நினைத்திடு என்னை சுந்தரியே! (காதலை..)
00
நடித்திட நினைவும் வந்ததில்லை
மடித்து மூடிட மனதில்லை
படித்திட வேண்டுமா காதல்!
சுவாசம் போன்றது காதல்
பிரகாசமாக்கிட ஏன் தயக்கம்!
சுடுகலம் அல்லவே காதல்!
00
காதல் நாயகராவா! அன்றி
பொங்கும் எரிமலையா!

என்னிதயம் குளிருதே உனைக்காண
ஆகட்டும் பார்க்கிறேன்! அம்மா
அப்பாவோடு பேசுகிறேன்!
கொஞ்சம் பொறுப்பாயா! (காதலை..)
00


31-7-2021