161 சான்றிதழ்கள் – கவிதைகள்157

கவிதைச்சரணாலயம்
00


பூத்திடும் புத்தாண்டில்…..
00
எதிர் நீச்சல் வாழ்வில் ஒரு
புதிர் நீச்சலுமாகும் ஒளி மிகு
கதிர் நீச்சலாகவும் பிரகாசித்து வெளிக்கும்.
வெற்றிக்காய்ப் போடும் எதிர் நீச்சல்
வெள்ளி நிலவாய்ப் பூக்கட்டும் புத்தாண்டில்.

00
இங்கு வாழ்விற்காய் நீந்துகிறோம் நாம்
அங்கு இலங்கையில் மொழிக்காகவும் நீச்சல்
தங்கி வாழ இடத்திற்காகவும் நீச்சல்
பொங்கி உண்ணும் உணவிற்காகவும் நீச்சல்
மங்காது பூத்திடும் புத்தாண்டில் வெற்றியுகம்.
00

எண்ணம் பண்பட மனிதம் செழிக்கும்
வண்ணமுடை வாழ்வு வளமாய் மிளிரும்
பெண்ணியம் மதிக்கப்பட கண்ணியம் மேவும்
பண்பாடு உயர புண்ணான வாழ்வழியும்.
மண்ணிலே மதிப்புறு புத்தாண்டு பூக்கட:;டும்

00
வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க் – 30-12-2022

13.சிறு கட்டுரைகள், குறிப்புகள்

இந்தக் கட்டுரையை வாசித்துப் பாருங்கள். நல்ல கட்டுரை. 17-12-1992ம் ஆண்டு பிரசுரமானது
தென்மார்க் சஞ்சீவி இதழில்.

161.சான்றிதழ்கள் – கவிதைகள் 156.காதல் கனவே கலையாதே —காதலர்தினக் கவிதை

காதல் கனவே கலையாதே —காதலர்தினக் கவிதை

94.பாமாலிகை (இயற்கை)134

16.கவிதையுடன் பாரதிதாசன் சான்றிதழ்கள்.(கண்ணின் மணியே)

june 15 2018

14. சோழா

மயக்கும் மாதவன்கள்

(ஆரணன்-பிரமன் – சிவன் – திருமால்_)

பேரர்கள் பின்னும் வாழ்வு
ஆரணம் (வேதம்) ஓதும் வாழ்வு.
ஆரணியமற்ற ஆரத்தி வாழ்வு.
ஆரணனான குமிண் சிரிப்பால்
00

கன்னக் கதுப்பு மின்ன
கருத்துக் கவரும் சின்னக்
கண்ணன்கள் எங்கள் தங்கங்கள்.
என்ன பொருளும் இணையாகுமோ!
00

இதழ்கள் சொல்கின்ற கவிதை
இதயம் கவரும் பாவிதை
இதுதானே மயக்கும் இன்பம்
இணைவதும் அறிவின் இனிமை.

வேதா. இலங்காதிலகம்..டென்மார்க் 19-2-2022