160. சான்றிதழ்கள் – கவிதைகள்155.


அத்திரம் மையலாக விந்தை கூட்டுதடி
சித்திரக் கவிபாடி முத்திரை பதிக்குதடி
ஒத்திகை போடாமலே உள்ளம் ஒத்திசைக்குதடி
கைத்தலம் பற்றிட மொத்தமாய் ஆசையடி
எத்திசையிலும் உன் உரு ஒயிலாகுதடி
முத்தாரமே என் முழுமதி நீயடி
00

பத்தரை மாற்றுப் பசும் பொன்னே
நித்திரை களவாடிய நித்திலமே நிதியே
தித்தித்தல் உன் நினைவு திரவியமே
முத்தமிழ் மோகனமே சித்தமா ஒரு
முத்தம் பரிமாற சிந்தை மயங்குதடி
பத்திரம் நித்தம் சித்திரம் பேசுதடி.
00
வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 17-6-2023

159.சான்றிதழ்கள் – கவிதைகள்154.

மிக்க நன்றி
அருந்தமிழ் கவிக்கூடம் – போட்டி எண் -63


தலைப்பு – சித்திரைப் பெண்ணே
00


ஆதபக் கதிர் பரந்த அணைப்பின்
ஆதரிப்பால் செந்தமிழர் துன்பம் இறக்கட்டும்.
கீதமிசைக்கும் இன்பம் மனதை நனைக்க
சாதகமாய்ச் சிலிர்க்கட்டும் சித்திரை இனிதாய்
சிற்றலகால் சிறுகச்சிறுகக் கொத்தி வெளிப்படும்
குற்றமற்ற புத்தம்புதுக் குஞ்சாய் நிறக்கட்டும்!
00
பற்றற்ற அந்தகார இருட்டில் ஒளியாகவும்
அற்றம் அழித்து சுதந்திர ஒளியாயுதிக்கட்டும்.
ஞாபக வீதியில் எப்போதும் வானவில்லாய்
ஞான முத்திரை பதிக்கச் சிறக்கட்டும்!
ஞான சூன்யமாக்கியது ஓரின மனிதநேயத்தை
ஞாயம் தர இம்முறையாவது தொல்லைகள் அழிக்கட்டும்

வேதா. இலங்காதிலகம். தென்மார்க் – 12-4-2023

158. சான்றிதழ்கள் – கவிதைகள் 153யாதுமாகியவளே!.

சந்திரோதயம் கவிவனம் 21-3-2023 மிக்க நன்றி
00


யாதுமாகியவளே!..
00


ஏதுமாகி எடுத்தெறியாது நாதமாகி நல்ல
சூதுவாதற்ற அன்பால் கோதி இல்ல
பாதுகாப்பை உயிராகப் பேதமை இன்றி
மாதுரியமாக மதிப்பவள் பெண்மையின் குன்று!
00
அன்னை மனைவி மகள் மருமகள்
அன்வயத்தாரையும் அணைப்பாள் அன்ன பூரணி
அன்புடன் போற்றுங்கள் இன்னலின்றி வாழ்வீர்கள்
உதிரம் பாலாக்கி கருவேந்தும் யாதுமாகியவளே!
00
(அன்வயத்தார் – சுற்றத்தினர் )

வேதா. இலங்காதிலகம் -தென்மார்க் -21-3-2023

156. சான்றிதழ்கள் – கவிதைகள் 152. புத்தாண்டுக் கொண்டாட்டம்

தமிழ் தூரிகை கவிதைக் குழுமம்
00

புத்தாண்டுக் கொண்டாட்டம்
00

புன்னகை முற்றுப் புள்ளியின்றித் தொடரட்டும்
கன்னலாக சமாதான நதி ஓடட்டும்.
நேசப் பார்வைகள் நெருங்கி அணைக்க
பாசப் பரிவுகள் தலை நிமிர்த்தட்டும்.
வாசத் தமிழின் வசீகரம் உயரட்டும்.
00
தேச மக்கள் தலைநிமிர்ந்து வாழட்டும்.
வீசிடும் அன்புத் தென்றலில் சகல
நாச மனங்களும் நலிந்தே போகட்டும்
கூசிக் கனியட்டும் தம் செயலால்
ஆசியுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டட்டும்!
00
30-12-2022


155. சான்றிதழ்கள் – கவிதைகள் 151.

கவிதைத்தூவானம்
படக்கவிதைப் போட்டி.தலைப்பு –


தமிழ் நடனம்

மனம் பஞ்சாகக் கனதியின்றி மகிழ்வாய்
தனம் நிறைவதாய்ப் புனல் பூங்காவாய்
சினமற்ற எண்ணங்கள் தூரிகையில் துள்ளட்டும்
கனதியற்ற சொல் சிலைப்பது இன்பம்
கவிதையாய் அது நடனமாகி உலகாளும்
00
தமிழ் இறையாண்மை சுதந்திரம் வாழ்க்கை
அமிழ்ந்திடாத ஒரு வித வேதாளம்
அறிவின் பூபாளம் ஞானமாக இயங்கும்.
குறியான நோக்கான எண்ணக் குதிரை
சொற்கள் கருத்தியலாக அற்புத நடனமாகும்
00
-22-12-2022

154. சான்றிதழ்கள் – கவிதைகள் 151 அருந்தமிழே! ஆரமுதே!

Anna Durai is with Arivukkan Raju Naidu and

96 others

.

Admin

Group expert

August 18 at 1:53 PM •

14.08.22ல்

நிறைவுற்ற

அருந்தமிழே ஆராமுதே

கவிதைப் போட்டியின் வெற்றிப் பாவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதில் குழுமம் மிகவும் மகிழ்கிறது

வாழ்த்துகள்

பாவலர்களே

அருந்தமிழ்க் கவிக்கூடம்

கவிதைத் தலைப்பு

00

அருந்தமிழே! ஆரமுதே!

00

பெருஞ்சிறப்பாய்ப்; பெருந்தகைமை பெருக்கம் தருவதே

மருந்தாகும் எம் மனக்கவலைக்குச் செழுந்தமிழே!

வருந்தாது இலக்கியங்கள் வளமாக வாசித்தலே

திருந்திடத் தெளிவாக விருந்தாக எழுதலாமே

அருந்தமிழே ஆரமுதே என்னுயிர் நீயே!

00

ஐம்பெருங்காப்பியம் ஐந்தெழுத்து ஐங்குறு நூறாம்

ஐயப்பாடற்ற சங்கத்தொகை பொதிகைப் பேரொளி!

ஐந்திலக்கணத் தமிழ் புறந்தள்ளிடாப் புதையலே!

தொன்மை மொழியெம் குறுமுனித் தமி;ழே!

குமரிக்கண்டத்தால் முச்சங்கமேறிய முத்தமிழே எம்மியக்கமே!

00

வேதா.இலங்காதிலகம் – தென்மார்க் – 12-8-2022

153. சான்றிதழ்கள் – கவிதைகள் 150

நான் காணும் உலகம்

August 20  · 

நான் காணும் உலகம் நடாத்தும் கவிதைப் போட்டி -2022

போட்டி இலக்கம் : 68

போட்டியாளர் : வேதா.இலங்காதிலகம் – தென்மார்க்

தலைப்பு – பழமையின் மகிமை

::::::::::::::::::::::::::

152, சான்றிதழ்கள் – கவிதைகள் 149. பண்பாடும் கலாச்சாரமும்

தமிழ் சேவை – காவியக் களஞ்சியம் – 64. கவிதைத் தலைப்பு
பண்பாடும் கலாச்சாரமும்


சொற் பொருள் விளக்கம் –
அண்ணித்த –பொருந்துதல்
வண்ணம் – வளப்பம் மாட்சிமை
மண்பாடு – பூமியிள் இயல்பு மொழி
மேட்டிமை – மேன்மை பதம் -சொல்
ஒண்மை – ஒழுங்கு.
00
பண்பாடு பழந்தமிழ் பதமாம் – கலாச்சாரம்
அண்ணித்த அருத்தமான வடமொழி (சமசுக்கிருத) வண்ணம்.
மண்பாடு இயற்கை மகத்துவப் பள்ளியால்
எண்ணம் நடவடிக்கையால் எருவான பழக்கவழக்கம்
பண்பட்டுக் கற்றறிந்த பயில்வோரின் இணைப்பு
தொன்றுதொட்டுச் சீராக்கித் தொட்டவுயர் நற்தன்மை – பண்பாடாம்.
00
ஒண்மை ஒற்றுமை ஒருங்கிணைந்த கூட்டணி
மண்சார்ந்த கலப்பாக மேட்டிமை நிலைப்பாடு
உண்மையறிவு பஞ்சபூத உறவுக் கட்டமைப்பு
தூண்டும் இலக்கியமும் தொழில்சார் தெரிவுகளும்
உண்டி சமயம் உன்னத நடனமிசை
கொண்ட வீரம் கலைவழியாலுமான தனிப்பெருமை
00
அன்றைய பாரம்பரியம் அழியாதின்றும் நிலையுற்றது.
நன்றான மொழியான நல்விதையூன்றல் சிகரமேற்றும்.
என்றும் விழாக்களை ஏற்றி நடைமுறையாக்கல்
சின்னஞ்சிறார்களை அவ்வழி சீராய் நடத்துதல்
திருக்குறள் ஓளவை தருமநெறிப் பாதையிலிணைத்தல்
பண்பாடு; காக்கும் பாரம்பரியப் பொற்பாதை
00
மேற்கத்தியப் பண்பாட்டு மயக்கத்தில் சுயமிழத்தல்
ஏற்பென ஆடை உணவு மொழி
மாற்றியெம் மூத்தகுடி முத்திரையை அழித்தல்
தமிழையொதுக்கித் தரமெனப் பிறமொழிப் பரம்பலும்
ஒருவனுக்கு ஒருத்தியாய் ஒழுக்கத்தால் வழுவாமலும்
சமூகக் கட்டமைப்பை மதித்தல் வெகு பிரதானம்.
00
ஆலய வழிபாடு ஒன்றிணைந்த துதிப்பாடல்
இமாலயம் எட்டும் பண்பாட்டுப் பூசனை
கல்வியாலய நற்போதனையும் கருவானதாயகப் பிணைப்பும்
வரலாற்றுச் சுவடுகள் வகையாய் ஆவணப்படுத்தலும்
தமிழர் பண்பாட்டைத் துளிர்த்து மலர்விக்கும்
தமிழர் பணபாட்டுத் தூய்மைகளைப் பேணுங்கள்.
00
விருந்தோம்பல் – தீதும் நன்றும் பிறர்
தர வாரா – யாதும் ஊரே
யாவரும் கேளீர் – எம்பண்பாட்டுக் காலடிகள்.
கற்கோயில் கட்டிடக்கலைகள கனத்த அடையாளங்கள்.
அற்புத ஆதிக்குடியின் அருமைகளைப் போற்றுவோம்.
தொன்மை மட்டுமல்ல தொடர்ச்சியிலும் கட்டமைவோம்.


வேதா. இலங்காதிலகம் – தென்மார்க் – 6-5-2022

151. சான்றிதழ்கள் – கவிதைகள் 148. சுருங்கும் சுற்றமும் நொறுங்கும் சொந்தமும்.

உலகத் தமிழர் பாசப் பறவைகள்…..

சுருங்கும் சுற்றமும் நொறுங்கும் சொந்தமும்.

சொற் பொருள் விளக்கம்.
( அருங்கு – உயர்வுடையது – சிறப்புடையது.
ஒருங்குதல் – ஒதுங்குதல்.
முருங்குதல் – அழிதல்.
நுறுங்குதல் – சிதைதல்
கருங்காடு – சுடுகாடு)

00

அருங்குடைய அன்பு அமைதி இன்றி
சுருங்கும் சுற்றமாய் வாழ்வு இறுகி
ஒருங்குதலாகி ஒட்டுறவாடல் ஒழிகிறது சுயநலத்தால்
கருங்காடு ஏகுகிறது நொறுங்கும் சொந்தம்.
முருங்குதல் அற்ற மனம் உருவாக்கு!
00
குறுஞ்சிரிப்பு – ஆதரவெனும் குறுங்கோல் எடு!
நுறுங்குதல் என்பது மனிதம் மறைந்ததால்
உறுதி பொறுமை உயிரற்றுப் ;போனது.
பொறுப்புடன் நடந்து சுற்றத்தை விரித்திடு!
நொறுங்காது செழிக்கும் உன் சொந்தங்கள்!


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க். 18-4-2022

150. சான்றிதழ்கள் – கவிதைகள் 147. மண்ணில் மகளிரின் மாண்பு

மண்ணில் மகளிரின் மாண்பு

எண்ணில் வியப்பு எழும் பிறப்பு
மண்ணில் மகளவள் மாண்பு திறப்பு.
அண்ணித்தல் கொற்றவளாய் அனைவருக்கும் சிறப்பு
பெண்ணில்லா வீட்டில் பெருமை இழப்பு.
00
பெண்மையை ஆணும் ஆண்மையைப் பெண்ணும்
பண்போடு உணர்ந்தால் உயரும் பிழைப்பு
கண்ணாக மதித்து வாழ்தலே இல்லறம்
விண்ணையெட்டும் வேதனைப் பெருமூச்சு அழியும்
00
வண்டில் சக்கரமாய் இல்லறத்தில் இணைந்து
கண்மணிகளைப் புதுவண்ணச் சமுதாயம் ஆக்கி
உண்மை தருமம் நற் செங்கோலாக்கி
தண்புனலாய்த் தளபதியாய் தூணாவாள் துணிந்தவள்.
00
உருவாக்கும் திறனால் பெண் திடமாக
உருவானாள் வண்டமிழ்த் திறனுடன் விண்ணெட்ட
பாரதிக்கு நிவேதிதா – அதியமானுக்கு ஒளவை
விவேகானந்தருக்குச் சாரதாதேவியாகத் தாக்கங்கள் ஏற்படுத்தினார்


23-3-2022