20. கண்ணகி-10. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – காதலில் கருக்கொண்ட காப்பியங்கள்.

 

nila-kannaki-10

*

காதலில் கருக்கொண்ட காப்பியங்கள்.

*

சிலம்பு + அதிகாரம் சித்தியடையாக் காவியம்
கலம்பகம், ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
சலங்கையோசையில் கவனம் குலைந்த கோவலன்
அலங்கோலமாகிய துன்பியல் இன்பியல் காப்பியம்.

*

குண்டலகேசி, திருடன் காளன் காதலோவியம்.
கண்டதும் காதல் திருமணம், கணவன்
கண்டபடி திருட, கண்டிப்பு மனைவியால். 
கண்டித்தவளைக் கொல்ல எண்ணியவனைக் கொன்றாள்.
அண்டுமாசையே துன்பக் காரணியென்னும் காப்பியம்.

*

ஒருவரைக் காணாது ஒருவர் காதலித்த
இருவர் ‘ நளன் தமயந்தி ‘ துணைக்கதையாம்
வருவது மகாபாரதத்தில், அன்னத்தூது சிறப்புடைத்தாய்ப்
பெரும் துன்பப் படிப்பினைக் காப்பியம்.

*

அம்பை, சௌபல நாட்டு சால்வனின் 
செம்பாகக் காதலின் தோல்வியால், தேவவிரதனை
அம்புப் படுக்கையில் இட்டது பழிவாங்கல்.
தெம்புடை மகாபாரதத்தில் பல காதல்.

*

அரியாசனக் காதலால் சகுனியோடு இணைந்த
துரியோதனாதியரின் பதவிக் காதலால் ஒரு
உரிமைப் போரான காப்பியம் மகாபாரதம்.
உயிரை உருக்கி ஊக்குவிக்கும் காதற் 
பயிரின்றேல் ஓவியம், காவியம், காப்பியமேது!

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 10-5-2018

*

love- 4

6. (பாமாலிகை (தமிழ் மொழி. 53). எழுத்து.6

eluthu

*

எழுத்து.6

*

எண்ணங்களின் நிழல், எண்ணப் படங்கள்
எண்ணப் பறவைகள், எண்ணங்களின் கும்மி
எண்ணக் கொலுசுகள் வண்ணப் பரதம்,
திண்ணமான அகத் தீயின் கொழுந்துகள்!
கைநழுவி உதிர்வதல்ல எழுத்துகள்
கைகாட்டும் வழிகாட்டி, கைத்தடியின்னும் பல.
திசையறியாது வீழும் இறகல்ல பெரும்
நசையோடுதிரும் வாசமுடை மலர் எழுத்து.

*

நீதிக் கதவின் திறவுகோல் எழுத்து.
பீதியின்றி உலகையும் அளக்கிறது நிறுக்கிறது.
தீதுடை உலக மௌனத்தை ஊடுருவுகிறது.
ஆதி சைகை, குறியீடு, கல்வெட்டு
ஓலைச்சுவடியென்று விழுந்த கற்பக விதை.
மூலைகளில் ஒதுங்கிய துன்பம் கிழிக்கும்
ஆழ்ந்த மௌனத்தை ஆலயமணி ஓசையாய்
வீழ்ந்து சுவாசம் நிறைக்கும் எழுத்து.

*

எழுத்துப் பால் உறிஞ்சி உறிஞ்சியே
எழுச்சியுடன் மனிதன் பாரில் பண்டிதனாகிறான்.
எழுவாய் சொற்பிழம்பே! தயக்கங்களின் தடியடியில்
எழுத்துக்களின் உராய்வு ஒரு நிசப்தக் குழியில்
விழுந்தால் இலட்சிய நுரைகள் என்னாவது!
ஏகலைவன் கணையால் சொற்கோடுகளின் ஆலிங்கனத்தில்
வாக்கியங்கள் இரசவாதமாய் வீறுநடை போடும்.
பாக்கியமாகி ஏற்றும் ஊதுபத்தி வாசனையேயெழுத்து.

*

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்..  15-11-2017

*

https://www.vallamai.com/?p=81291

akaram

11. குறுகிய வரிகள் (16வதில் 46-47-48

sitippum

*

செல்வந்தன் ஆகிடு! 

*

சிரிப்பும் மகிழ்வும் மனிதனுக்கு
விரிந்த செல்வம் வாழ்வினிலே.
அரிக்கும் மனத்துன்பம்
எரிக்கும் கொடிய வறுமை.
தரிக்கத் தடமின்றி துன்பத்தை
உரித்திடு! ஒழியும் வறுமை.
28-8-2010.

*

puthumai-1

*

paravai

*

உன் காலடிப் பதிவிலே
என் கவியடி மனதிலே
இன் முதலடி தேடுதே!

*

 

12. பாமாலிகை (இயற்கை) 90. நீரும் நிலமும்

 

 

neetum nilam.

*

நீரும் நிலமும்

*

வேரும் மரமும் போல
தேரும் திருவிழாவும் போல
நாரும் பூவும் போல
நீரும் நிலமும் ஒன்றையொன்று
சாரும் அன்றேல் வேதனையே

*

நீரற்ற நிலம் பாலைவனம்.
நிலமின்றி மனிதன் வானில்
பலமின்றி மிதப்பானோ சடமாக!
நிலத்தின் (பூமியின்) நான்கில் மூன்று
சலத்தால் சூழ்ந்து உள்ளதே!

*

உலகுருவானது நதிக்கரை வாழ்வினால்.
நிலம் நீரின்று பட்டினி
கலகமுடை பஞ்சச் சாவுகள்.
உயிர் தோற்ற ஆதாரம் நீரே
பஞ்சபூதங்களில் இரண்டும் இவையே.

*

நிலத்தின் (பூமியின்) எல்லை நீரே
நிலம் மழையைச் சேமித்து
நீராவியாய் வானுக்கு அனுப்ப
சலமென மழை கொட்டுகிறது
பச்சையாடையணிய நிலத்திற்கு நீரளிக்கிறது.

*

நாடு, காடு, மனித வளம்
காப்பவையிவையே.

*

8-5-2017 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

 

neetum

67. பா மாலிகை ( கதம்பம்) நன்றியுணர்வு 559.

 

 

nanry-2

*

நன்றியுணர்வு

*

குன்றென மனிதனை உயர்த்திக் காட்டும்
நன்றியுணர்வு மனிதம் வென்றிடச் செய்யும்.
நன்றியுணர்வால் அநியாயத்திற்குத் துணையானான் கர்ணன்.
வென்றிட முடியாத நிலையானது அது.
மனித சரித்திரத்தில் கலாச்சாரங்களில் மதிக்கப் படுவது
புனிதமான மனநலத்தினை வளர்க்கும் நன்றியுணர்வு.
மனித உறவையுருவாக்கி உறுதிப்படுத்தும் செல்வாக்குடைத்து
மனித நெருக்கத்தின் பிணைப்பு நன்றியுணர்வு.

*

சிறந்த ஆன்மீகப் பயிற்சியாம் நன்றியுணர்வால்
பிறக்கும் மகிழ்வலைகள் இதயத்திற்கு ஒளியூட்டும்.
சிறக்குமன்பால் நன்றி மகிழ்வு நல்லிணக்கமுருவாகும்.
திறக்குமொரு நல்ல குமுகாய வாழ்வு.
பெற்றவர்கள் உறவுகள் நட்புகளிணைவில் நம்மை
வெற்றியுற வைப்பது நன்றியெனும் உணர்வே
குற்றமின்றி திருவள்ளுவரும் சிறப்புற விரித்துள்ளார்.
கற்றுயரும் போட்டிகளிற்கும் சிறப்புடை நன்றிகள்.

*

நன்றியுணர்வு பலர் மறந்த சொத்தாகிறது இன்று.
இன்றும் தைப்பொங்கல் நன்றியுணர்விற்கே உரியது.
அன்றன்று பெறுமுதவி அனுபவத்திற்கு உணர்வுடைய
உள்ளத்தின் பகிர்வே இனிய நன்றியுணர்வு.
குறைகூறும் பழக்கத்தை நன்றியுணர்வு கொன்றிடும்.
கன்றின மனம் இலேசாகும் இன்றியமையாது
நன்றி கூறுங்கள் அற்பதங்களுங்களை வெல்லும்!
நன்றியுணர்வோடு பாராட்டுதலும் நம்மை உயர்த்தும்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.  ஒகஸ்ட் 2017

*

 

lines-flowers-and-nature-475142

6. பா மாலிகை (வாழ்த்துப்பா) 54. தமிழுக்கு மகுடம்! வாழ்த்துகள்!

 

sumeka

*

தமிழுக்கு மகுடம்! வாழ்த்துகள்!

*

ஐந்து வயதில் ஆனைமுகத்தானை வணங்கி

ஐசுவரியமாம் தமிழை அள்ளத் தொடங்கி

ஐமிச்சமின்றி பதினெட்டு வயதில் ஆசிரியர்களாகினார்கள்

ஐக்கியமாய் தமிழ் நைந்திடாது கைகொடுக்கிறார்கள்.

*

பல மொழிகள் படித்தால் பிள்ளைகள் பதறிடுவாரென்று

பயமுறுத்தும் பெற்றோரைக் கொண்டவரல்லர் இவர்கள்.

படிப்படியாய் தமிழோடிவர் உயர் கல்விப்

படியிலுமாய் ஊக்கமீந்த உதாரணப் பெற்றோருடையவர்கள்.

*

வித்துவத் தமிழ் படித்தால் முன்னேறவியலாதென்று

விதண்டாவாதம் பேசும் பெற்றோருக்கு முயன்று

வியப்புடன் முடியாதென்பதை முடித்துக் காட்டியவிளம் நங்கையர்

விஷ்ணுகா – சிவராசா, சுமேகா – சிறீஸ்கரன்.

*

ஊக்கமூட்டிய பெற்றோர், ஆசிரியர்கள், பிள்ளைகளையும்

ஊருக்குக் காட்டி வாழ்த்தும் விழாவில்

ஊரான ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் ஏழாண்டின்

ஊட்டமுடைய நகரின் முதன் முதலான செயலிது.

*

ஓங்குதற் செயலாக எடுத்துக் காட்டாக

ஓப்பில்லாத் தமிழ் கடலில் முத்துக்களாயிவர்களை

ஓன்று கூடி தெரிவு செய்ததைச் சமூகம் வாழ்த்தி நிற்கிறது.

மேடை புதிதல்ல இவர்களிற்கு! மேலும் வளர்க! வாழ்க!

*

வாழ்த்துவோர்.- ஓகுஸ் மக்கள்.9-4-2016.

(வரிகள் – வேதா. இலங்காதிலகம்.  ஓகுஸ் டென்மார்க்.)

*

lotus-border

 

66. பா மாலிகை ( கதம்பம்) – 558. தலைவிதியும் மாறும்.

 

 

aaa-kk

*

தலைவிதியும் மாறும்.

*

மனம் கோதும் சொல்லாகத் தலைவிதி.
கனமேறிக் களைக்கும் போது விதியிது
என விடை கண்டமைதி கொள்கிறோம்.
இனம் கண்டு பரிகாரம் தேடணும்.
இல்லை விதியை மாற்றலாம் என்பவன்
வினை நிறைத்துப் பாதை மாற்;றுகிறான்.
படித்து உயரும் நினைப்புச் செயலாகி
வெடித்து விதி மாற்றும் திறனடைகிறது.

*

ஓர் இனிய காதல் புன்னகை
சீர் வெற்றியெழுதித் தன் காலடி
சோர்க்கும் ஓர் இனிய நந்தவனத்தில்
போர்த்தும் சுகந்தமும் விதி மாற்றும்.
தலைவிதி மொழிந்து கலையுணர்வை அடைக்காது
வலையுடையுங்கள் மூட நினைவகற்றி, விழியுங்கள்.
இருட்டில் நீச்சலடிக்காது மின்சாரம் ஏற்றுங்கள்.
மருட்டும் எண்ணத்தை அகௌரவப் படுத்துங்கள்.

*

நிலை விதியலை நல்லதானால் உள்ளே
தலைவிதியெனும் குப்பை கொட்டுதல் அவலம்.
உயர்வு மேலும் உயரவே உன்னும்
உதவாத தலைவிதி கூறி உறங்கலேன்.
விளக்கினுள் விட்டில் பூச்சியாகாமல் மனிதன்
அளக்க வேண்டும் உலகை அது
பளபளக்கும் அவன் சாதனைப் புகழாகட்டும்.
மளமளவென அவனேறிட தலைவிதி கவிழும்.

*

வெற்றிக்கு மரணமில்லை, வெற்றியின் பிரசவம்
சுற்றியுள்ளது எமது கையில். இதை
முற்றாகப் பலர் மறக்கிறார் பின்
சாற்றுகிறார் விதியென்று அதில் சாய்கிறார்.
துன்ப சுவடழித்து மலரும் மொட்டுக்கள் 
துணை கொண்டு இன்பக் காட்சியைத்
துணிவுடன் உருவாக்கி ஊக்க நிலை
துல்லியமாய் எழுப்பி தலைவிதி சோகமழிக்கலாம்.

*

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 21-8-16

*

12720-22coloured

19. கண்ணகி-9. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்- வீரம் விளைத்த தமிழ்.

 

 

nila-kannaki-9

*

வீரம் விளைத்த தமிழ்.

*

அச்சமில்லை இச்சகத்துள்ளோர் துச்சமாய் எண்ணினும்
உச்சிமீது வானிடிந்து உதிர்ந்தாலும் அச்சமில்லை
பச்சைப் பிள்ளையாய்த் தமிழில் வீரமூட்டும்
பாரதியார் பாடலைப் பள்ளியில் பாடினோம்

*

பயமெனும் பேய்தனையடித்து பொய்மையை அழித்தே
தமிழோடு வீரம் துளிர்த்தது பொய்யல்ல.
அமிழ்தான தமிழில் அன்றும் இன்றும் 
கமழ்ந்தூட்டுவது காதலுடன் மனதினுறுதியே.

*

தமிழ் மூவேந்தரும் இமயக் கூரையில்
முத்தமிழ் கொடிகளாம் வில், புலி, கயலை
தமிழுக்குத் தொண்டெடுத்து ஏற்றியது பெருமிதம்.
தமிழ் பெண்களின் வீரவுணர்வும் புறநானுறிலுண்டு.

*

முல்லை நிலத்தின் ஏறு தழுவுதல்
ஏறுகோள் என தொல்காப்பியம் வீரமென்கிறது.
புல்லுண்ட காளைகளை ஆயர்குல இளைஞர்
கொல்லேறு, மாக்காளையென்று தமிழால் போற்றினார்.

*

புலி வேட்டையில் வீரமறவரிடம் பலியான
புலி நகங்கள், பற்களும் மனைவிக்குப் பரிசானது
கோட் புலி, விறல் மிண்டர், 
வேங்கை மார்பன் பிள்ளைகளுக்கு வீரப்பெயராக்கினர்.

*

ஏட்டைப் பெண்கள் தொட்டால் தீமையல்ல
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டமாட்டோ மென்று
பட்டமாள சட்டமியற்ற பெண்கள் கிளம்ப
பாட்டிலே பாரதியும் பாடிக்காட்டியது வீரம்.

*

கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மனும் சீறிய
ஒப்பில்லாத் தமிழ் வீரத்தமிழ்
கண்ணகி, குயிலி வேலுநாச்சியார் உறவாடிய
வீரம் விளைத்த தமிழ் வாழ்க!

*

26-4-2018  வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.

*

kaddapomman-devider

18.கண்ணகி-8. மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் (தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.)

 

 

nila-kannaki-8

*

தருணத்தில் எழுந்த தத்துவஞானம்.

*

( விறலோன்- வீரன், திண்ணியன்;)

உறவுகள் எதிரிகளாய் நிறம் மாறியது
அறமல்ல பாபமிது! அழிவதென் குலமே
பிறரல்ல! அறிவிழந்தேன் போரற்பமானது வேண்டாம்!
விறலோன் இரக்கம், குழப்பமிணைய நின்றான்.

*

மறுத்த காண்டீபனை மயங்கியவனை தருணத்தில்
உறுதியாக மண்ணும், மரமியற்கையும் நானேயென
சொன்னவன் கண்ணன் சொற்பழியும் எனக்கே
சொக்கட்டானாட்டுவோன் சொல்கிறேன் வில்லெடு! போர்தொடுவென்கிறார்

*

பந்தம் பாசம் பற்றை விடு!
அந்தம் வரை அதற்கப்பாலும் வருவது
சொந்த ஆன்மா, வந்த மேனியல்ல!
துணிந்திடு! தர்மம் தழைக்கும் காண்டீபமெடு!

*

தருணத்தில் விஐயன் கலக்கம் கீதோபதேசமாக
தத்துவஞானமாய், வேதசாரமாய்த் தகவுடன் மனதுள்ளாக
முத்தாக எண்ணி முனைந்தான் போரிட
கொத்தான கண்ணன் உபதேசத்தால் போரானது.

*

மனம் தூய்மையாக்கும் மதுரமொழி கீதை.
ஞானமாய் அண்டத்தினியல்பை, கடவுளின் செயலையுரைப்பது.
தானமாகத் தன்னுரையை வேதமாக்கியவன் கண்ணன்.
கனதியான மகாபாரதத்தில் அடங்கியது கீதை

*

காலமான இராசாசியின் கைவிளக்கு, காந்தியின் அநாசக்தியோகம்
பால கங்காதர திலகரின் கர்மயோகம்
காலங்கள் அனைத்திற்கும் ஏற்ற கீதையுரைகளே.
ஞாலத்து உயிர்களெனதே! எல்லாமும் நானேயென்பது கீதை.
*
(இராஜாசியின்- வடஎழுத்தென்பதால் அப்படி எழுதினேன்.)

*

 19-4-2018  Vetha Langathilakam   Denmark.

*

vision

17.கண்ணகி-7 மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள் தேன் சிந்திய வானம்

 

nila-kannaki-7

*

தேன் சிந்திய வானம்

*

தேன் சிந்திய வானம்
தான் கண்ணதாசன் மனம்.
எளிமை, அழகு, உயிரோட்டம்
ஓசை நயம், பொருட்செறிவு
ஓங்கிய தேன்மழை வரிகள்.

*

கண்ணதாசனும் கவினுடை பாடலும்
எண்ணம் கிளறி ஏக்கமாக்கும்.
வண்ணமாய்ப் படிப்பினை ஊன்றும்
திண்மை நெஞ்சைத் தரும்.
உண்மைக் காதலும் தரும்.

*

பார்த்தேன் படித்தேன் களித்தேன்
பாடிடத்தான் துணிந்தேன் இதனைத்தான்
அத்தான் என்னத்தான் அவர்
என்னைத் தான் சேர்த்திணைத்து
முடித்தான் அது கவித்தேன்.

*

சத்தான கருத்துத் தேனாறு
வித்தக நாடித்துடிப்பின் பாலாறு
அவனுத்தமக் கவிநயம் தனித்துவம்
முத்தாமவன் வாழ்வு அனுபவம்
அத்தனையும் சிந்தனைத் தொகுப்பு.

*

சமுதாய வழிகாட்டும் வரியழகு
அமுதான குழந்தைப் பாடலழகு
அர்த்தமுள்ள இந்து மதமழகு
அர்ப்பணமான யேசு காவியமழகு
அளித்தவன் தமிழைப் பழகு.

*

இந்தியப் புலத்து முன்மாதிரி
சந்தப் பாவுலக வாரிதி
சாவிலும் மறையாப் பாவாட்சி
ஓவியமானவன் அறிவு மாட்சி
காவியங்களான விசுவரூப ஆட்சி

*

காலவோட்டம் குறைவானாலும் மேலோட்டமாயின்றி
நினைவூட்டத் தோணியிலே நிலைக்கிறாய்.
கருவூட்டி மெருகூட்டி வலுவூட்டி
கருத்தூட்டி அமுதூட்டும் கவிகளாய் 
வாழ்வோட்டத் தந்தாயே அஞ்சலிக்கிறோம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 12-4-2018

*

 

Center-Divider