33. வெற்றி

மயக்கும் மாதவன்கள்

(ஆரணன்-பிரமன் – சிவன் – திருமால்_)
பேரர்கள் பின்னும் வாழ்வு
ஆரணம் (வேதம்) ஓதும் வாழ்வு.
ஆரணியமற்ற ஆரத்தி வாழ்வு.
ஆரணனான குமிண் சிரிப்பால்
00
கன்னக் கதுப்பு மின்ன
கருத்துக் கவரும் சின்னக்
கண்ணன்கள் எங்கள் தங்கங்கள்.
என்ன பொருளும் இணையாகுமோ!
00

இதழ்கள் சொல்கின்ற கவிதை
இதயம் கவரும் பாவிதை
இதுதானே மயக்கும் இன்பம்
இணைவதும் அறிவின் இனிமை.

வேதா. இலங்காதிலகம்..டென்மார்க் 19-2-2022

31. வெற்றி

கப்பல்

ஒரு பெட்டியில் 3 விதமாக ஆக்கம் செய்யலாம் ( திறீ இன் வண்) creater three in one அத்துடன் ஒரு துவாய் இலவசம். வெற்றி லீகோவில் செய்த முதல் கப்பல் .(செய்முறை புத்தகத்தில் உள்ளது பார்த்துச் செய்வார்.)

2. கப்ரன் வீடு..

3. captan island—கப்ரன் தீவு

வகை: வெற்றி

29.

Vetha Langathilakam added 4 new photos.

April 17 · எங்கள் பெரிய செல்லக் குட்டி வெற்றி க்கு17-4-2020 வெள்ளிக்கிழமை எட்டாவது பிறந்த நாள்.படங்கள் மருமகள் சாந்தி அனுப்பியதுகேக்கை நான் செய்து ஒட்டியது கணனியில்ஆத்தி சூடி – கண்டு ஒன்று சொல்லேல்ங போல் வளைசனி நீராடு.ஞயம் பட உரை வரைஇரண்டு குஞ்சுகளும் மனப் பாடமாகச் சொல்லுவார்கள்.பேரன் சகல சம்பத்துகளும் பெற்று ஆரோக்கியமாகவாழ எமது ஆசிகளும் இறையருளும் நிறையட்டும்

.”” கன்னங்களை ஆசையாக நீவி

முன்னெற்றியில் முழுதாக முத்தமிட

சின்ன உடலைக் கட்டியணைக்க

என்னால் முடியவில்லைக் கண்ணா ” (corona lockdown

28. வெற்றி – யானை

யானை

யானை வருகுது யானை வருகுது
எல்லோரும் விலகுங்கோ
சுளகு போல காதாம்
தெரியவில்லை எனக்கு (யானை)

கழுத்தில் மணியும் இல்லையே
நாங்கள் கையில் மணியை எடுப்போமா!
நாங்கள் எறி யிருக்க
தாத்தி சுமக்கிறார். (யானை)

யானை பெரிய யானை
மெல்லப் பொகுது யானை
தள்ளி நில்லுங்கோ
யானை வருகுது யானை வருகுது..

(அப்பம்மாவிற்குப் பெயர் தாத்தி.
அப்படித்தான் என்னை அழைப்பார்கள்)

21-3-2020

வேறு:-

சவாரி….

யானை குதிரை சவாரியிதோ
யானை; பாகன் யாரிங்கே
யாசிக்காது வந்த சொந்தம்
யாமியம் (தவம்) செய்தவர் நாம்.
00

யாழினும் மழலை இன்பமும்
யாத்திரைச் சவாரியும் ஆனந்தம்
யாரிங்கே குதிரை ஓட்டி
யாப்பியம் (பொழுதுபோக்கு) இது இன்பம்.
00

கொள்ளை ஆனந்தம் பேரனுக்கு
கொண்டாட்டம் தாத்தியோடு இவனுக்கு
திண்டாட்டம் சிலவேளை எமக்குண்டு
நண்டாட்டம் கோணலாய் நடந்திட்டால்

2020

27. வெற்றி – பச்சை மண்.

பச்சை மண்.

பிறரது செயல்களிற்கு அபிப்பிராயம் கூறுவது வழமையான மனித இயல்பு தானே!
தனது மனைவியை அம்மா என்றும் தன் கணவரை அப்பா என்றும் எமக்குத் தெரிந்த ஒருவர் அழைப்பதைப் பற்றி என் கணவர் கூறிச் சிரிப்பார்…..; எமது ஆரம்ப கால திருமண வாழ்வில்;.
எமக்கு மகன் பிறந்து வளர்ந்து பேச ஆரம்பிக்க மகன் தாயாகிய என்னை ‘வேதா’ என்றும் தந்தையாகிய கணவரை ‘இஞ்சேருங்கோ’ என்றும் அழைக்கத் தொடங்கினார். எங்களிற்குச் சிரிப்பு!
நான் கணவரிடம் ‘ நீங்கள் என்னை அம்மாவென்றும் நானுங்களை அப்பாவென்றும் அழைத்தால் மகனும் பழகுவார்’ என்றேன் . அப்படியே செய்தோம்.
பிள்ளையும் நாளடைவில் சரியாகி எம்மை அம்மா, அப்பாவென அழைத்தார்.
இது அன்று….
இது இப்படியிருக்க எமது பேரனின் தாயாரின் சகோதரியும் 9 வயது மகளும் இரண்டு கிழமை விடுமுறையில் மலேசியாவிலிருந்து டென்மார்க் வந்தனர்.
எமது பேரன் வெற்றியின் பெற்றோரை பெரியம்மா, பெரியப்பா என்று தங்கை மகள் அழைப்பார். வந்து ஒரு கிழமையாகியது. ‘இந்தப் பகிடியைக் கேளுங்கோ அன்ரி வெற்றி எங்களை பெரியம்மா, பெரியப்பா என்று அழைக்கிறார்’ என்று மருமகள் சொல்லிச் சிரிக்கிறார்.
குழந்தைகளைப் பச்சை மண் என்போமே! இது தானே!.
வீட்டில் நாங்கள் வெற்றியின் குறும்புகளைத் தான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சிரிப்போம்.

பச்சை மண்ணெம் வெற்றி
பசுந்தான செல்வமே பேராண்டி
இச்சையுடன் உன்னோடு பழகி
இழைந்து குழைந்து இளகி
அச்சுப் பிச்சு மழலையில்
அகங்குளிர நனைகிறோம்.
இச் சுவை யெம்மை
இன்பலோகத்தில் அமிழ்த்தும்.
அச்சுவை முதிர்ந்து நீயும்
அருமையாய் வளர்க கண்ணா!

2013

26. வெற்றி

6 years ago

September 6, 2013 at 8:53 AM · 

வெற்றியின் சாகசம்!!!!!

மிகவும் ஆசையாக வெற்றிக்கு ஆடுகின்ற குதிரையை வாங்கி வந்தேன். பெரிதாக ஆர்வமின்றி இருந்தார் தூக்கி மேலே போடுங்கள் என்றேன்.
இப்போது இவரது ( ) சிறந்த கருவி இது தான். கிறீச் கிறீச்சென்று ஆடும் சத்தம் வீடு முழுக்கக் கேட்கும். இப்போ என்னடாவென்றால் அதில் ஏறி நிற்கிறார். பயங்கரமன்றோ! நிற்பதைப் படம் பிடிக்க முயன்றேன் முடியவில்லை. அதில் பாதியை எடுத்துள்ளேன்…..

வெற்றி வளர்ந்து பாடசாலை சென்ற போது

25. வெற்றி – B days

Vetha Langathilakam added 7 new photos.April 18, 2019 · 

குளிர் வெயிலாகக் காலம் உருண்டு
தளிர்கள் துளிர்த்து மலர்கள் மலர்வதாய்
மிளிர்கிறது காலம் மிக வேகமாக.
மிளிர்தலாக (பெருமையடைவதாக)எங்கள் வெற்றியும்
வளர்ச்சியடைகிறான் ஏழு வயதாக
எங்கள் மூத்த பேரனின் சில படங்கள் ஏழு ஜனன தினம்..

எங்கள் செல்லக்கட்டி முதல் பேரன் 6வது பிறந்த நாள் கொண்டாடினார்
நேற்று 17-4-2018. 

வெற்றி 4வது பிறந்தநாள்.2016.

Vethris 3rd B-day

Vethri’s 2nd b’day 2014.