161 சான்றிதழ்கள் – கவிதைகள்157

கவிதைச்சரணாலயம்
00


பூத்திடும் புத்தாண்டில்…..
00
எதிர் நீச்சல் வாழ்வில் ஒரு
புதிர் நீச்சலுமாகும் ஒளி மிகு
கதிர் நீச்சலாகவும் பிரகாசித்து வெளிக்கும்.
வெற்றிக்காய்ப் போடும் எதிர் நீச்சல்
வெள்ளி நிலவாய்ப் பூக்கட்டும் புத்தாண்டில்.

00
இங்கு வாழ்விற்காய் நீந்துகிறோம் நாம்
அங்கு இலங்கையில் மொழிக்காகவும் நீச்சல்
தங்கி வாழ இடத்திற்காகவும் நீச்சல்
பொங்கி உண்ணும் உணவிற்காகவும் நீச்சல்
மங்காது பூத்திடும் புத்தாண்டில் வெற்றியுகம்.
00

எண்ணம் பண்பட மனிதம் செழிக்கும்
வண்ணமுடை வாழ்வு வளமாய் மிளிரும்
பெண்ணியம் மதிக்கப்பட கண்ணியம் மேவும்
பண்பாடு உயர புண்ணான வாழ்வழியும்.
மண்ணிலே மதிப்புறு புத்தாண்டு பூக்கட:;டும்

00
வேதா. இலங்காதிலகம்.- தென்மார்க் – 30-12-2022

பின்னூட்டமொன்றை இடுக