68. Photo poem – பிரிவென்றால் பிரியட்டும்!..

பிரிவென்றால் பிரியட்டும்!..
00

அடம் பிடிவாதத்தைக் கடகம் நிறையப் பசளையிட்டு
கரிசனையாய் வளர்த்தால் நேசமலர்கள் மலராது.
பிரிவைத் தீர்மானிப்பவர் பிரியட்டும் விட்டுவிடு!
பரிவோடு இதுவரை உரிமையாய்க் கையிணைக்காதவர்கள்!
கரிசல் மனம் மாறாதது யுகயுகமான நோயிது.
புரியாத நட்பூவால் மலராது தைரியப் பூ

00

வெட்கிடாது சரணடை தமிழை பட்டொளியில் மிளிர்வாய்
ஒட்டாத நலமற்ற மனம் நன்றியில்லாப் போக்கு அது.
நாணும்படியான நட்பு ஈனமே ! ஏனிப்படி!
கூனித் தடுமாறாது தனியாய் ஏணிப்படியேறு….!
நானிலம் நீள்பயண ராஐவீதி ஆழ்மன அமைதி அவசியம்
இனிய பற்றுக்கோடு நம்பிக்கை! அறிவு சாம்ராச்சியம் அவகதியேகாது.

00

கவிமணி வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 29-1-2020

67. Photo poem – மணம் இழக்கும் மனிதம்.

மணம் இழக்கும் மனிதம்.

பணத்தின் மினுமினுப்பின் திமிர்
பணம் இல்லையெனில் உதிர்வு.
குணத்தின் மினுமினுப்பு, ஆற்றாமைக்
கணத்தில் மொழியால் உதிர்வு.
மணம் இழப்பின் மனிதமிதுவே

பெற்றவர் பிள்ளைகளைப் பிரிக்கும்
கற்பிதமும் பொறாமை விரிப்பே.
அற்புதமான விரிப்பு முல்லைமலர்ச்
சொற்பதப் பந்தலின் சுகந்தம்.
நற்குணத் தேட்ட அகமாகட்டும்!

கற்பனைக்கும் அப்பால் உள்ள
நற்குண நசிவு பள்ளம்.
பற்றுடைக் கோடை இதம்
முற்றிய வெயிலில் தொலைத்து
வற்றுகிறது புனித மனிதம்.

8-9-2019

64. Photo poem. –

வெளிச்சம் சூழட்டும்!

குன்றிலிட்ட தீபமாகு! குணத்தில் தாழ்ந்திடாதே!
நன்றியுள்ள மனமே உயர வாழ்த்திடும்
கன்றிடாது மனதைக் கலகலப்பாக ஆழ்த்திடு!
வென்றிடலாம் உலகில் வெளிச்சம் சூழ்ந்திட!

18.1.2020

65.

66.

11. Haiku

(மூன்று வரிகள்..
இரண்டாவது வரி சற்று நீளமாக நிகழ்காலத்தில்.
மூன்றாவது வரி திருப்பமாக
பெயர்ச்சொல்லில்..
மூன்று வரிகளும் வரிப்பிளவுடன்..)

(தனிச் சொல் முதல் இரு வரிகளில் வரக் கூடாது)

ஹைக்கூவில் முதல் இரு அடிகளும் சேர்ந்து ஒரு கூறாகும்

(சரியான கைக்கூ எழுத உதவும் வரிகள் என்று இதைப் பதிகிறேன்.)

ஹைக்கூவில் ( நிலவில் ஒரு கைக்கூ குழுவில்… )
முரண்_அழகு

ஹைக்கூ கவிதைகளில் கையாளப்படும் உத்திகளில் ஒன்று முரண் ஆகும். இதனைக் கையாண்டு எழுதப்படும் ஹைக்கூக்கள் தனித்துவமான ரசனையைத் தருவதோடு இலகுவில் மறக்காமல் நெஞ்சில் நிலைப்பவையும் ஆகும்.

அது சரி… முரண் என்றால் என்ன?
அதை எப்படி ஹைக்கூக்களில் பயன்படுத்துவது என உதாரணங்களோடு பார்ப்போம்.

எதிரும் புதிருமாய் மாறுபடத் தொடுப்பது முரண் எனப்படும்.

இது

சொல் முரண்
பொருள் முரண்
சொற்பொருள் முரண்

என மூவகைப்படும்.

  1. சொல் முரண்
    ”””””””””””
    கருப்பு – வெள்ளை
    ஏற்றம் – இறக்கம்
    இன்பம்- துன்பம்

என எதிர்ச் சொற்கள் கவிதையில் இடம்பெறச் செய்துஎழுதப்படுவது சொல் முரணாகும்.

எ. கா.

ஏறும் வயது
இறங்கிச் செல்கிறது
வாழ்நாள்..!

இங்கு ஏறுதல் × இறங்குதல் எனும் சொற்கள் முரணாக அமைந்துள்ளது.

  1. பொருள் முரண்
    ””””””””””””’
    எதிரும் புதிருமான செயற்பாடுகளைக் கொண்ட கருத்துக்கள் பொதிந்தாக எழுதப்படுவது பொருள் முரண் எனப்படும்.

எ.கா.

முட்டை வாங்கி வந்தாள்
சித்திரப் பாடத்தில்
ஓவியா..!

இங்கு ஓவியா எனும் பெயரை வைத்துக்கொண்டு சித்திரம் வரையத் தெரியாமல் இருப்பது
என்பது எதிரும் புதிருமான பொருள் – அதாவது கருத்தாக அமைந்துள்ளது.

  1. சொற்பொருள் முரண்

கவிதையில் எதிர்ச்சொற்கள் பாவிக்கப் படுவதுடன் கருத்தும் எதிரும் புதிருமாக அமைந்திருக்கும்.

எ.கா.

அமைதிப் பேச்சுவார்த்தை
அடடா… முடிந்தது
அடிதடியில்

இங்கு அமைதி × அடிதடி எனும் எதிர்ச்சொற்கள் இடம்பெறுவதுடன் கருத்தும் நேர் எதிராய் இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய முரண் கவிதைகளைத் தொடுப்பது கவிஞர்களுக்கு இலகுவாக இருக்கும். நீங்களும் முயற்சித்துப் பார்க்கலாமே!

சத்தார் எம். அஸாத் – 26-4-2018

63. Photo poem – கோப சாம்ராச்சியம்

கோப சாம்ராச்சியம்

கோப சாம்ராச்சியம் உருப்பட விடாது
சாபவீடாக அகங்கார அனல் கனல
தீபமணைந்த அகமாக அன்பு உறவுகளையும்
பாவ அழுக்குச் சேற்றில் அழுத்தி மகிழும்

நறவற்ற விடம் தோய்த்த வார்தைத்தையிட்டு
உறவுச் சிறகொடித்து இன்பம் காணுதல்
புறமுதுகிடும் வாழ்வுப் போரின் பாதையோ!
புறஇ அக நெருக்கடி வாழ்நிலையோ!

பரிபூரண அடக்கமுடன் சாந்தம் தரிக்கும்
அரிதாரமற்ற குழப்பமற்ற முகப் பிரகாசம்
வினைபுரிகையில் விடுபடும் மமகாரம் (அகங்காரம்) இதுவே
தனை மீட்கும் நல்ல பரிகாரமும் இதுவே.

பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க் 30-11-2019

6. பேட்டி – நேர்முகம் – விழா

டென்மார்க் வாழ் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடாத்திய வெள்ளிவிழா கலை மாலையும் முத்தமிழ் அரங்கும் நிகழ்ச்சி கடந்த 22.09.2012 சனிக்கிழமையன்று டென்மார்க் கேர்னிங் நகரில் வெற்றிகரமாக நடந்தேறியது.

டென்மார்க் மண்ணில் நின்று 25 வருடங்கள் கலைத்துறைக்கு தொண்டாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு. வென்ஸ்ர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அனி மத்தீசன் …பரிசளித்தார்….

http://www.alaikal.com/news/?p=113106#more-113106

முதலாக 35 கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்.  அதில் நானும் ஒருவளாக…

கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு புகைப்படங்கள். http://www.alaikal.com/news/?p=113783#more-113783

வெள்ளிவிழாக் கலைமாலையிரவில் என்னால் மேடையில் வாசிக்கப்பட்ட கவிதை.

கம்பன் ஒரு இலக்கியப் பந்தல் போட்டதை எங்கோ வாசித்த நினைவு அது இப்படிப் போகிறது:-…

”…சோதிமலையொன்று தோன்றிற்றதிலொரு வீதியுண்டாச்சுதடி
   வீதி நடுவொரு மேடையிருந்ததடி, மேடையிலேறினேனடி
   மேடையங்கொரு….” 

என்று இப்படியே தொடர்கிறது.

அப்படியொரு இலக்கியப் பந்தல் ஒன்று நான் போட்டு, அதில் நின்று சிறு கவிதை ஒன்று தருகிறேன்.

”…டென்மார்க் நாடொன்று கண்டோமதிலொரு வாழ்க்கையுண்டாச்சுதடி!
   மொழியைப் படித்த வீதியிலொரு கூடம் தெரிந்ததடி!
   கூடத்தினுள்ளே கூடிப் படித்து மேடையிலேறினேனடி!
     ” பெட்டகோ” (pædagog) மேடையிலேறினேனடி
   வாழும் நாட்டில் இழந்த மேடையை  இங்கு பெற்றேனடி….”

இனி.

வெள்ளி விழா…ஓகோ வெள்ளிவிழா!

உள்ளிப் பூடாய் நாளும்
அள்ளித் தமிழை (தமிழரை) அணைப்போரும்,
தள்ளி – தனியே வாழ்வோரும்
பள்ளி கொண்டே தமிழோடு
புள்ளி சேர்த்து உயர்வோருமாக
கொள்ளை விதமான தமிழருக்கின்று
வெள்ளிவிழா ஓகோ! வெள்ளி விழா!

அறிவைத் தேடி ஓடினால்
குறைவா யெண்ணு முலகில்
முறையாய் நூல்கள் செய்தால்
நிறைவாய் ஆதரிக்கா உலகில்
நிறைவாய் மனம் சோர்ந்;தே
திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.
வேதாவின் வலையென்று கூகிளில்
தேடுங்கள்! கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம் என்று தேடுங்கள்.

சமுதாயப் பள்ளங்களை யாராலும்
முழுதாக நிரவ முடியாது.
மனித சரித்திரம் சாதனையுடையதானால்
வனிதமது ஆவணப் படுத்துதல்.
கணிதமான இவ் விழாவும்
ஆவணமாகட்டும் சாதனையில்.
வாரிசுகளிதை அறியட்டும்.
பூரிக்கட்டும் முன்னவரெம் நகர்வால்.

ஒழுங்குகள் மதில்களாக இருக்கட்டும்.
பழுதற்ற பண்பாடுகள் தழும்பி
மொழியோடு யுத்தமிடாது
மொழிச் சுளற்சியில் அரசாளட்டும்.
இன்னும் வளரும் தமிழ்.
இன்னும் புதுமைகள் காணும்.
பெற்றோர், உற்றோர் கைகொடுப்பில்
அற்புதமாய்த் தமிழ் முன்னேறும்.

கலைகளையேற்றுக் கருத்து வீசாஉலகில்
நிலையாலுயர்ந்தெமைக் கௌரவித்தற்கு
மலைபோல் மனது வேண்டும்.
அலைகள் வலைப்பணியது பாராட்டுடைத்து.
அலைகளின் சேவை மகத்தானது.
விலையற்றது, விமரிசனத்திற்கு அப்பாற்;பட்டது.
மாலையிடுகிறோம் மனதால் மகிழ்ந்து.
மூலை முடுக்கெல்லாம் அலைகள் புகுந்து வளம் படுத்தட்டும்.

வாழ்க! வளர்க!
அலைகளென்றால் கே.எஸ் துரை.
கே.எஸ்.துரையென்றால் அலைகள்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

25-9-2012.

20. பா மாலிகை (வாழ்த்துப்பா) – பத்மாஷனி-மாணிக்கரட்னம். 26.

பத்மாஷனி-மாணிக்கரட்னம். 26.

இனிய சகோதரி பத்மாஷனி!
இருபத்தாறு வருடங்கள்
இல்லறச் சோலையை
நல்லறமாக்கி நடையிட்டீர்!
மாணிக்கரட்னத்துடன்
மகிழ்ந்து வாழ்ந்து இரு
மாணிக்கங்கள் உலகுக்கீந்தீர்!
மாதொருபாகன் ஆசீர்வதிக்கட்டும்!

தமிழில் தரம் கொண்டீர்!
தரணியிலும் தரம் கொள்வீர்!

வரம் பெறுவீர் வல்ல இறையால்!
வளங்களுடன் வல்வமையாய்
வாழ்ந்திட இவ்வினிய
மணநாளில் எம் குடும்பத்து
மகிழ்ச்சி வாழ்த்துகள்! வாழ்க!
வாயார வாழ்த்துகிறோம் வாழ்க!

24-10-2010

10. எனது 4வது – 5வது நூல்கள். – 2020 கண்காட்சியில்

குலசிங்கம் வசீகரன்  7-1-2020 மேலே உள்ள இடுகை

In Veerakesary

http://aruvi.com/article/tam/2020/01/18/6768/?fbclid=IwAR1TjGQv3flwCSGFx2lMmv0rIgnyB6EJLgaL6QpXNPonG30vxV_wj6Du_ps

எங்கட புத்தகங்கள்
எங்கட யாழ்ப்பாணத்தில்!
வாங்கி வாசியுங்கள்!
தேங்கிடாது அள்ளுங்கள்!
மிக்க நன்றி வசீகரன்
12-1-2020