7. தொலைத்தவை எத்தனையோ! (முன்னைய 12 அங்கங்களும் இந்த ஏழும் – 19)

முன்னைய 12 அங்கங்களும்.

https://kovaikkavi.wordpress.com/category/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%af%8b/

நம் நாட்டை, அங்கு வாழும் சூழலைத் தொலைத்தோம்,

அது மட்டுமா இன்னு நமது வயது வாலிபத்தையும் தொலைத்து விட்டோம்.
இதை ஏன் சொல்ல வருகிறேன் என்றால் 2018ல் இலங்கை சென்ற போது டம்புல (றொக் ரெம்பிள்) கற்கோயிலுக்கு நடந்து போனோம்.

கற்பாறைப் பாதை உயர ஏற வேண்டும். நாமிருவரும் எனது தம்பியும் ஏறினோம். பாதி வழி வர எனது கணவர் கூறினார் இனி நான் வரவில்லை நீங்கள் போயிட்டு வாருங்கள் என்று. இந்த இடத்தில் அவர் ஓய்வெடுத்தார்

சரி என்று நாம் போனோம். பாதி வழியில் ஏறும் போது அங்கிருந்து சிகிரியாவைப் பார்க்க முடிந்தது. படத்தைக் காண்கிறீர்கள்.

நமது படங்கள் கொஞ்சம். நீங்கள் டம்புல றொக் ரெம்பிள் என்று கூகிளில் தேடுங்கள் ஏராளம் படங்கள் பார்தது மகிழ முடியும்.

இந்த அனுபவம் வந்ததும் எனக்கு நாம்இலங்கையில் கழுத்துறையில் இருந்த போது சிவனொளிபாத மலை சென்றது நினைவு வந்தது. நல்ல வேளை இளமையான போது அங்கு சென்றோம். சிங்கள நண்பர் ஒருவருடன் சென்றோம். இப்போதென்றால் ஏற முடியுமோ தெரியவில்லை.

இலங்கையின் நடுவில்இருக்கும் சிவனொளிபாத மலை சிங்களவர்களால் சிறிபாத என்று அழைக்கப் படுகிறது.
2243 மீட்டா உயரம் உடைய கூம்பு வடிவ மலை.

ஒவ்வொரு சமயத்தவரும் இது தத்தமது இறைவனின் காலடிச் சுவடு என்று நம்பி வணங்குகிறார்கள்.

1975ம் ஆண்டளவில் நாம் சிவனொளி பாத மலைக்கு ஏறினோம்
பாதை படிகளாக சீமெந்து பூசியது போல பிடிக்கக் கம்பிகள் உதவியாக இருந்தது.


ஒரு சிறிய அறை அளவு சதுர இடம் மட்டுமே உச்சியில் இருந்தது.

இன்று கூகிளில் பார்க்கும் போது மிகப் பெரிய இடமாக உருவாக்கியுள்ளனர்.
இன்று எம்மால் ஏற முடியுமோ தெரியவில்லை.
அன்றைய தருணத்திற்கு ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறோம்.

1. திருக்குறள் கவிதைகள்

தாய்மைச் சந்ததித் தாய்வேர் என்பது
தாய்மைப் பேற்றுத் தவம் தானே

உலகில் இறையாய் உயர் தெய்வம்
உலவும் தாயாம் உணர்வது கடனே

1-7-2018

(குடும்பினி – மனைவி)

வாழ்க்கைத் துணை வாழ்வை உயர்த்தி
தாழ்விலா மதிப்புக் கூட்டும் உத்தமி.
வருவாய்க்கு ஏற்ற வரவு செலவை
கருவாய் எண்ணுவாள் கண்ணியத் துணைவி.
குடும்ப உறவை, குழந்தையைக் காக்கும்
குடும்பினி என்பவள் குடை போன்றவள்.
நியாயமுடன் யாகமாய் நினைத்துத் தன்னை
தியாகம் செய்பவள் திருவுடை மனைவி

3-7-2018

உற்ற காலத்து உதவிக்கு
உகந்ததாய் எதுவும் ஈடாகாது.
தமக்கு உதவுவோர் தன்மையை
தகவின்றி மறப்பார் தக்காரல்லர்.
சிறுதுளி உதவியும் பெறுமதியுடைத்து
அறுதியாய் மறப்பது உய்வற்றது.
தானமான உதவி வானளவானது
ஏனமற்றது தெய்வத்திற் கொப்பானவர்
தீனமற்ற உதவியாளர் ஈனமற்றவர்.

24-7-2018

அமிர்தம் -குறள் 67- மக்கட்பேறு

பிள்ளைக்குத் தந்தை வள்ளலாய்த் தருவதை
எள்ளளவும் சிந்தாது கொள்வது கடனே
தந்தை என்று தந்தார் இறைவன்
சிந்தை குளிர முந்திடு மகனே!
தருவதை முழுதாய் பெருக்கிடு பண்பாய்
பெருமையாய்ப் பெற்றவர் பெருமிதம் கொள்ளவே!
உதிரப் பிறப்பை முதிர வைக்கும்
கதிரவனாய்ச்; சுடரும் சதிரம் கல்வியே
படித்தவர் சபையினில் படிப்பாலே உயர
வடித்தார் தந்தை நடிப்பற்ற நன்றியே

-10-7-2018

13. பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து – 13

 எழுத்து – 13

என்னுள் குமிழியிடும் திமிர் எழுத்து.
தென்றலும் வெட்கத்தோடு தாண்டி நடந்தது.
நெஞ்சத் தண்டவாளத்தில் எழுத்து ரயில்
நெடுந்துயிலின்றுp கவனமாக ஓடுகிறது
மூங்கிலில் மறைந்த புல்லாங்குழலாக
மேகத்துள் முடிந்த மழையாகத்
தாகமாக ஓடுகிறது என்னுள்ளே எழுத்து
மோகமாக இதைக் கவிதை ஆக்குகிறேன்.

தமிழில் முழமையான பழைய இலக்கண
நூல் தொல்காப்பியமே! முழவதும் படித்திட
நிழலும் எனக்குத் தடை இடாது
விழவிடாத கருவியே எழுத்தும் எழுத்தாணியும்.
எழுத்து, சொல், பொருளாம் மூவிலக்கண
முழு இலக்கணமும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
எழத்து இலக்கணம் இரு வகையான
முதல் எழத்து சார்பு எழுத்தாம்.

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லாம்
நல்ல பாரதியாரின் ஒரு கூற்று.
எ – உச்சரிப்பைக் காதால் கேட்கிறோம்
எ யை கண்ணால் விழிக்க எழுதுகிறோம்.
உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர்மெய் எழுத்தாகி
வல்லினம், மெல்லினம் இடையினமும் ஆகும்
முதல், கடை, ஈற்று கூட்டெழுத்தாகும்
சொல்வளம் எழுதினால் பெரும் கட்டுரையாகும்.

25-9-2019

https://www.vallamai.com/?p=94676

12. பாமாலிகை (எழுத்து – தொடர்) – எழுத்து -12

எழுத்து -12

குகையுள் தவழ்ந்து தேடுதல் போலவும்
தொகையான கூழாங்கற்கள் பதமாக நதியால்
சிகை தழுவுதலாகவும் அறிவு பதமாகிறது.
பகையின்றி எழுத்து அறிவு புடமாகிறது(தூய்மை)
கீழடி எழுத்து தமிழ் எழுத்தா!
கேளடி என்று பல கேள்விகள்
தாழடியாக இதற்கு வாய்ப்பு இல்லை
மேலடி தான் இதன் முடிவாகும்.

கிறிஸ்துவிற்கு முன் ஆறாம் நூற்றாண்டில்
கிரமமான எழுத்தறிவு பெற்றனராம் மக்கள்
கீழடி ஆய்வு இதை நிரூபிக்கிறதாம்.
கிரியாஊக்கி தானே இது தமிழனுக்கு!
விரிந்த பிரபஞ்சத்தின் ஆதி எழுத்து
விகசிக்கும் தமிழ் என்பது மகுடமேற்றும்
வியந்திடும் பண்பேற்றும் நிலை தானே!
விலாசமிகு தமிழ் விசுவரூபமாய் உயரட்டும்!

பாலும் பலாப்பழமும் பாகும் தேனும்
மேலும் கலந்த நீதியெழுத்துகளை ஒளவை
உலகிற்கு, சிறுவருக்கும் அள்ளித் தெளித்த
புலவர் பெண்ணான பிறவி அறிவாளர்.
மெய்யுலகைக் கட்டி எழுப்பிய அறிவம்மை
மதிப்புடைய அமைதிப் பெயர் ஒளவை
மனப்பாடம் பண்ணிய நீதியெழுத்தின் தலைவி
தனம் அவர் தடுமாறா எழுத்துகள்.

24-9-2019

19. பா மாலிகை (வாழ்த்துப்பா) –

இன்னலற்ற அன்பு.
என்னைத் தொல்லை செய்யாத
இன்னலற்ற உன் அன்பு
கன்னல் தேன் கலந்தது.
மின்னல் வாழ்வில் உகந்தது.



நதியின் சந்தங்களாக தினம்
குதி போடும் இலயம்
இதிகாசத்திலிடம் தேட நல்
பதிகமானதிந்த வாழ்வு!


மந்தைக் கூட்ட உலகில்
சிந்தை தெளிந்த உன்னை
சொந்தமாக்கிய விதி ஒரு
விந்தை இவ்வலகச் சந்தையில்!


நிறைந்த ஆரோக்கியம், மகிழ்வு
குறைவின்றிப் பெருகி வளர்க
இறையருள் நிறைந்து வாழ்க!
மறைபொருளானது இங்கு நன்றி.

4-12–2012

வேறு:-

காலக்கடிகாரமாக என்னைத் தினம்
ஆலத்தி செய்யும் உன்னன்பு,
ஆலவட்டமிடும் உன்னன்பு,
ஏலக்காயாக என்னுள் மணக்கட்டும்.

நீலம் பூக்கும் இதயமாக மட்டும்
கோலம் காட்டாது, முழுக்
காலமும் என்னோடு வாழு!
பாலமாகட்டும் காதல் நதியிலுன் நேசம்!

12-4-2011

5. பேட்டி – நேர்முகம் – விழா –

பூமதீன் கலந்தர்புதுமைத்தமிழ்த்தென்றல்

February 16, 2016 · 

பெயர்:- வேதா. இலங்காதிலகம்.

புனைப்பெயர்கள்:- கோவைக்கவி,பா வானதி,கோவைக்கோதை!

விலாசம்:- யாழ்ப்பாணம். கோப்பாய்.

தற்காலிக முகவரி:- ஓகுஸ், டென்மார்க்.

தொழில்:- கற்பித்தல்

கல்வி:–
இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர் வகுப்பு 12 (ஏ.எல்) – டென்மார்க்கில் டெனிஷ்ல் 3 வருடப்படிப்பு பாலர் பாடசாலை ஆசிரியர் (பெட்டகோ)

பட்டங்கள்:
டெனிஷ் பெட்டகோ, தமிழ் கவிதையால், கவியூற்று, ( அன்று) இன்று மேலும், கீழே படத்தில் தருகிறேன்.

விருதுகள்: ஆறுமுக நாவலர் விருது.

வேதா. இலங்காதிலகம், அம்மா அவர்கள்!

யாழ்ப்பாணம். கோப்பாயில் 2 வருடங்கள் ஆரம்பபாடசாலையிலும், கொரண (Horana) நகரத்தில் ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் பிரதி ஆசிரியராகவும் பணியாற்றி, பின்னர் டென்மார்க் நாட்டிலும் ஆசிரியயையாகப்பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி, இலண்டன் தமிழ் வானொலி டென்மார்க் செய்திகள், போன்ற ஊடகங்களில் கவிதைகள், செய்திகள் வாசிப்பாளராகவும்,
திகழ்ந்தவர்.

மேலும், டென்மார்க்கில் காகம், கற்பகம் எனும் சஞ்சிகைகளில், யேர்மனிய பூவரசு மண், தமிழ் நாதம், கலைவிளக்கும் மலேசிய செம்பருத்தி, இலண்டன் சுடரொளி, பிரான்ஸ் வெற்றிமணி, இந்திய, நாளை நமதே, இனிய நந்தவனம், ஏழைதாசன். நாளை விடியும் போன்ற சஞ்சிகைகளிலும் தனது எழுத்தாற்றலால் முத்திரை பதித்த பெண் கவிதாயினியும் எழுத்தாளருமாவார்.

மேலும், டென்மார்க் வானவில்,அலைகள் டென்மார்க், டென்மார்க் ரமிழ், நியூஸ்.டி.கே, பதிவுகள்.கொம், முத்துக்கமலம், வார்ப்பு, தமிழ் விசை, தமிழ்ஆத்தேர்ஸ்.கொம், தமிழ்தோட்டம், நெய்தல், எழுத்து.கொம், அப்பால் தமிழ், ஊடறு, வல்லமை போன்ற இணையத்தளங்களிலும் எழுதிவருகின்றார்

கடந்த 1976 லிருந்து இலங்கை வானொலியில் பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரி, சேவை நிகழ்ச்சிக்கு கவிதைகளை எழுதியதின்மூலம் இலக்கியத்துறையில் காலடி வைத்து இன்றுவரை பயணித்துக்கொண்டிருப்பவர்!

இவர் சிறந்த நூலாசிரியையுமாவார், இவரது படைப்புகளில், 2002ல் வேதாவின் கவிதைகள் தொகுப்பு, 2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு, குழந்தைகள் இளையோர் சிறக்க, 2007ல் உணர்வுப் பூக்கள் தொகுப்பு, {இதில் இவரது 69 கவிதைகளும், அவரது கணவரின் 43 கவிதைகளும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் 2018ல் பெற்றோரியலில் சிற்றலைகள், குறள் தாழிசை என இரு சிறுவர், இளையோர் இலக்கிய நூல்களாக வெளியிட்டுள்ளார்.(இவைகளை “நூலகம் டொற் ஓர்க் கொம். இணையத்தில் பார்க்கலாம்)

மேலும் 2010 முதல், “வேதாவின் வலை” (http:// kovaikkavi.wordpress. com) கோவைக் கோதை.வேட்பிரஸ்.கொம் (https://kovaikkothai.wordpress.com) கோவைக்கோதை.புளொஸ்பொட்.கொம் (kovaikkothai.blogspot.com) என்று 3 இணையத் தளங்கள் சொந்தமாக நடத்தி வருகிறார். கடந்த 2015 வைகாசி 2ம் திகதி டென்மார்க்கில் ஓகுஸ்ல் நகரத்து மக்களால் சிறந்த அங்கீகாரமாக ஒரு பாராட்டுவிழாவும் இவருக்கு நடத்தப்பட்டு ” ஆறுமுக நாவலர் விருது” வழங்கப்பட்டது சிற‌ப்புக் குறிப்பாகும்!

இத்தனை புகழ் மாலைகளைச்சும‌ந்து கொண்டிருக்கும், வேதா. இலங்காதிலகம்,
அம்மாவுக்கு புதுமைத்தமிழ்த்தென்றல் தலை வணங்கி வாழ்த்துகின்றது,
நன்றி.