20. பா மாலிகை ( கதம்பம்)சரவிளக்கு (512)

Billede vetha-langa-thilip,lavi 027.jpg

(Pattiya  – Thailand)

*

சரவிளக்கு

*

சேராத சொற்கள்
சீரற்ற சொற்கள்
நேரற்ற கற்கள்
நிரப்பிய சுவரில்
உரசி முட்டுதல்
அரமரியும் துன்பம்

அரளும் இந்த
அரப்பு உரசுவதிலும்
பரந்த இயற்கையோடு
கரம் கோர்க்கும்
வரமெனும் சுற்றுலா
சரவிளக்காகும் மனதிற்கு.

சுரம்பாடும் நினைவுகள்
நிரவிடும் உறவோடு
பரவசம் பரம்பொருளாகும்.
பரணி பாடும்
தரமான பயண
வரலாற்று அனுபவங்கள்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
28-9-2016

download

1. தொலைத்தவை எத்தனையோ.13

 

untitled                                      1 3.

தொலைத்தவை எத்தனையோ – 13.

என்ற தலைப்பில் 12 அங்கங்கள் எனது இணையத்தளமான வேதாவின் வலையில் எழுதியுள்ளேன். ( https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B/)
இரண்டாவது வலையாக இங்கு வேதாவின் வலை.2 ல் 13வது அங்கமாக இதைத் தொடருகிறேன்.
இலங்கையில் கலவர பூமியான கழுத்துறை மாவட்டத்தில் சிங்களம் பிரதான மொழியான இடத்தில் நான் திருமணமாகி வாழ்வைத் தொடர்ந்தேன்.
என்ன கதை சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்ப்பா!…இல்லை…..இல்லை….ஐந்தூரியம் மலர்கள் நினைவு வந்தது.
எனது தோட்டக்கலை அனுபவங்களை எழுதலாம் என்ற சிந்தனை என்னைத் தூண்டியது.
அழகிய தேயிலைத் தோட்ட வாழ்வு 750 ஏக்கர் நிலப்பரப்பில் நடுவிலொரு சிறு வீடு இரு படுக்கையறைகள், இருக்கையறை, சமையலறை சுற்றிவர தோட்டம். இயற்கை மழையால் பூக்கன்றுகளிற்கு நீர் விடத் தேவையற்ற சுவாத்தியம்.
வீட்டிற்குத் தேவையான சமையல் காய்கறிகள் பணம் கொடுத்து வாங்க வேண்டிய தேவை இல்லை.

ponnanganiht2438

download (2)download (3)

vallatai

பொன்னாங்காணி, பசளி கீரை, சிறுகீரை, வல்லாரை மழை பெய்தால் தானாகவே வளரும்.

ht4101
அகத்தி மரக் கீரையும், அகத்திப் பூவை தனியாகவும் சமைக்கலாம்.

முருங்கை-இலை-thamil.co_.uk_download (4)

இதே போல முருங்கை மரக் கீரை, முருங்கைக் காய் என்றும் தானாக வளர்ந்த மரங்கள்.

curryleavesdownload (5)

download (6)download (7)

download (8)

கறிவேப்பிலை மரமாகவும் இருந்தது. தோட்டமாகச் செய்து கத்தரிக்காய், போஞ்சி, பச்சை மிளகாய், வட்டுக் கத்தரிக்காய் என்பன கிடைத்தன.

elephant-foot-yam-250x250download
சட்டிக்கரணைக் கிழங்கு கிடைத்தது. இதன் கீரையையும் சமைக்கலாம் குருத்தான இலையாக.

imagesdownload (1)
இராசவள்ளிக் கிழங்கும் உருவாக்கினோம்.

Tapioca
மரவள்ளிக் கிழங்கு வேண்டிய அளவு வளர்ந்தது. மரவள்ளிக் கீரையும் சமையலுக்குப் பாவிப்போம். மரவள்ளியையும் பல மாதிரிச் சமைத்து உணவாக்க முடியும்.

ஈரப்பலா க் காய் – மரம் ஒன்று பெரிதாக இருந்தது . அதன் காலத்தில்
இந்தக் காய்களை கறி சமைக்கப் பாவிப்போம். ஒல்லாந்தர் கொண்டு வந்து ஊன்றிய மரமாம் -இதன் படம் கீழே உள்ளது

இத போல பலா மரமும் இருந்தது; பலாக்காய் கறி செய்ய – பழம்    ண்ணப் பாவிப்போம். –இதன் படம் கீழே உள்ளது.

பசியால் வாடும் ஏழை களவாணிப் பயல்கள், குடித்து விட்டுக் கூத்தாடுவோரும் , இரவில் இதை களவாகவும் பிடுங்கிப் போவார்கள்.

(இத்தனையும் பணம் கொடுத்து வாங்கி உண்ணும் காலம் இது.
இலவசமாக இவைகளை அன்று பெற்ற காலம்.
நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள்.
இப்படி ஒரு வாழ்வு அன்று ஆண்டவனுக்கு நன்றி.)

 

 

 

 

 

 

 

பலாமரம்
ஈரப்பலாக்காய்

சரி மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்

வேதா. இங்காமதிலகம் -டென்மார்க். புரட்டாதி 2017

1. சோழா(7)

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BE/             –  இந்த இணைப்பில் சோழா- 6 கவிதைகள் வேதாவின் வலை- யில் உள்ளது.

எங்கள் இரண்டாவது பேரன் சோழாவிள் 3வது ஐனன தினம் .

*

chola-3spider

*

பச்சை மரகதமே சோழா!

எங்கள் செல்லப் பேரன் தங்கக் கட்டி இராசன்
இங்கு மூன்று வயதாகிறான் பொங்கும் மங்கள வாழ்த்துகள்!
திலீபன் சாந்தியின் அரும் திலகம் தினகரன் ‘ சோழன் ‘
உலவி நிறைகிறார் இன்று கலகலப்பான மூன்றாம் ஆண்டு.
சுட்டியாக மும்மொழி பேசுகிறார். கெட்டிக்காரச் செல்வன் எங்கள்
கட்டி வராகன் சோழாவே! கொட்டுமமுதத் தேன் துளியே!
அச்சுப் பிச்சு மழலையால் கிச்சு கிச்சு மூட்டுகிறார்
மெச்சும் கதைகள் கூறுவார் உச்ச ” ஸ்பைடர் மான் ”  ரசிகர்.
வாகனப் பிரியர், ஓவியர் வாக்குநயமுடைய அண்ணாவும் அப்படியே!
வாரப்பாடாய் வெற்றியோடு விளையாடுவார். வாழ்க நீடு! வளர்க!

அப்பப்பா-தாத்தி- பிரித்தானியா லா அத்தை-மாமா 17-9-2017

bordi-di-compleanno-5988061

 
 

        சோழா ஆடும் குதிரையில் 

சோழா ஆடும் குதிரையில்

மயக்கும் மாதவன்கள்
00

(ஆரணன்-பிரமன் – சிவன் – திருமால்_)
00
பேரர்கள் பின்னும் வாழ்வு
ஆரணம் (வேதம்) ஓதும் வாழ்வு.
ஆரணியமற்ற ஆரத்தி வாழ்வு.
ஆரணனான குமிண் சிரிப்பால்
00
கன்னக் கதுப்பு மின்ன
கருத்துக் கவரும் சின்னக்
கண்ணன்கள் எங்கள் தங்கங்கள்.
என்ன பொருளும் இணையாகுமோ!
00
இதழ்கள் சொல்கின்ற கவிதை
இதயம் கவரும் பாவிதை
இதுதானே மயக்கும் இன்பம்
இணைவதும் அறிவின் இனிமை.
00
வேதா. இலங்காதிலகம்..டென்மார்க் 19-2-2022

1. பாமாலிகை (தாய்நிலம்.36)

an

*

இன இருப்பின் உறுதிக்காய்….

*

தங்கத்தாயின் அங்கம் நோக
சிங்கமாய் ஏந்திய உயிர்
எங்கள் மண்ணுக்காய் போராடி
அங்கு கல்லறையில் துயில்கிறது. (தங்க…)

இன இருப்பின் உறுதிக்காய்
மன உறுதியில் செயல் வீரராய்
கனமான களப்போரில் உடல்
இரணமாகி வீழ்ந்த வீரரிவர். (தங்க…)

கந்தகத்துள் நாள் முழுதும்
வெந்து வாழ்ந்த சோதிகள்.
பந்த பாசம் விலக்கி
அந்தம் காணப் போரிட்டவர். (தங்க…)

சுவாசத்தை மண்ணிற்கு ஈந்தவரின்
திவசமான கனத்த வாரம்.
பூவால் தூவி அவரை இன்றும்
மனதால் நினைக்கும் வாரம். (தங்க…)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-11-2009

                                                                         0000

2. பா மாலிகை (வாழ்த்துப்பா.50) மண் 150து இதழ் வாழ்த்து.

book vaalthu

மண் 150து இதழ் வாழ்த்து.

யெர்மன் நாட்டிலிருந்து
யெகமெங்கும் உலவும்
யெயமுடையது ”மண்”.
நாற்றிட்ட சஞ்சிகை
நேற்றுப் போலவானாலும்
நூற்றைம்பதுக்கு வளர்ந்தது.

கண் படாது
”மண்” சேவை
மண்ணிலே வளரட்டும்.
வளரட்டும் பன்னூறு
இளமை இதழ்கள்!
தளராது உயரட்டும்!

சேவை நலிவுற்றோருக்கு
சேவை தாயகத்திற்கு
தேவையிது வாழ்க!
தாய் மொழி வளர
சேய்களை ஊக்குவிக்க
பாய் விரித்த களம்.

விழிப்புணர்வு உனது
மொழி குன்றாமை
அழியாது வளர்க!
வளர்க புகழோடு!
வாழ்க பல்லாண்டு!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-3-2012.

 

 

 

1. சிறு கட்டுரைகள் – உறவின் மதிப்பென்ன!

 

uravu

*

 

உறவின் மதிப்பென்ன!

*

அன்றைய காலத்தில் கூட்டுக் குடும்ப வாழ்வில் குடும்பங்கள் மகிழ்ந்தன. அதன் மகிமையை அறிந்த பல ஐரோப்பியர்கள் இன்று பெற்றோருடன் அல்லது மாமா மாமியுடன் சேர்ந்து வாழ்வதை விரும்புகின்றனர்.
டென்மார்க்கில் நான் கண்ட உண்மை. இது பழையவர் நிலை.
திருமணமாகிய தம்பதிகளிற்குள் உள்ள பிரச்சனைகளில் தமிழர்களுள் மிகவும் சுயநலம் நிறைந்து காணப்படுகிறது.
மனைவி தனது சகோதரர்கள் பெற்றோருடன் நன்கு உறவாடும் போது கணவன் தனது சகோதரங்களுடன், பெற்றோருடன் உறவாட கணவனுக்கு அனுமதி மறுக்கிறாள். முறைத்துக் கொண்டு முரண்படுகிறாள். தானும் உறவாடுவதில்லை.
இது பல குடும்பங்களில் கணவன் மனைவி உறவிற்குள் முரண்பாடுகள் உருவாக்குகிறது.
எந்த மாமியாரைச் சந்தித்தாலும் அவள் பெரிய மோசம். எங்களுடன் மகனைச் சேர விடுகிறாளில்லை என்று வேதனைப் படுகிறார்கள்.
இந்தத் தம்பதிகளின் வாரிசுகள் எப்படி உலகோடு ஒத்து வாழ்வார்கள். உறவுகளைப் பிரித்து சேராத வாழ்வு முறையைத் தமது வாரிசுகளிற்கும் காட்டிக் கொடுக்கும் கொடுமையை என்ன சொல்வது.
எங்கே உலகு போகிறது?
எங்கே உறவுபோகிறது?
வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 28-6-2017
*
lines-c

5 பாமாலிகை (இயற்கை) நிலவு சுமந்த வானம் (83)

நிலவு சுமந்த வானம்

*

நிலவு சுமந்த வானம்
இலவு காத்த கிளியாய்
நிலவை உலாவ விட்டது
கலவியை நழுவ விட்டது.
*
உன்னைச் சுமப்பது வானமானால்
என்ன மந்திரம் செய்து
என்னோடு நீயெப்போதும் வருகிறாய்!
சின்னச் சிங்காரக் கள்ளியடி!
*
 
நிலவொளியால் நீலக் கருவானம்
நட்சத்திரப் பூக்களால் மின்னும்
அழகு மாயம் காதலரை
கவிஞரை கள் வெறியேற்றிடும்.
*
 
சிவனும் நிலவைப் பிறையாய்
சுமக்கிறார் செய்த களவால்
தேய் பிறைச் சாபம்
தேடிய நிலவே பாவம்.
*
 
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 20-4-2017
*
 
 
cloudbar550
 
 

19. பா மாலிகை ( கதம்பம்) கனவு மெய்ப்பட வேண்டும். (511)

 

18950978_10211695077029634_8633917450698689604_n

*

கனவு மெய்ப்பட வேண்டும்.

*

மனதில் தைரியம் வேண்டும்
கனமான நோக்கம் உருவாக்கி
கருத்தாய் நிறைவேற்ற வேண்டும்.
சனமும் ஆதரிக்க வேண்டும்.
சகலதும் நன்கு நிறைவேறும்
கனவு மெய்ப்பட வேண்டும்.
கனவானாக நிமிர்ந்திட வேண்டும்.
கனக மாரியும் பொழிய வேண்டும்.
*
நிகரில்லாத் தமிழ் என்னுள்
நிறைந்து வழியும் கனவு
நானிலம் போற்றுமொரு கனவு
நனவில் நிறைவுற வேண்டும்.
நிறையன்பு, அறிவு, ஒற்றுமையுயர்ந்து
பிறருக்கும் விதைக்க வேண்டும்.
பெண்மை உயர வேண்டும்.
பகைமை காட்டிற்கேகுதல் வேண்டும்.
*
காட்டு வளம் அழிக்காது
நாட்டிற்கு மழை பொழிய
காட்டிட வேண்டும் வழியை.
வறட்சியழிந்து தாகம் தீர்ந்து
விவசாயம் செழிக்க வேண்டும்.
இளையோரை நன்குருவாக்கி உலகம்
இன்ப வீடாயமைக்க வேண்டும்.
இன்பத் தமிழுமுயர வேண்டும்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-6-2017
*
under-1jpg

7. சான்றிதழ்கள் கவிதைகள்.(17இசைக்கிறேன் உனை)

 

amutha

 

இசைக்கிறேன் உனை இனியவளே என்றும்

*

அசைக்கிறேன் அருமை வர்ணங்களின் அலங்காரம்.
திசையெங்குமுன் புகழ் திவ்விய இராகமாகட்டும்
நசையுடன் நாதத்தில் சுருதி சுத்தமாய்
இசைக்கோலமே தெளிக்கிறேன் இதய சுத்தியாய்.
*
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 11-6-2017
*
divider

6. சான்றிதழ்கள் கவிதைகள். (16 பு(பொ)ன்னகை.)

 

13227558_1020962241328581_3090090341245939285_o

*

பு(பொ)ன்னகை.

*

புன்னகை நல்லிதயத்தால் அழகாகத் தவழும்.
புன்னகை பல முறை சிந்தினாலும்
மென்னகையாய் ஆடம்பரமற்று இதழ் விரிக்கும்.
உன்னகை, என்னகை எல்லோர் புன்னகையும்
நன்னகை, இன்பநகை உலகைக் கவர்ந்திடும்.
தன்னிலை உயர்த்தும் சுயமதிப்பு பெருக்கும்.
*
தன்னகை அறிவால் ஞான நகையானால்
சின்ன நகையானாலும் அவைக்கு இணையாக
என்னகை உலகில் ஈடாகும் சொல்லுங்கள்!
பொன்னகையால் அழியும் உறவும் உலகும்
என்னமாய் பதுக்கி குற்றவாளி ஆகிறார்!
புன்னகை போதும் பொன்னகை வேண்டாம்!
*
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-5-2016
*
under-3pg