31. வெற்றி

கப்பல்

ஒரு பெட்டியில் 3 விதமாக ஆக்கம் செய்யலாம் ( திறீ இன் வண்) creater three in one அத்துடன் ஒரு துவாய் இலவசம். வெற்றி லீகோவில் செய்த முதல் கப்பல் .(செய்முறை புத்தகத்தில் உள்ளது பார்த்துச் செய்வார்.)

2. கப்ரன் வீடு..

3. captan island—கப்ரன் தீவு

46. பா மாலிகை ( காதல்)113.காதல்……(தேனாறு)

காதல்…...(தேனாறு)

நாணல் கரையோரம் சென்றதால்
கோணல் புற்களும் தடையானது
நாணம் பொங்க நின்றிருந்தாயுன்
பாணம் விடும்: கண்களினால்
வாணம்(ப்) பூமழையானது மனதிலே
00

காலம் நேரம் சரியானதால்
கோலம் காதல் வானவில்லாக
பாலம் இட்டது நேசத்தோடு.
சாலம் இடாத காதல்
கானல் நீராக வேண்டாமே.
00

நாணல் போல வளைந்து
நாணம் குழைத்து வாழ்வைக்
கோணல் இன்றி அமைத்தால்
காலம் வாழ்வின் சூகோலத்தைக்
கானலின்றி அழகுச் சாரலாக்கும்.
00

சீலமான வாழ்வு செவ்வானமாய்
நீலமாய் வண்ணக் சூகோலமாகட்டும்
மூலம் அன்பொன்றே ஆகட்டும்!
000


19-6-2018

4. வினாவாரியாக.

கவின் தமிழைத்தான்.- மீனையல்ல..

வினாவாரியாக -4
00

கவின் தமிழைத்தான்.- மீனையல்ல..
00

(மலரோன் – பிரம்மா. சலநிதி – கடல்)
00

மலர்கள் பேசும் மொழியுனக்குப் புரியுமா
மலரோன், திருமகளுக்கும் புரியாத மொழியன்றோ.
காற்றின்மொழிக் காவியங்கள் எத்தனை சொல்வாயா
நூற்றில் பலவுண்டு நூலகத்தில் அடுக்கலாமா
அலைகள் உருளாவிடிலந்த நீரெங்கு போகும்
ஆழங்காண அதுவுருண்டு முத்துக் குளிக்குமோ
பனி கரைந்து தான் பரந்த சலநிதி ஆனதோ
இனி புகுந்தகமென்று ஆவியாகி மேலெழும்புமோ
காடழித்து மழையில்லையானால் புவனம் பாலைவனமே
காணிக்கையாய் யார் தருவாருயிரிற்குப் பிராணவாயு
இயற்கையுயிர்த்து மலர்களை அன்பளித்தால் மனிதன்
இரக்கமின்றி ஏன் மரங்களைத் தறிக்கிறான்.
தயக்கமென்ன மனிதன் சுயநலவாதி தான்.
நீரிலும் மீனை விட்டு வைக்கிறானா மனிதன்.
தாவரபட்சணி வேதா. இலங்காதிலகம் கவிதை வலையில்
பாக்களை, கவின் தமிழைத்தான் பிடிப்பாள் மீனையல்ல.
00

12-6-2021

3. வினாவாரியாக.

சொற்கள்.

வினாவாரியாக .- மூன்றாவது…

சொற்கள்.

ஒன்றான எழுத்துகள் தான் மாற்றிக்
கோலமிடும் பிரம்ம வித்தகன் யார்!
நன்றான அலங்கரிப்பில் தமிழைப்
புதுப் பெண்ணாக்கும் ஆளுமை எழுத்தாளன்.
ஆளுமையோடு கிறங்கவைக்கும் மாய உருவெது!
மூளுதலாகி ஈர்த்து மீளவெழுதவைக்கும் கவிதையது.
கூட்டில் அடைக்க முடியாதது எது!
காட்டிலும் மேட்டிலும் அவிழும் சொற்களதுவே!
வில்லாக ஏழு வண்ணங்கனோடு விதைப்பதெது!
நல்லழகூட்டி நலங்கிட்டு வளைக்கும் சொற்களதுவே.
நீளம் மட்டுமறிந்து பரத்தும் அலைகள்
ஆழமறியாது அமுங்கிப் போகுமோ
ஏலமிட எவரும் வரார் அமுங்கிடாது.
ஆடி ஆடி முடிந்திடாது.

கவியருவி வேதா. இலங்காதிலகம் (இலங்கைத் தமிழ்)
டென்மார்க். 10-6-2021

வினாவாரியாக

(வினா வாரியாக-1)

மாண்புடை வாழ்வு

நாணும் வகையின்றி வாழ்தலெது!
ஆணும் பெண்ணுமான இல்லறமது!
தூணிலொன்று சாய்ந்திடினும் கவிழ்தலாகுமா
கோணாத வாழ்விற்கு மரியாதையவசியம்!
வீணில் விரக்தியுறுவது அவசியமோ!
ஆணோ பெண்ணோ நிமிர்ந்திடவேண்டும்
சிரிப்பினூற்று வரண்டால் நிகழ்வெது
மரித்திடும் அனைத்தும் எனலாமா
00
சிந்தும் விழிநீரைச் சிக்கனமாக்கினால்
சின்னகை சிந்தத் தடையேது!
இல்லத்து மின்சாரம் ஊக்கமாகினால்
இல்லம் ஒளி சிந்தாதோ!
மூதேவியை வெளி யனுப்பி
சீதேவியை அழைக்கத் தயக்கமேன்!
முரட்டு முகாந்தரங்களை நெகிழ்த்தினால்
திரட்டும் அன்பு வளமாகாதோ!
00

வரட்டு நிலத்திலெது துளிர்க்கும்!
புரட்டுவதெதுவும் நம்மோடு வராது.
ஆண்டாள் உருவிலென்ன குறை
தீண்டாமையென்று எதுவும் இல்லை!
நீண்ட வாழ்வுச் சிறகொடுக்கலேன்!
மாண்புடை வாழ்வு அனுபவிக்கவே!
பெண்மை உயர்வென்று பிரகாசித்து
கண்மை கரையாது மலர்ந்திடத் தடையேது
00

10-3-2021

வினாவாரியாக -2 கடலரசாங்கம் ஏன்?

வினாவாரியாக – 2

கடலரசாங்கம் ஏன்?

கருவோடு திருவான பெருமை எது
தருவினை உருவாக்கும் தாய்மையது
இருவரும் ஒருங்காகத் தருவதெது
அருகிடுமமுதமாம் பெற்றவர் பாசமது
அன்பின் சுவடுகளமிலமாவது எப்போது
அன்பு மோசமாகக் காயமாகும் போது
நில்லாது பாயும் நீரூற்றெதுவாம்
அல்லாடாது தானாயிணையும் நதியாம்
சில்லெனப் பல நதிகள் கடலோடிணைவதாலோ
வல்லமை நீர்க் கலப்பால் கடலரசாங்கம்.

1-6-2021