43. குறுகிய வரிகள் 148,149,150- நீயும் வருகிறாயா?, அற்புதம், துன்பத்திலும் ஓர் ஆனந்தம்.

148.

நீயும் வருகிறாயா?,

149.

அற்புதம்

150.

துன்பத்திலும் ஓர் ஆனந்தம்

42. குறுகிய வரிகள் 145,146,147. விழித்துப் பாருங்கள், அட சிரிக்கிறாயா!,பாதாளம் வரை

செம்பருத்தி கண்கள் சொல்லும் கவிதைகள்.
ஆண்டு அட்டைப் படத்தில் பாருங்கள்.

145.

விழித்துப் பாருங்கள்.

146.

அட சிரிக்கிறாயா!

147.

பாதாளம் வரை

41. குறுகிய வரிகள் 140,141,142,143,144 வாழ்தல்,மனிதர் மறதி,மௌனப் பாறாங்கல்,வலம்புரிகள் கவிதைகள்,முயன்று முன்னேறுங்கள்.

140.

வாழ்தல்

141.

மனிதர் மறதி

142.

மௌனப் பாறாங்கல்

143.

வலம்புரிகள் கவிதைகள்.

144.

முயன்று முன்னேறுங்கள்.

தகுதியற்ற விதமாக
நான் யாருடனும் நடப்பதில்லை.
முகநூலில் ஒருவருடைய பெயரைக்
கெடுப்பதற்கும் நான் விரும்புவதில்லை.
எல்லோருக்கும் திறமை உண்டு.
அவரவர் முயற்சித்து முன்னேறலாம்
அவரவர் உரிமை அது.

25-2-2012

40. குறுகிய வரிகள் 136,137,138,139 ஆசை மீசை, அன்னை, மாற்றம். சுயஉருவம்

136.

ஆசை மீசை

மீசையாய் வளரும்
ஆசை விடாது.
ஆட்டம் தொடங்கி
மாட்டுதலின் முன்
தாட்டிகமாய் (வலிமையாய்) யோசி.
ஆட்படுதல் கொடுமையானது.

8-6-2020.

137.

அன்னை

அம்மா

குளிருதம்மா! குளிப்பாட்டி முடி!
குகன் காத்திருக்கிறான், சாப்பிட்டதும்
குதித்தாட மறுபடி போகணும்.!
உடற் சூடு தணிக்க
உருகும் அம்மா தண்ணீர்
ஊற்றுகிறாள் வெகு அக்கறையாய்…

138.

மாற்றம்.

139.

சுய உருவம்

39. குறுகிய வரிகள் 133,134,135 நிலவோடு – கூடு கட்டி – கேள்வி முறை – வானச்சுவர்.

133.

நிலவோடு நர்த்தனமிடும்

நிலவோடு நர்த்தனமிடும் பிருந்தாவனமும் சலங்கையும்
குலவிடும் வேய்ங்குழலும் குறும் சுருதியிடும்.
இலங்கிடும் சந்தத்தில் தத்தித்தை சதிராடும்.

14-6-2017

134.

கூடு கட்டி ஜோடி ஒன்னு

ஈடு கட்ட முடியாக் காதலில்
கூடு கட்டி ஜோடி ஒன்னு
காடு விட்டு நாடு வந்தது.
நாடு போற்ற வாழுங் கொள்ளையாசையில்

13-6-2017

135.

கேள்வி முறை

கேள்வி முறை தவறல்ல ஒரு
கேள்வி எழுந்தால் பதில் அவசியம்.
கேட்காதது பார்க்கததான நடிப்பு அநாகரீகம்.
கேவல நடத்தைகள் மனிதநேயம் அல்ல

21-3-2017

136.

38. குறுகிய வரிகள் 130,131,132 நற் கருத்து,காட்சி – நட்பு, கனாக் கண்டேன்

130.

நற் கருத்து

என்னென்று சொல்வேன்
முன்னின்று மின்னும்
உன்னின்று பாயும் வரிகள்.
கன்னலோ! கவிப்பின்னல்
என்னிலை மறந்தேன்.

எண்ண இனிக்கும் வரிகள்
வண்ணம் பின்னுது வளமாய்.
கிண்ணம் நிலைக்கும் மகிழ்வுடன்
விண்ணை முட்டும் நன்றிகள்.
இனிய வாழ்த்துடன்.

21-4-14.

131.

காட்சி – நட்பு.

கட்டும் அழகுக் கடலின் பின்னணியில்
பொட்டல் வெளியின் மதுர அழகு
கொட்டிய இலைகளால் எட்டிய அழகு
சட்டென மனம் கவருகிறதுஇ நன்றி!

மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாங்குகிறோம்.
உதிப்பது முகநூலில் மாமன் மச்சானுறவா!
மதிப்புடை நட்புத் தானே குதிக்குதிங்கு!!!!

24-4-14

132.

கனாக் கண்டேன்

முப்பது வருடங்கள் முன்னிருந்த மாதிரியாய்
அப்பாவும் அம்மாவுடன் அன்பாகவே ஆதரவாய்
இப்போது நிகழ்வதாய் உண்மைபோல மகிழ்வதாய்
தப்பில்லாக் கனவொன்று தங்கமாகக் கண்டேனின்று
எப்போதும் நினைத்திதை எழுச்சியாம் மனமாக்கும்.
தப்பில்லை கனவிலும் தணிவான உணர்வதே

12-5-2018

37. குறுகிய வரிகள் 127,128,129 நிறைய வாசியுங்கள்.- இலக்கணம் இலக்கிய- பழுத்து விழுந்தது

127.

நிறைய வாசியுங்கள்.

நிறைய வாசியுங்கள்.
உறையும் எண்ணங்கள்
கறையின்றிப் பாயும்.
குறையின்றி எழுதலாம்.

29-9-2013

128.

இலக்கணம் இலக்கிய

இலக்கணம் இலக்கிய மரபென்று
துலக்கமாய்த் தட்டி கட்டி
இலக்குத் தேடும் ஒரு
தலக்கமற்ற சாயத் தோற்றம்

(தலக்கம் – இழி செயல்)

2018

129.

36. குறுகிய வரிகள் 124,125,126 friendship day, வெல்லும் சாகசம், நோய்

124.

நட்பு நாள்

இன்ப நினைவுகள்,
அன்பு மயக்கங்கள்,
அன்னியமற்ற அன்பு,
அன்னத்தூவியின் இதம்,
மேன்மையான உறவு
இன்னணம் நிரப்புங்கள்
இக் குவளைகளை.

4-8-2019

125.

வெல்லும் சாகசம்

பாலுக்குள் சுவையாய்
பசியிலே உணவாய்
தாகத்தில் நீராய்
சோகத்தை வெல்லும்
சாகசம் காதல்.

13-8-2010

126.

நோய்

விரித்துச் சிந்தனை உருட்டுபவனும்
சிரித்துப் பெயர் பெறுபவனும்
சினந்து பெயரிழப்பவனுமாய்
வாய்வீரத்தால் ஆய் ஊய் என்று
நோய் கொண்ட மனதாய்
வெந்து உடைகிறான் மனிதன்.

8-9-2010

35. குறுகிய வரிகள் 121,122,123- மழை 1 -2- குளிர்கழி (ஐஸ்கிறீம்)

121.

மழை -1

கானமழை சாரலிட்டால் காசினியோர் குளிர்ந்திருப்பார்.
தானமழை பொழிந்திட்டால் தரித்திரர் மகிழ்ந்திருப்பார்.
மோனமழை நிலைத்திட்டால் முழுமுகம் அழகொளிரும்.
வானமழை பெய்துவிட்டால் மாநிலமே குதாகலிக்கும்.

10-5-2018

122.

மழை – 2

பாட்டில் எதுகை மோனையாய் வரைவாய்
சீட்டில் சுவையாய் அணியாய் இணைப்பாய்
ஏட்டில் வீணதாய் கோணலாய் எதற்காய்!
காட்டில் நிலவாய் கடலில் மழையாய்!

25-6-2018

123.

குளிர்களி – (ஐஸ்கிறீம்)

கொடிவகையில் அடங்கிய தர்பூசணி
கொடிய வெப்பம் குறைக்கும் தாக சஞ்சீவி
கொள்ளையாசையாய்க் குளிர்களியாக குழந்தைகளுண்பார்

13-3-2018