15. பாமாலிகை (எழுத்து – தொடர்) 15

எழுத்து. 15

நதியின் சில்லெனும் குளிர்மை தந்து
நதியின் மடியில் படியும் மணலாய்
பதிக்கும் எழுத்து வண்ணங்கள் உலகில்
மிதிக்கும் அநீதியை நிதமும் திடமாக
அதிமதுரமாய் உலகிற்கு அளவிலாப் பயனாய்
இதிகாச உயர்ச்சியில் இணைந்த விதமாய்
நதியாம் எழுத்தின் நீலக் குறிப்பு
துதிக்கும் ஒரு பளிங்கு நிலை.

நதியில் விழும் பிம்பமும்அல்ல
நதியில் விழும் இறகும் அல்ல
குதிக்கும் தமிழில்; குளித்து எழுந்து
பதிக்கும் நுண்ணிய தமிழ் முத்தம்.
உதிக்கும் எண்ண விதைகள் வரமேந்தி
மதித்துப் போற்றும் நம்பிக்கை நிறைத்து
நதியின் நீல நெளிவின் ஒக்கலையில்
முதிர் பாறையாய் அமர்வது எழுத்து.

உரைக்கும் எழுத்தாம் தமிழ் ஸ்பரிசம்
கரைக்கு வரும் அலையின் ஸ்பரிசம்.
நுரை நுரையாம் வெண்மைத் தமிழ்.
வரை வரையாகத் தினம் முத்திக்கிறது.
தரையில் எத்தனை எத்தனை இரசவாதம்.
இரையாக்குகிறது மனிதரின் பயனான நேரம்.
அரைக்கும் சந்தனமாய் மின்னும் ஒளிர்வாய்.
அரையிருள் முழுநிலவு என்று ஆகிறது.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்

நதியின் சில்லெனும் குளிர்மை தந்து
நதியின் மடியில் படியும் மணலாய்
பதிக்கும் எழுத்து வண்ணங்கள் உலகில்
மிதிக்கும் அநீதியை நிதமும் திடமாக
அதிமதுரமாய் உலகிற்கு அளவிலாப் பயனாய்
இதிகாச உயர்ச்சியில் இணைந்த விதமாய்
நதியாம் எழுத்தின் நீலக் குறிப்பு
துதிக்கும் ஒரு பளிங்கு நிலை.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 22-2-2022

எழுத்து. 15

91. பாமாலிகை (இயற்கை)131.

மன்மத மந்திரம்

ஊதுகுழற் சொண்டினால் ஒலிபெருக்கிப் பூவில்
சூதுவாதின்றிச் சுறுசுறுப்பாகக் காதோடு காதாகக்
கருத்தாகச்சேதி சொல்வதாகத் தேனினை உறிஞ்சும்
தீதில்லா மனங்கவர் அழகுக் குருவிகளே!
0

மயக்கியென்னை வசீகரிக்கும் சின்ன வண்ணக்குருவிகளே!
இயக்கமாய்ப் பூவுக்குப் பூ பரவும் மன்மத தந்திரம்
தயக்கமின்றி மென்னிதழில் மெதுவாயமரும் மந்திரம்
சுயமாக நீங்கள் பெற்றதா! அந்த அர்த்தநாரீசுவரர் தந்ததா!
0

வியக்கும் கத்தரி, பச்சை, மஞ்சள், பொன்னிறம் சிவப்பில்
பூவண்ண இறகின் வசீகரம் பூரிப்பாய்த் தேனெடுக்குமார்வம்
பாக்கள் புனை மனமுனிவை தாக்கமாக்கியது எனக்கும்
நயக்கப் பல மலர் தாவும் முறை மனிதனுக்கு நீங்கள் தந்ததா!
0

அழகிய குருவிகளே! நீங்கள் ஆண்டவன் ஆசி பெற்றவர்கள்
ஆனந்தராகமாய் ஆசையோடு அமர்ந்திடுங்களென் விரலில்
ஆராய்வோம் நீங்களா அன்றிஅழகு மலர்கள் அழகாவென்று!
பழகிய பட்சமான குருவிகளே! பயமின்றி வாருங்கள் இங்கு!

வேதா. இலங்காதிலகம் -டென்மார்க் – 20-2-2005.
(ரிஆர்ரி தமிழ் ஒளித் தொலைக்காட்சி முகப்பு பார்த்து ஏழுதிய கவிதை
ரிஆர்ரி வானொலி -தொலைக்காட்சியிலும் வந்தது )

88. 89. 90.photo poem

 88

குறிதவறுகிறதோ!
பெரியவரைக் கனம்பண்ணுதல்
உரியவரை மதித்தல்
அரியதை அறிதல்
பெரிய விடயங்கள்!
சிறியவருக்குச் சொல்லித் தருதல்
வறியதாகிப் போகிறதோ!
நெறியுடை முகாந்தரங்கள் (காரணங்கள்)
குறிதவறிப் போகிறதோ!!!!

மாசி-2021 வேதா

89

33. வெற்றி

மயக்கும் மாதவன்கள்

(ஆரணன்-பிரமன் – சிவன் – திருமால்_)
பேரர்கள் பின்னும் வாழ்வு
ஆரணம் (வேதம்) ஓதும் வாழ்வு.
ஆரணியமற்ற ஆரத்தி வாழ்வு.
ஆரணனான குமிண் சிரிப்பால்
00
கன்னக் கதுப்பு மின்ன
கருத்துக் கவரும் சின்னக்
கண்ணன்கள் எங்கள் தங்கங்கள்.
என்ன பொருளும் இணையாகுமோ!
00

இதழ்கள் சொல்கின்ற கவிதை
இதயம் கவரும் பாவிதை
இதுதானே மயக்கும் இன்பம்
இணைவதும் அறிவின் இனிமை.

வேதா. இலங்காதிலகம்..டென்மார்க் 19-2-2022

14. சோழா

மயக்கும் மாதவன்கள்

(ஆரணன்-பிரமன் – சிவன் – திருமால்_)

பேரர்கள் பின்னும் வாழ்வு
ஆரணம் (வேதம்) ஓதும் வாழ்வு.
ஆரணியமற்ற ஆரத்தி வாழ்வு.
ஆரணனான குமிண் சிரிப்பால்
00

கன்னக் கதுப்பு மின்ன
கருத்துக் கவரும் சின்னக்
கண்ணன்கள் எங்கள் தங்கங்கள்.
என்ன பொருளும் இணையாகுமோ!
00

இதழ்கள் சொல்கின்ற கவிதை
இதயம் கவரும் பாவிதை
இதுதானே மயக்கும் இன்பம்
இணைவதும் அறிவின் இனிமை.

வேதா. இலங்காதிலகம்..டென்மார்க் 19-2-2022

2. நான் பெற்ற பட்டங்கள்

கண்டாங்கிச் சேலைகட்டி கட்டழகாய் போறவளே!

சொண்டுச் சிவப்பழகு சுண்டி இழுக்குதடி
குண்டுமல்லி மணக்குதடி சண்டித்தனம் வேண்டாமடி
அண்டங் காக்கா கொண்டை நோக்க
இண்டிடுக்கில் ஒழிபவளே பண்புனது நாணமடி
உண்டியோடு வந்துள்ளேன் உண்டிடலாம் வந்திடடி
00

தண்டமிழ்த் தண்மையான கண்டாங்கிக் கட்டழகி
ஒண்டி வாழ்வு தண்டனைக் குரியதடி
திண்டாட விடாதே கெண்டியில் நீரெடு!
பண்டைக் கம்பங்கழி நண்டுக் கறியுண்டு
முண்டாசு கழற்றுகிறேன் முன்னாடி வந்திடுவாய்!


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க் 9-2-2022

90. பாமாலிகை (இயற்கை) 130. நீலவானம் ஒளிவதெங்கே!

நீலவானம் ஒளிவதெங்கே!

தொட்டுவிடும் தூரத்தில் வானமில்லை
பட்ட கண்கள் மனதிலேயே மாயம்.
காட்டிலே நீலவானம் ஒழிந்திருக்கும்
எட்டிடும் பச்சைவானில் இச்சையுடன்
மீட்டிடும் பறவைகள் காதல் மொழி
00

முகிலோ வானோடு விளையாடுது!
முகிலோடு வானமா விளையாடுது!
துயிலாது இரசிக்கலாமிக் கண்ணாமூச்சியை
00
சருகோடு புதைந்துள்ள விநோதங்கள்
அருவருப்பான அரவமும் மறைந்திருக்கும்
சருகு மரத்தின் சொத்தா!
அருகும் வனத்தின் சொத்தா!

00
இலை வேர் மண்ணிற்கும்
அலையுடை ஆறு குளத்திற்கும்
மலைப்பிரசவம் அருவிச் சாரல்
விலையற்ற கொடையாளப் பயணி.
00
கல்லெறியக் குளம் கலங்கும்
நில்லாது சுழிக் கோலமிடும்
இல்லை சலனம் என்றால்
நல் வட்டப் பளிங்குநிலா


வேதா. இலங்காதிலகம் – டென்மார்க். 10-2-2022