1. அங்கிங்கெனாதபடி…..(28)

 

முதலாவது வேதாவின் வலையில் ஆன்மிகம் 27 அங்கங்கள் எழுதியுள்ளேன்.
இங்கு தொடருகிறது… இது 28வது….

 

maxresdefault (3)

*

அங்கிங்கெனாதபடி…..

*

(ஒரு தடவை யெர்மன் ” பூவரசு”..இதழ் தந்த தலைப்பிற்கு எழுதிய கவிதை – 2004ல்)

அங்கிங்கெனாதபடி அண்ட சராசரமும்

தங்கித் துலங்கிடும் தங்க மயிலோனே முருகா!

பொங்கி விரவும் துணிவும்

மங்காது விரியும் புகழும்

தங்கிடும் பொருளும் உயர்வும்

கங்கையாய் என்னொடு கலக்க

மங்களமாய் அருள்வாய் இறைவா!

எங்கள் பரம்பொருளே முருகா!         (அங்கிங்கெனாதபடி)

பயமும் கவலையும் என்னுள்

சுயம்பு ஆகாது விலகிட

வியனுறு நம்பிக்கை உயர்ந்திட

பயனுறு நலம் பெருகிட

நயமுறு அறிவு வளர்ந்திட

நயம் தருவாய் முருகா!                   (அங்கிங்கெனாதபடி)

அன்பு, பண்பு உயர்ந்திட

இன்பம், திண்மை வளர்ந்திட

வன்மை வறுமை ஒழிந்திட

திருமிகு தாய்மண் இணைந்திட

திருப்தியாய் தமிழோடு வாழ்ந்திட

திருவருள் தருவாய் முருகா!.            (அங்கிங்கெனாதபடி)

*

(விரவும்- கல, பொருந்து. சுயம்பு – தானாக உண்டானது.

வியனுறு-சிறப்பு, வியப்புடை. திண்மை- வலிமை, உறுதி.)

*

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

12-12-2004

*

banner7

 

Advertisements

1. பாமாலிகை – இயற்கை (79)

 

 

 

10996105_10206068409014964_5120062262148234462_o

*

 

தூரத்துப் பச்சை

*

கிட்டாத ஆசையும் கையால்
எட்டவியலாததும் தூரத்துப் பச்சையே
நேரத்தின் முயற்சி பலனாகில்
தூரத்துப் பச்சை என்பதில்லை.
*
அக்கரைப் பச்சை என்பது
இக்கரைக்கு அழகு உண்மை.
அளவான ஆசை உத்தமம்
அருமையாய் நெருங்கும் ஆனந்தம்.
*
அழகு தம்பதிகள் பார்வைக்கு!
ஆழப் புகுந்து பேசினால்
அழுகையே மிகும் சிக்கல்கள்
அக்கரை பச்சையே தூரத்தில்.
*
வெளிநாட்டு வாழ்வும் ஒரு
களியாட்ட தூரத்துப் பச்சை.
கண்ணால் காண்பது பொய்யென்று
உள்நாட்டை முன்னேற்றி வாழ்!
*

பாமாலிகை – இயற்கையில் 78 பாக்கள் வேதாவின் முதலாவது வலையில் நிறைந்தது.
இங்கு 79 திலிருந்து தொடர்கிறேன்.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 26-6-2016
*
green

3. நான் பெற்ற பட்டங்கள் (10)

நான் பெற்ற விருதுகள் தொடர்ச்சி…..

*

(வேதாவின் வலை – யில் 7 பதிவுகள் 7 அங்கமாக இந்தத் தலைப்பில் உள்ளது. )    

*

நான் பெற்ற சாரல் குயில் பட்டம் தவற விடப் பட்டு நினைவு வர வலையேற்றுகிறேன்.
அதற்குரிய கவிதை சான்றிதழும் இங்கு.

*

1.  கவியூற்று
2.  கவினெழி
3.  கவியருவி
4.  கவிச்சிகரம்.
5.  சிந்தனைச் சிற்பி
6.  ஆறுமுகநாவலர் விருது.
7.  கவிமலை.
8.  கவிவேந்தர்.
9.  கவித்தாமரை
10.  கவித் திலகம்
11.  பைந்தமிழ் பாவலர் 
12.  கிராமியக் கவிஞர்
13.  சாரல் குயில

*

saral kujil-1

*

செந்தமிழ்ச் சாரல் – கிராமியக் கவிதை
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 22-4-2017

வீரம் விளைஞ்ச மண் இது தானே

*

வீரம் விளைஞ்ச மண்ணின் கதையின்
சாரம் கூறும் விவரங்கள் எம்மை
ஓரம் போகச் செய்யாது சிரமுயர்த்தி
தீரம் கொள்ளச் செய்திடும் உண்மை.

*

யாருக்கும் அடங்காத வீர குணம்
யாக்கையில் ஓடும் குருதியிலும் ஊறும்.
கோலெடுத்துச் சிலம்பாடி வளர்ந்து பின்
வேலெடுத்து வீரம் நாட்டினர் அன்று.

*

இலக்கு நோக்கிப் பயணம் சென்றால்
கலக்கி உயர்வாய்க் கவனச் செறிவில்
கனவேகம் மனவேகமாகி உறுதியான உடலும்
உனது இயக்கமாகி உலகை வெல்வாய்.

*

மகாபாரதப் போரும் தந்திரங்களும் இன்னும்
இராம இராவண யுத்தமும், தமழரின்
மரபுவழி வீர விளையாட்டு ஏறுதழுவலும்
வீரம் விளைந:த மண்ணின் வரலாறே.

*

சிந்துவெளி நாகரிகத் தொடக்கம் இது.
முந்தைய பெண் வீராங்கனை வேலுநாச்சியார்
பிரித்தானிய ஆட்சிக்கெதிராயெழுந்த இராணி இலட்சுமிபாய்
இந்திய விடுதலைப் போராளி கடலூர் அஞ்சலையம்மாவென
வீரம் விளைஞ்ச மண் இது தானே.

*

1457745k8p286od3g

6. நான் (501)

 

IMG_0140[1].jpg.ww.jpg-o

நான்

*

நான் ஒரு மனிதனின் நாண்.
நான் எனும் உணர்வற்றவன் வீண்.
நான் எது! நானிந்த உடல்
நான் யார்! நான் மனச்சாட்சி.
நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்
ஊன் தான் ஒரு மனிதன்.
நான் பிரமம் என்கிறான் வேதாந்தி
நான் பிரமம் என்பது யோகநிலை.

*

நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.
நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.
நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.
நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.
பெயர் அழைத்து யார் என்பது
துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.
நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது
செத்தை தான் நானற்ற பதிலானது.

*

நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.
நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்
மன்னிக்கும் மனம் கொண்ட நான்
மின்னிடும் சூரியக் கதிரான வான்.
நான் நீ சேர்ந்தால் காதல்
என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்
வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்
நான் நல்லவன் ஆவது திண்ணம்.

*

பா ஆக்கம்  பா வானதி

வேதா. இலங்காதிலகம்  டென்மார்க். 22-9-2015

*

 

1. விழிதாண்டும்_நினைக்கையிலே கண்ணதாசன் சான்றிதழ்(18)

 

vili thaandum- 18

*

கவியுலகப் பூஞ்சோலையின் 12-8-16 ஆம் நாளான போட்டி தலைப்பின் கவிதை #விழிதாண்டும்_நினைக்கையிலே# இன்றைய போட்டி கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்Vetha LangathilakamLangathilakamஅவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்  

#விழிதாண்டும்_நினைக்கையிலே#
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

*

கண்ணதாசன் சான்றிதழ் வெண்கலம் 
தலைப்பு:-
விழி தாண்டும்…. (ஆரம்பம்)
நினைக்கையிலே….(முடிவு)

*

விழி தாண்டும் காட்சியல்ல அதை
மொழிந்திட சொற்கள் இல்லை உண்மை
வழி நீண்டு விரியும் செழுமை.
மொழி தேடித் திணறும் நிலைமை.

*

இளம் பச்சை முதிர் பச்சையாய்
எழிலாய் நிமிர்ந்து வானம் பார்க்கும்
இலங்கைச் செல்வம் பசுமை தேசத்தை
எமக்காய் உயிலெழுதியது போன்ற நிலை.

*

என்னைக் கிள்ளேன் என்னைக் கிள்ளேனென்று
எல்லையற்றுக் கண் விரிவில் தெரிந்த
தேயிலைக் கொழுந்துப் பச்சை கண்களிற்குக்
களிப்பு மாலை சூட்டியது அற்புதம்.

*

பசுமைக் கானகம் வெளிச்ச வானப்பரப்பு
பள்ளம் மேடாய் மலைப்பாங்கு வனப்பு.
இதயத்தில் மழை பொழிய உள்ளே
முல்லை மொட்ட விழும் உணர்வு.

*

மேட்டில் வைக்கும் பொருளுருண்டு சரசரவெனப்
பள்ளத்தில் சேர்க்கும் தேயிலையின் மட்டமழகு.
இவ்வழகைச் செதுக்கும் பிரம்மாக்கள் வாழ்வு
அவலத்தில், வரிசைக் குடியிருப்பின் உள்ளே.

*

ஒரு அறையோடு ஒட்டிய மனை
முழுக் குடும்பமும் அதனுள் சயனம்.
அன்றிலிருந்து இன்று வரை போராட்டங்கள்.
அவர்களிற்கு விடிவென்பது இன்னும் இல்லை.

*

பூலோக சொர்க்கமான இம்மேதகு வாழ்வு
பூச்சிதறலாகப் பிரித்தது இனக் கலவரம்.
எண்ணும் தோறும் விழி தாண்டும் நீர்
என்னுயிர்க் காதலனும் அன்று அழிந்தான்.

*

முன்னூறு தொழிலாளருடன் அழகிய மலையில்
பதினேழு வருட வாழ்வின்றும் கனவிலும்.
இழுத்துப் போர்த்தினாலும் சோகம் சோகமே
இதயம் மறக்காத காதலதை நினைக்கையலே….

*

வேதாவின் வலை முதலாவதில் 16 கண்ணதாசன் சான்றிதழ் ஆக்கங்களும் 17 சான்றிதழ்களும் உள்ளது. அதன் தொடர்ச்சியே இது.
அந்த இணைப்பும் தருகிறேன்.

https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 12-8-2016

*

divider lines.jpg - A

5.   சிரியுங்கள்! (500. பா மாலிகை ( கதம்பம்)

 

mine13 055

சிரியுங்கள்!

*
 சிரியுங்கள்! சுய கவலையைச் சிரிப்பால்
பிரித்துத் தூர வீசுகிறீர்கள் நீங்கள்.
சிரிப்பு மனிதனுடன் கூடப் பிறந்தது.
சிரிப்பால் மனித முகத்துக் கவலைகளும்
உரித்தான நெஞ்சுத் தசைகளும் வலிமையாகிறது.
சிரிப்பால் முந்நூறு தசைகள் அசைகிறது.
அரிய நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
துரித இரத்த ஒட்டம் உருவாகிறது.
*
சிரிப்பெனும் உணர்வு வெளிப்பட்டால்
இனிதாகத் தரிக்கிறது உடலில் வேதியல் மாற்றம்.
கரிசனமாய் உடல் மனம் வலிமையாகிறது.
அரிக்கும் மலையாம் பிரச்சனைகள் பனியாகிறது.
சிரிப்பில் பல! சாகசச் சிரிப்பு,
சங்கீதச் சிரிப்பு, நையாண்டிச் சிரிப்பு,
அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு,
ஏளனச் சிரிப்பு புன்சிரிப்பு
*
:
 
சனங்கள் மட்டுமன்று சில மிருகங்களும்
மனமார அருத்தம் புரியாது சிரிக்கும்.
பொருந்தாத சிரிப்பை பெரும் மனநோயும்
பொருட்படுத்தாத சிரிப்பைப் போதைப்
பொருளுமருளும். கனம் தரும் முரண்பாட்டுச்
சிரிப்பு தனமாகும் வரவேற்பறை ஊழியர்
சிரிப்பென்று இனம் காட்டுவது விந்தை அல்ல.
வனமான வாழ்வை நந்தவனமாக்கச் சிரியுங்கள்!
*
பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 28-5-2016
*
divider lines.jpg - A

1. சான்றிதழ்கள் – எ – எழுத்து வரிகள்(15)

 

 

amirth - ena eluthu

*

 

*

– எ – எழுத்து வரிகள்

*

எங்கள் ஒற்றுமை இணைவு மாநிலத்தில்
எல்லையற்ற சாதனையை நிச்சயம் எட்டட்டும்.
எண்ணங்கள் உயர்ந்தால் செயலும் சிறக்கும்.
எள்ளளவும் பயமற்ற துணிவின் பயணமிது.

*

எது வரை போவோமென்பதில்லை வெல்லும்
எழுகளம். எள்ளுதலின்றி வாழ்தல் பிரதானம்.
எளிதல்ல ஏற்றம் காண முயன்றிடு.
எல்லவன் போன்று ஒளி பெறலாம்.

*

எல்லவன் – சூரியன்.
எழுகளம் – போர்களம்.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 9-5-2017.

*

சான்றிதழ்கள் தலைப்பில் 14 சான்றிதழ்கள் வேதாவின் வலை – கோவைக்கவியில் உண்டு.
இங்கு தொடருகிறது..  https://kovaikkavi.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

*

3. காதல் அழிவதில்லை (70)

loove

*

காதல் அழிவதில்லை

*

மைகொண்ட விழி மலர
மையல் கொண்ட மனமசைய
தையலே! உன் மொழியாலே
தைரியமே தினம் கைகாரியே!
*
கண்ணேந்தும் துயில் மறந்து
கருத்தேந்தி நிதம் நினைந்து
காதற் சாரல் தூவிடுதே!
காவிரியாகி மோதிடுதே!
*
வாலிபக் காதல் வசீகரத்தாலே
வயதில் வாசனை வீசுதே!
வாலாயமாகி விழுந்ததினாலே
காதல் போர்க்களமாகிறதே!
*
இளமை விருந்தால் வென்றிட
இதயம் தேடிப் போராடுதே.
இனியெதற்குப் போர்க்களம்!
இதய நிழலில் இளைப்பாறுவோம்!
*
பைந்தொடியே! உன் சுவாசத்தோடு
கையேந்தி நடை பயில்வோம்!
கைரேகை அழியும் வரை
வையகத்திலாடுவோம் பைங்கிளியே!
*
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 13-5-2016
*
(காதல் – தலைப்பில் 67 கவிதைகள் எனது முதல் வலையில் உண்டு)
*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

2. நான் பெற்ற பட்டங்கள் (9)

 

நான் பெற்ற விருதுகள் தொடர்ச்சி…..

*

(வேதாவின் வலை – யில் 7 பதிவுகள் 7 அங்கமாக இந்தத் தலைப்பில் உள்ளது. )    

இன்று 12-6-2017 ‘ கிராமியக் கவிஞர் ‘ விருது கிடைத்துள்ளது. தொடர்ந்து எழுதிய தலைப்புகாளல் கீழ் வரும் கவிதைக்கு இந்த விருது கிடைத்துள்ளது. மிக மகிழ்ச்சி இதோ பாருங்கள்.

*

nilamuttam - kiramiyam

*

1.  கவியூற்று
2.  கவினெழி
3.  கவியருவி
4.  கவிச்சிகரம்.
5.  சிந்தனைச் சிற்பி
6.  ஆறுமுகநாவலர் விருது.
7.  கவிமலை.
8.  கவிவேந்தர்.
9.  கவித்தாமரை
10.  கவித் திலகம்
11.  பைந்தமிழ் பாவலர் 

12.  கிராமியக் கவிஞர்

 

நாட்டுப்புறப் பாடல் 
தலைப்பு:- ஆவாரம் பூவே

*

ஆவாரம் பூவே! ஆசைக் கண்ணே!
பூவாரம் போட ஆசை பெண்ணே
காவாங்கரை (வாயக்காற் கரை)க்கு வருவாயா செண்டே
காவலாளியில்லா என் காட்டு மல்லிகையே
காதோரம் கூறுவேன் என் காதல்
தேவாரங்களை தேன் கதலிக் கனியே!

*

மச்சாளே! என் பாவாடைப் பூச்சரமே!
இச்சை அதிகமாச்சடி வாடி உன்னை
இழுத்தணைக்க வேண்டுமடி நேசக் குயிலே!
பழுத்த மாங்கனியே! எள்ளுருண்டை தானுனக்குப்
பாசமாய் நான் கொண்டு வருவேன்
எடுத்து ஊட்டி விளையாடுவோம் வாடி.

*

கொலுசு ஒன்று கேட்டாயே! ஆசையாய்க்
கொடுத்திட காத்திருக்கு என் கையிலே!
பவிசு காட்டாம வாடி புள்ளே!
பவித்திரமாய் உன்னை நான் காப்பேன்!
பச்சைப் புள்ளையல்ல நீ நல்ல
பருவக் குமரியடி பதமான பனாட்டே!

*

நேரம் கடத்தாம வேளைக்கு வந்திடு
நேச நெஞ்சு வாடுதல் நியாயமோடி!
நித்திரை குறையுதடி நின் காட்சி
நித்தமும் வேண்டுமடி! நாட்டுக் காதலானாலும்
நிறைகுடமடி என் காதல்! எனக்கு
நிழல் தர வாடியென் செல்லமே!

*

(பனாட்டு – பனங்கழியில் செய்யும் பதப்படுத்திய இனிப்பு)

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 29-5-2017.

 

No automatic alt text available.

 

 

4. செல்பி (தன்னைத் தானே புகைப் படம் எடுத்தல் (499)

 

aaaa

*

செல்பி (தன்னைத் தானே புகைப் படம் எடுத்தல்

*

செல்பி செல்பியென்று செல்பி எடுத்து
செல்லங்கள் படும்பாடு சொல்லில் அடங்காது.
அல்லி மலர் தமது வதனமது
நல்ல உரு என்றெம்மை வதைக்கிறார்.

*

நெருக்கக் காட்சியாய் படம் எடுத்து
நெருக்கடிக்கு ஆளாக்கி ரசிக்கச் சொல்வது
அருவருப்புத் தரும் அழகென்ற காட்சியது.
பொருத்தம் இல்லாச் செயல் இது.

*

நித்திரை வராது பலருக்கு ஒரு
முத்திரைச் செல்பி எடுக்காது இருப்பது.
சித்திரவதை செய்ய எதுவும் வேண்டாம்
அத்திரமாக ஒரு செல்பி போதும்.

*

அழகென்றால் வெளியிட்டு மகிழுங்களேன்! ஏன்
அவலட்சணமாக வலிப்பு வந்தவர் போன்ற
அபிநயங்கள்! புனைப்படக் கலையை இது
அவமதிப்பது பொன்று ஆகாதா சொல்லுங்கள்!

*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-6-2016

*

 

divider lines.jpg - A