12. எனது 4வது – 5வது நூல்கள்.

இது எனது முதலாவது நூல் விளம்பரம்.
முதலாவது வலையில் இது போட முடியாததால்
இங்கு ஏற்றியுள்ளேன்.

another>/

மனப்பாசி நீக்கும் வாசிப்பு
00
நூலகம்.ஓர்க் நுழைந்து
நூலாக்கியவள் நாமம் நாடி
நூதனமல்ல முதற் சொல்
அழுத்திடில் நூல்கள் ஏழு
வரிசையாகக் காண்பீர்கள்! இது

00
என் முதல் தளிர்
நன் முதல் நூல்
இன்னமுதமாய் இரண்டாயிரத்திரண்டில்
‘ வேதாவின் கவிதைகள் ‘ பக்கங்கள்
நூற்றி எழுபத்தி ஆறு

00
அறிமுகத் தோரணம் வேதா.
எஸ்.எஸ்.குகநாதன் ஈழநாடு
பாரிஸ் ரி.ஆர்.ரி. இயக்குனர்நாயகம் உரை.
அகில இலங்கை கம்பன்கழக
இ. யெயராஐ; உரை.
00

பல்சுவைக் கவிதைகள் உள்ளே
நல் விவரங்கள் ‘ வேதாவின் வலையில் ‘
கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம் ல்
புது அனுபவங்கள் வாசிப்பீர்கள்!!!!
வாசிப்பு நேசிப்பிற்கு உரியது!!!!
00

நிலாச்சுடர் . வேதா. இலங்காதிலகம்
டென்மார்க் – 15-9-2021
(கருத்து எழுத மறக்காதீர்கள்)

இது எனது இரண்டாவது நூல் விளம்பரம்.

இது எனது 3 – நூல் விளம்பரம்.

44. பா மாலிகை ( காதல்) 111. வா! வாலிபக் கடற்கரை பரந்தது….

வா! வாலிபக் கடற்கரை பரந்தது….

அழகு தமிழ் மெய்யமைந்த
பழகு தமிழ் இனியவளே
மழலை மனம் கொண்டென்னை
மனதிலிறுகப் பிணைந்தவளே
தனமே என் காதலியே!

உன் விழி நட்சத்திரச் சுடரில்
என் மன இறுக்கங்கள் இழகுகிறது
உன்னிமைத்திரை மூடும் போது
என்னிதயம் நீரிலிருந்து விலகிய மீனாகத்
தவிக்கிறதே இது தான் காதலா!

அஞ்சன மையிட்டு அசத்தும் விழியாளே!
அழகுவெள்ளம் தேங்கும் உலக பள்ளத்தில்
காதல் மதுவின் போதை போதுமடி
திராட்சை மதுவெனக்கு வேண்டாமடி.
திரண்டவென் எண்ணத்தில் எப்படி நீ வீழ்ந்தாய்!

நான் கவிதைக் கடலில் வீழ்ந்துவிட்டேன்
காதல் போர்வையின் சூட்டினில் நாம்!
கூதல் நாட்டுப்பனியிதைத் தடுக்காது அன்பே’
அலை கழுவிய ஈரநிலமாயென் நெஞ்சம்
உன் நினைவுஅலை தழுவிக் குளிராகிறது!

அதிலுன் காலடித் தடம் பதிக்க வா!
ஐதியிடுமென் நினைவுச் சலங்கையின்
சுதியில் ஒரு வலை பின்னி உன்னைக்
கைதியாக்கி மயக்குவேன் வா!
உன் கண்மையெடுத்து உண்மையாய்

என் காதலைக் கூறுவேன் வா! கண்ணே!
ஏன் ¸தலைகவிழ்கிறாய! எதை வீழ்த்தினாய்!
என் இதயத்தையன்றோ திருடிவிட்டாய்!
கரும் கத்திரிநிற வெல்வெட்டின் ஜிகினா
சருகை இழைகளன்றோ உன்நினைவுகள்

என் இதயத்தில் தினமும் மின்னுகிறது!
வா! வாலிபக் கடற்கரை பரந்தது.!
வயதெல்லை வரையறை இல்லாதது!
காதலில் வென்றோம் காதலிப்போம் வா!
புது ஆதாம் ஏவாள் போற் காதலிப்போம்வா!

30-2-2003
(ரிஆர்ரி தமிழ் அலை கவிதை நேரம் தீபன் நிகழ்விற்கு.)

74. பாமாலிகை (இயற்கை) 106 யானை

யானை
(அன்புள்ள முட்டாள் – யூரியூப் தலையங்கம்)

மானை அழகிற்கு உவமித்தால்
ஏனைய விலங்குகளில் உருவில்
யானை பெரிதென அறிவோம்.
சேனையும் நடுங்கும் உருவம்!
யானையால் என்றும் தெய்வம்
ஆனைமுகத்தான் நினைவு வரும்.

ஆனைகளிருபத்திரண்டு வகைகள், எஞ்சியது
ஆபிரிக்கப் புல்வெளி யானை,
ஆபிரிக்கக் காட்டு யானை,
ஆசிய யானை களனைத்தும் தாவர உண்ணிகள்.
ஆபிரிக்கயானைகள் உருவில் பெரியது.
ஆண் களிறு, பெண் பிடி.

எம்பெருமானே! நாற்பதாயிரம் தசைகளுடைய
தும்பிக்கை சிறந்த உறுப்பு.
நம்புங்கள்! நான்கு லிட்டர் நீர் கொள்ளும்
தும்பிக்கையால் சுவாசிக்கும்.
வாயினால் வாசனை அறிகிறது.
வாசனை நரம்புகள் இங்குள்ளது.

தந்தம் (பல்) கடைவாய்ப் பற்களின் நீட்சி
அந்தளவு விலையுயர்வால் உயிராபத்து
ஆசியப் பெண்யானைக்குத் தந்தமில்லை.
தந்தம் யானைக்கோடு, எயிறு
கர்ப்பகாலம் இருபத்திரண்டு மாதம்.
கன்று ஈனும், பாலூட்டுமினம்.

முன்னம் கால்களிடையில் பாற்சுரபியுண்டு.
புதிய பிரசவத்தால் மகிழுமினம்.
பிரமிப்பு! யானைக் கூட்டத்தின்
அரவணைப்பில் கன்று வளர்க்கப்படும்.
கன்றினெடை இருநாறு இறாத்தல்
மனிதக் குழந்தைகள் முப்பதிற்கிணை.

பிரத்தியேகமாக ஈனும் போதும்
பிரசவத்தின் முன்னும் பின்னும்
பிரதானமாக வளர்ந்த யானைகள்
பிரசன்னமாகி ஒருவருக்கொருவர் உதவுவர்.
பெரிய யானைகள் வாலைப் பிடித்துக்
குட்டி யானைகள் நடக்குமாம்.

பிறந்தவுடன் கன்றுக்குக் கண்பார்வை தெரியாது.
உறவுமுறையமைந்த சமூக உணர்வுடையது.
இறுதிவரை கட்டுக்கோப்புடன் வாழுகிறது.
இரண்டு – இருபத்தொன்பது வரை
இணைந்து குழுவாக வாழுமினம்.
எண்ணிக்கையதிகமானால் பிரிந்து வேறாவர்.

தேக வெப்பம் அடக்க
தன்மீது மண் வாரிப்போடும்.
காதுகளின் அசைப்பில் இரத்தம்
குளிராக்கி உடற்சூடு வெளியேற்றுகிறது.
இருநூறு லிட்டர் நீரருந்தும்.
நூறு முன்னூறு கிலோ உணவுண்ணும்.

குழுவில் முதிர் பெண்யானை வழிகாட்டி.
இறப்பில் குழுயானைகளுக்காக அழுகிறது.
பெண் யானைக்கு மதம் பிடிக்காது.
பதினான்கு வயதில் தொழிற் பயிற்சி.
நீந்தும் திறனுடையது.
தமக்குள் பேசிக் கொள்ளுமினம்

ஆனை தலைசிறந்த இயற்கையின் படைப்பு
பளுவான வேலைகள் இருபத்தைந்து
வயதின் பின்னர் செய்வன.
முப்பத்திரண்டு கி.மீ வேகத்திலோடும்
காடுகளை வளர்த்தாலெம் நண்பனாகும்.
நோயுற்ற யானைகள் ஒருவருக்கொருவருதவுவர்.

ஒரு கி.மீட்டருள்ளே நீருள்ள
இடமறியும் திறனுடைத்து. சுதந்திரம்
காட்டில், பாகனிடம் அடிமை
காடு வளர உதவும்
ஆலய அரசபணி செய்யும்.
யானைக்குத் தேனீ பிடிக்காது.

25-8-2020

( தாயும் பிள்ளையும் உள்ள இந்தப் படம்என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படத்திற்காகவேஇதை எழுதினேன். கூகிள் எனது கணனியில்முகப்பில் போட்ட படம்)

7. சோழா. (13) உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று

திருவாசகம் 19ம் பாடல் முதல் வரி போல சமூகத்திடம் (பாடசாலைக்கு) எங்கள் இரண்டாவது குட்டிச் செல்லம் சோழா 11-8-2020 சேர்க்கப் பட்டார்.
சோழாவின் பாடசாலை முதல் நாள் 11-8-2020

எம் கையிற் பிள்ளை
உமக்கே அடைக்கலமாம்
இரண்டு மூன்று மணியளவு
இணைப்பு பாடசாலையுடன்.

சோழாவின் அரிவரி வகுப்பு
சோதியாக ஆரம்பம், தனிமையில்லை
சோர்வில்லை. அண்ணா வெற்றி அருகிருந்தார்.
சோபனமாக (நன்னிமித்தமாக) அறிவுக் குத்துவிளக்கேற்றினார்.

இத்தரையாம் மேற்குலகில் உதித்தவர்
மத்தியாம் வயலில் காணமாட்டார்
கத்தரித் தோட்டத்து வெருளியை.
மொத்தமான கட்டிடக் காட்டினுள் படிப்பார்.

பனிமனிதன் செய்து வழுக்குவார்
இனிதான தமிழும் படிப்பார்
கனிவாய்க், கருத்தாய் உயருவார்
கல்வி இனிக்கட்டும் தேனாக.

புது நட்பு, புது அறிவு,
புத்கச் சுமை முதுகில்
புன்னகையோடு பெற்றவர் கவு
பத்திரமாகப் படித்து உயர்வாய் செல்லமே.

17-8-2020

21. தொலைத்தவை எத்தனையோ –

தொலைத்தவை எத்தனையோ தொடர் 5ல் வரும் –……. இது முதலாவது கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம்ல் (வேதாவின் வலை) யில் உள்ளது. இதன் பின் கோவைக்கோதை. வேட்பிரஸ்.கொம் அதாவது வேதாவின் வலை.2ல் இங்கு மற்றத் தொடர்கள் உள்ளது.
கதை நடந்த பாக்கியம் வாத்தியார் வீடு. மூத்தவர் பாக்கியம் ரீச்சர். நாவலர் பாடசாலையில் படிப்பித்தார். என்
அப்பா சிறு சிறு வேலைகள் செய்தாலும் தந்தையின் தொழில் என்ன என்றால் கமக்காரன் என்றே எழுதும்படி கூறுவார். இதனால் தான் ஸ்கொலர்ஷிப் சோதனை என்னால் எடுக்க முடிந்தது. இது பாக்கியம் ரீச்சர் செய்வித்தார். அதனால் எனக்கு 3 வருட விடுதி வாழ்வு அனுபவமும் கிடைத்தது.
தங்கை தங்கம் தங்கக்கா என்று அழைப்போம். இருவரும் காலமாகிவிட்டனர். பாடசாலை முடிய வீடு வந்து பின்பு இவர்களிடம் படிக்கப் போவோம். இவர்களது படத்தை பெற்றுக் கொள்ள இவ்வளவு காலம் எடுத்தது. அதாவது நான் படம்
கேட்ட நபர்கள் சரியானவர்களாக ஒரு வேளை அமையவில்லையோ தெரியவில்லை. இங்கு சேலை உடுத்திருப்பவர் பாக்கியம் ரீச்சர். மற்றவர் தங்கக்கா.

வகை:பாமாலிகை இயற்கை 73.105. விழிமூடித் தலை சாய்கையில்

விழிமூடித் தலை சாய்கையில்

வழி நெடுகத் தோப்பு
அழி மொய்க்கும் மலர்கள்
எழில் பொங்கும் அன்புக்கணை
ஒழிந்திடாத உன் முகமும்
செழித்த இன்பம் தருகிறது.

காற்றுத் தென்றலென ஆகியதால்
ஆற்றுவெளியான அமைதி,
கீற்றென மின்னலிடும் அன்பால்
ஊற்றாக உள்ளம் துள்ள
தோற்காத நிறைகாதல் உயிர்ப்பாகிறது.

காற்றில் ஊஞ்சலாடும் இலைகளில்
தோற்றும் முத்த உரசலில்
ஆற்றலுடை சூரியக் காசுகளின் கிசுகிசுப்பில்
அற்புதக் கலகலப்புக் குருவிகளாலே
விற்பன்ன இயற்கை வியப்பிலே!

வானமெனும் நீல விதானமும்
மோனமாய்ப் பிரதிபலிக்கும் கடலும்
தானமாய்த் தரும் இன்பம்
மன ஏக்கமும் வாதையையும்
கனதூரம் ஓடவைக்குமியற்கை இயல்பு

பச்சையம் தரும் பரிதி ஒளியே
இச்சையுடன் பரவசமாய் இதமுடன்
உச்சமான கோடை தந்து
உயிரினங்களை மகிழ்விக்கும் காலநிலையே…
உயிரை வருடும் இன்பமே

28-7-2020

வகை:பாமாலிகை இயற்கை 72.149. பரதக் கால்களும் கவிதைக் கைகளும்.

பரதக் கால்களும் கவிதைக் கைகளும்.

(அரவாபரணனின் ஆதித் தீ – சிவதாண்டவம். நடனத்தின் ஆதி உருவகம் என்பது கதை)

பரதமும் கவிதையும் பக்தி யோகம்
வரப்பிரசாதம், பரவசக் கலைச் சிறகுகள்
பரதத்திற்கு வரிகளும், கவிதைக்குப் பரதமும்
உரமூட்டும் உணர்வின் வண்ணமயத் தொன்மை.
அரவாபரணனின் ஆதித் தீயின் பரவல்
பரதமாய் உருவகமாகிக் கவிதையோடு இணைந்தது.

கண்களும், கால்களும், உடலோடு கலந்து
பண்ணுடன் ஐம்புலன்களுக்கும் மின்சாரம் பாய்ச்சுது.
எண்ணற்ற கருவிகளுடன் கவிதைகள் கைககளாலே
உண்மையாய்ப் பரதம் கூட்டுறவு கொள்கிறது.
விண்ணப்பமாகும் கைச்சாடையும், முகக்குறியும் பரதத்தின்
வண்ணமய வாழ்வியக்கச் சாதனம் அன்றும்.

12-4-2020

வகை:பாமாலிகை இயற்கை 71.148. இளஞ்சிவப்பு மொழி – செந்தூர கங்கை

இளஞ்சிவப்பு மொழி – செந்தூர கங்கை

மலர் விரியும் சுகந்த ஓசைகள்
மௌன இராகங்கள் ஆயினும் ஒரு
மதுர சூழல் அழகு இளஞ்சிவப்பில்!
மகரந்தமேந்தும் வண்டுகள் ரீங்காரம் மறுபுறம்

பறவைகளும் மயங்கும் செவ்வானம் அழகா
பங்கஐ மலர்கள் அழகா! மனம்
பசும்பொன் ஒளியின் இயற்கை மிளிர்வில்
பரவச சமிக்ஞை தோடம்ப
ழநிற மொழியில்

செந்தூர நதியில் சிலிர்க்கும் மலர்கள்
மந்தாரமற்ற வான விதானத்தின் கீழ்
சுநதரத் தேவலோகத் தடாகமோ கங்கையோ!
சந்திர ஊர்வலச் சஞ்சார நேரமோ!

இளஞ்சிவப்பு மலர் நடைபாதையோ!
வளம் குறைந்த மனிதனால் வக்கிரமாய்
களன்றிடும் மானுட அனல் மொழிகள்
சுளன்று மலர்களைக் கருக வைக்குமோ!

7-11-2019

(அன்புடன் நிறைந்த மகிழ்ச்சி.தங்கள் பிரசுரத்திற்கு…
இறை ஆசி நிறையட்டும்.Thank you.)