32. பாமாலிகை – (தமிழ்மொழி)79.சிங்கநாதத்துடன் சிம்மாசனம்.

சிங்கநாதத்துடன் சிம்மாசனம்
00

( சிகண்டமாக-மயில்தோகை. சிங்கநாதம்- ஊதுகொம்பு)
00
தமிழமுதமென் ஊனுக்கு உயிர்
தமிழமுதமென் உயிருக்கு மது
அமிழ விடாது உயர்த்து
தமிழை என்றால் எள்ளுகிறார்.
00
சிக்கலோ அகங்காரமின்றிச் சிலுசிலுப்பாக
சிகண்டமாக என்னுள் சிக்கென
சிங்கநாதத்துடன் அமைத்தது சிங்காசனம்.
சிங்காரமாயின்று கவியேறுகிறது சிகரம்.
00
கவியரசி எந்நாளும் கருத்தில்
அவிட்டமாய் வானில் நாளும்
கவினுடன் மானுடரை ஈர்க்கும்
கவிநட்சத்திரமாய் நிலைக்கும் காதல்.
00
அகலமாக்கி விரிவாக்கி ஆழமாக
அறிவை நீளமாக்கி மையப்பொருளை
அடுக்கடுக்காய்ப் பல பரிமாணங்களிலும்
அழகாய்க் கவி அளிக்குமாசை.
00
மயில் நடனமாடும் முகிலாக
மழை இடி மின்னலாக
மாற்று உணர்வு மகிழ்ந்தளிக்கத்
தோற்றுவிடத் தேவையில்லை
00
எந்த வயதில் சிந்தாடியது
சுந்தரக் கவிதை வந்தாடியது!
மந்திரக் கவிதையா! மயிலிறகா!
மனதில் எழுந்த மாயக்குரலா!
00
வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 29-9-2021