36. சான்றிதழ்கள் – கவிதைகள் (46.விடியல்களை நோக்கி )  


sanka17-2-17

*

விடியல்களை நோக்கி 

*

பெரு நம்பிக்கையில் காலூன்றும் எத்தனம்
ஒரு விடியலுக்காய் வெளிக்கும் கீழ்வானம்.
சுருளலை உருள்வின் பிரம்மப் பிரயத்தனம்
ஒரு விடியல் முயற்சியின் பூரண இலக்கணம்.

*

உருவாகும் ஒரு விடியலின் தேடல்
கருவாகும் கனவு விதையினால் கூடும்.
ஆனந்த விடியலைத் தேடிடும் எதிர்பார்ப்பு
ஆழ்ந்த துயிலினால் கூடும் அமைதிப்பூ

*

ஆகாய மழைத் துளிக்கு ஏங்கும் தவிப்பு
ஆட்படும் விளைநிலத்து விடியலின் காத்திருப்பு.
ஓட்டினைச் சன்னமாய் உடைக்கும் தவிப்பு
முட்டையுள் குஞ்சு விடியலிற்கு உயிர்ப்பு.

*

வான்கடலில் சந்திரனிற்கு விடியல் தேவையில்லை.
அவன் மந்திர விடியலே கருக்கிருட்டு வேளை.
விண்ணிலே நட்சத்திரங்கள் விடியலைத் தேடி
கண் சிமிட்டி ஓடாது வான் தடாகத்தில்

*

இன்னும் மேலும் ஓயாது தேடு
நன்னெறி காத்து நாளும் ஓடு
உன்னைச் சுற்றியொரு ஒளி வட்டமியற்கையில்
பின்னுமுன் முயற்சியே பெருமாக்கம் விடியலுக்கு.

*

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 16-2-2017

sunburst

2 thoughts on “36. சான்றிதழ்கள் – கவிதைகள் (46.விடியல்களை நோக்கி )  

  1. கவிச்சிகரம் அமுதன் தமிழ்நாடு :- வான்கடலில் சந்திரனிற்கு விடியல் தேவையில்லை.
    அவன் மந்திர விடியலே கருக்கிருட்டு வேளை.
    விண்ணிலே நட்சத்திரங்கள் விடியலைத் தேடி…See more
    2017
    Photo comment – ATUMAI….
    Vetha Langathilakam:- A Muthu Vijayan Kalpakkam மகிழ்ச்சி….இதுவே சான்றிதழ்….
    மிக்க நன்றி சகோதரா…

    Like

பின்னூட்டமொன்றை இடுக