3. காதலர் தினம் (70)

loove

*

காலம் காலமாய்க் காதல் விழுது
ஆலம் விழுதாய் மனதிலூன்றட்டும்
நீலம் பாரிக்க ஒருவரையொருவர்
கோலச் சித்திரவதைப்பு அழியட்டும்

நாலும் தெரிந்தவர் தாங்களென்று
கோலம் கொண்டு தாம் சீலர்களென்று
பெண்ணை அவமதிக்கும் பெருங்குடியாளரும்
எண்ணத்தில் திருந்தட்டும் காதலர் தினத்தில்

காதலர் தினம் கனவு மெய்ப்படும் பூவனம்
நோதலின்றி நெஞ்சு கொஞ்சும் சொர்க்கவனம்.
ஆதலினால் கையாளுங்கள் ஆசைக்காதலை
பூதலத்தில் அன்புக்காய் உயிரளிப்பாள் பெண்.

(பதிவுகள்இணையத் தளம் ரிஆர்ரி தமிழ் அலை – இலண்டன் தமிழ் வானொலிகளில் வெளியானது)

காதலில் ஈதல் எடுத்தல் வேதனம்
மோதல் வாதிடல் வன்முறை வருமானம்
நோதலற்ற காலுக்காய் மனிதர் உதிக்கட்டும்.
அல்லாதார் கருவறையில் உதிக்னாமலே போகட்டும்.
தீதில்லாக் காதலே அதியுயர் ஆதனம்
*

காதலர் தினம்

நெஞ்சு நிறைக்கும் காதலர் நாள்
கொஞ்சம் அதிகம் நினைக்கும் நாள்
கன்னியர் காரளயர் காதலில் வீழ்ந்தவர்
களிக்கின்ற திருநாள், காதலர் திருநாள்.
ழழ
கண்களில் முதல் வீழ்ந்து பின்
கருத்தினில் ஆழ வீழ்ந்துணு மென்
கால ஓட்டத்தில் காதலாய் மலர்ந்து
கனிகின்ற காதலின், காதலர் திருநாள்
00
மனம் நிறையகாதல் பூக்கள்
மனம் மகிழ கரத்தில் பூக்கள்
வாழ்நாள் எல்லாம் களிப்புகள்
வழிநடக்குமென இந்நாள்
00
முதலீடு அன்பு காதல் முதலீடு
பதிவேடு ஒவ்வோர் வருடக் காதல் பதிவேடு
உறவாடி அதிகம் நினைக்கும் நாள்
நெஞ்சு நிறைக்கும் காதலர் நாள்.
00
(12-2-2002 ரிஆர்ரி வானொலி வணக்கம் தமிழ் அலை பெண்ணின் குரல்- நிகழ்வில் வாசிக்கப் பட்டது)

00

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க். 13-5-2016
*
(காதல் – தலைப்பில் 67 கவிதைகள் எனது முதல் வலையில் உண்டு)
*
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

4 thoughts on “3. காதலர் தினம் (70)

  1. Rajagopal Sundaram:- அருமை வரிகள்.
    13-5.2016

    Vetha Langathilakam :- Mikka nanry. Makilvu sako..

    கரூர்பூபகீதன் :- மிக அற்புதம் சகோ!

    Vetha Langathilakam:- Dear….கரூர்பூபகீதன் Mikka nanry. Makilvu sako..
    Like · Reply · 1 3-5-16

    Kanagarathinam Sellamuthu :- அருமை! காதலின் பெருமை!!
    Unlike · Reply · 13-5-16

    Vetha Langathilakam :- Kanagarathinam Sellamuthu …sako…….Mikka nanry. Makilvu

    Jagannathan Jagan :- கைரேகை அழிந்தாலும்
    காதல் அழியாது

    Ramnath Gandhi :- அழகிய வரிகள்.
    15 June 2016 at 10:51

    Like

  2. Vetha Langathilakam :- Ramnath Gandhi Anpudan nanry..- Makilchchy sako.

    Anbu Karasi :- கைரேகையும் அழியாது காதலும் அழியாது
    13-5-16

    Vetha Langathilakam :- Anbu Karasi Anpudan nanry..- Makilchchy sis….
    · 15 June 2016 at 10:53

    Yousuf MOhamed :- ஆகா! அருமை!!
    காதல் ரசமருந்தி பாடல்வரிகள்
    தேனின் சுவைமிகு சுகந்த வரிகள்!
    y ·20-6-2016

    Vetha Langathilakam :- தங்கள் ரசனைக்கு மிக நன்றி.
    மகிழ்ச்சி. கருத்தெழுத ஏன் தான்
    பின்னிற்கிறார்களோ தெரியவில்லை.
    என்பயணம் தொடரும்.
    · 20-6-16

    Like

பின்னூட்டமொன்றை இடுக